திராவிட இயக்க வரலாறு – கருணாநிதி முதல் கலைஞர் வரை


DMK_2-500x500_0

திராவிட இயக்க வரலாறு கருணாநிதி முதல் கலைஞர் வரை, ஆர். முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், ரூ 210

திராவிட அரசியல் என்றவுடன் இன்று பல இளைய தலைமுறையினர் அசூயை அடைகின்றனர். குறிப்பாக பல பொய்யான / பாதி உண்மையான / ஒரு பக்க சார்பான தகவல்களே முக நூல் போன்ற ஊடகங்களில் பகிரப்படுகின்றன. பத்திரிகைகள் பற்றி பேச விரும்பவில்லை. அந்த வகையில் இந்த நூல் ஒருகோட்டுச் சித்திரத்தை வரைகின்றது. மிக எளிமையான நடை. கிட்டத்தட்ட தினத்தந்தி நடை. தினத்தந்தியின் வரலாற்று சுவடுகள் நூலில் கூறப்பட்ட தகவல்கள், கொஞ்சம் கூடக்குறைய வருகின்றன. யார் தமிழகத்தின் இந்தக் காலகட்டத்தை எழுதினாலும் இதைத்தான் சொல்லமுடியும். மொத்தமாக மூன்று நாளில் படித்து முடித்துவிடக்கூடிய புத்தகம்தான் – என்றாலும் நம்மை சில இடங்கள் நிதானமாக யோசிக்க வைக்கின்றன. (more…)

தமிழக அரசியல் (2ம் பாகம்)

kjp044

தமிழக அரசியல் வரலாறு (2 பாகங்கள்), கிழக்கு பதிப்பகம், ஆர்.முத்துக்குமார்.

தமிழக அரசியல் வரலாற்றை இரண்டு பாகங்களாக எழுதியிருக்கிறார் ஆர். முத்துக்குமார். முதல் பாகம் சுதந்தரம் முதல் எமர்ஜென்சி வரையான வரலாற்றையும், இரண்டாம் பாகம் எம். ஜி. ஆர் ஆட்சி முதல் 2000ஆம் ஆண்டு வரையான வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறார். இங்கு இந்நூலின் இரன்டாம் பாகம் குறித்துப் பார்க்கலாம். (more…)

சொர்ண ரேகை

19484046

சொர்ண ரேகை, இந்திரா சௌந்தர்ராஜன், திருமகள் நிலையம், ரூ 90

எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜனுக்கு அறிமுகம் தேவையில்லை. சன் டி.வி.யில் ஒளிபரப்பான `மர்ம தேசம்’ மூலம் அவருடைய எழுத்துக்கள் எனக்கு அறிமுகமானது. நீண்ட காலத்திற்குப் பிறகு, இப்போது `மதிப்புரை’க்காக அவரது இரு (குறு) நாவல்கள் – `சொர்ணரேகை’, `வைரம், வைரம், வைரம்’ அடங்கிய `சொர்ணரேகை’ என்கிற தலைப்பிலான புத்தகத்தைப் படித்தேன். (more…)

தமிழக அரசியல் வரலாறு

kjp044

தமிழக அரசியல் வரலாறு, (2 பாகங்கள்), ஆர்.முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், ரூ 600

தமிழக அரசியல் கட்சிகளின் வரலாற்றை இரண்டு பாகங்களாக ஆர். முத்துக்குமார் பதிவு செய்திருக்கும் புத்தகம்தான் ‘தமிழக அரசியல் வரலாறு’. பெரியார், எம். ஜி. ஆர் போன்றவர்களது வாழ்க்கை வரலாறுகள் மொழிப்போர், திராவிட இயக்க வரலாறு என்று தமிழக அரசியல் வரலாற்றோடுத் தொடர்புடைய சில புத்தகங்களை எழுதியிருப்பதால் அவர் எடுத்துக் கொண்டத் தலைப்போடு மிகுந்த பரிச்சயமானவர். (more…)

நவீன இந்தியாவின் சிற்பிகள்

நவீன இந்தியாவின் சிற்பிகள், ராமச்சந்திர குஹா, கிழக்கு பதிப்பகம், ரூ 400

அருமையான புத்தகம் ஆனால் இன்னும் சிறப்பான புத்தகமாக வந்திருக்க வேண்டியது. புத்தகம் இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. வரலாற்று காலகட்டத்தில் நடந்த விசயங்களை ஆவணங்களாக நாம் படித்து தெரிந்துகொள்ள வாய்ப்பு இருந்தாலும் அவற்றைத் தனித்தனியான விசயங்களாகவே தெரிந்துகொள்ள முடியும் அம்பேத்கர் அவர்களுடைய காலகட்டத்தை நாம் தெரிந்துகொள்ள நாம் படிக்கும் புத்தகத்தில் பெரும்பாலும் அவரின் வாதமே அதிகமாக இருக்குமே தவிர அவரின் எதிர்த்தரப்பு வாதத்தை நாம் தெரிந்துகொள்ள மற்றொரு புத்தகத்தைப் படிக்க வேண்டியிருக்கும். (more…)

பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும்

பேய்க்கதைகளும் தேவதைக் கதைகளும், ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம், ரூ 125

இப்புத்தகம் பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. எழுத்தாளர் ஜெயமோகன் அமானுஷ்யம் என்னும் எல்லையையும் தாண்டி மனிதனுள் இருக்கும் துரோகம், பெருங்காமம், குற்ற உணர்ச்சி போன்ற உணர்வுகளை மிக நுட்பமாகக் கையாண்டிருக்கிறார். மருத்துவம் என்ன செய்வதென்று யோசித்து, அதை ஆராய்ந்து, அதற்கு அவர்கள் மொழியில் அவர்கள் சொல்லும் தீர்வுகளையும் சேர்த்து நாம் பார்த்தால், சாதாரண மனிதர்களுக்கு அது அலுப்பையே தருகிறது. ஆனால் அதையே புனைவாக்கி நமக்குக் கொடுத்தால், அது நிறைய நமக்கு உள்ளீடுகளையும், மதிப்புகளையும் புகுத்துகின்றன. (more…)

பாலித்தீவு – இந்துத் தொன்மங்களை நோக்கி…

பாலித்தீவு – இந்துத் தொன்மங்களை நோக்கி, கானா பிரபா, ரூ 150

ஈழத் தமிழரான கானா பிரபா ஆஸ்திரேலியாவில் வசிப்பவர். அவரது பயண அனுபவமே பல கட்டுரைகளாக இச்சிறு புத்தகத்தில் விரிகிறது. பொதுவாக நல்லதொரு பயணக்கட்டுரை தொகுப்பு தமிழில் வருவது மிக குறைவு என்பது ஒரு குறையாகதான் இருந்து வருகிறது. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பன்னிரண்டு தொடர் உலா கட்டுரைகள், இந்தோனேசியா என்ற நாட்டில் இருக்கும், பழைய இந்து கலாச்சாரங்கள் மற்றும் தொன்மங்களால் நிறைந்திருக்கும் அழகிய தீவான பாலியை பற்றியவை. (more…)

Categories