சங்பரிவார் (நேற்று – இன்று – நாளை)

சங்பரிவார் (நேற்று – இன்று – நாளை), முஹம்மது தாஹா, இலக்கியச் சோலை, ரூ 110

வரலாற்று முகங்களைத் திருப்பிப்பார்க்கும்போது அங்கு உண்மைகளின் இனிய அனுபவத் தரிசனங்களையும் வலியுடன் கடந்து வந்த பயணங்களையும் அதற்குறிய ஆதாரங்கள் முழுமையையும் நூலாசிரியரின் பார்வையில் எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். காரணம் வரலாற்றுச் சம்பவக் காலங்கள் அன்றைய சூழ்நிலையை மையப்படுத்திப் பின்னோக்கிப் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்குறியது. அன்று நடந்ததை இன்றைய கோணத்தில் பார்க்கும்போது அவை வலிமையற்ற உண்மைகளாகத் தென்படலாம். இரண்டாம் பதிப்பாக வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தில், M. K. A. முஹம்மது தாஹா இந்திய இஸ்லாமிய மக்களின் சூழ்நிலையையும் அவர்களுக்கு எதிரான சூழலையும் மையமாக வைத்து அழுத்தமான குரலைப் பதிவு செய்து இருக்கிறார். நூலைக் (183 பக்கம் – பிற்சேர்கையுடன்) கையில் எடுத்தால் கிழே வைக்க முடியாத அளவுக்கு ஒரே ஓங்கிய குரலாகப் பதிவு செய்து இருக்கிறார். (more…)

மருந்தில்லா மருத்துவம்

மருந்தில்லா மருத்துவம், டாக்டர் பி.எஸ்.லலிதா, மயிலை முத்துக்கள் பதிப்பகம், ரூ 150

இணை பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்று அக்குபஞ்சர் துறையில் முதுகலைப்பட்டம் பெற்று மருத்துவப்பணி ஆற்றிவரும் திருமதி பி.எஸ். லலிதா எழுதிய நூல். தன்வந்திரி அவார்ட், வைத்திய பூஷன் போன்ற விருதுகள் பெற்றது மட்டுமின்றி பல சமுக சேவைகள் செய்து பல நூல்கள் எழுதியுள்ளார். (more…)

ஓ பக்கங்கள் 2014

ஓ பக்கங்கள் 2014, ஞாநி, அகரம் வெளியீடு, ரூ 180

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதே ஒரு சிறையில் இருந்து இன்னொரு சிறைக்குச் செல்கிறார் என எழுதிய ஞாநி, விடுதலையே ஆன பின்னர் ஜெயலலிதா வழக்கு பற்றி இனிமேல் ஓ பக்கங்களில் படிக்க முடியாதபடி, முன்னுரையாக ஒரு முடிவுரை எழுதிவிட்டே ஆரம்பிக்கிறார். இது தான் ஓ பக்கங்கள் பத்தியில் கடைசி புத்தகம். 2005 ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் பத்திரிக்கை மூலம் ஆரம்பித்த இந்தப் பயணம், 2014 ஆம் ஆண்டு கல்கி இதழின் மார்ச் மாத பதிப்புடன் முடிந்துள்ளது. (more…)

நலம் தரும் வைட்டமின்கள்

நலம் தரும் வைட்டமின்கள், என்.சொக்கன், நலம் வெளியிடு, ரூ 185

மருத்துவம், உணவுக் குறிப்புகள் பற்றிய நூல்கள் என்றால் அவற்றுக்கென சில நியதிகள் இருக்கும். பக்கம் பக்கமாக வெறும் குறிப்புகளும், இப்படிச் செய் அப்படிச் செய், இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என ஒரே அறிவுரை மாயமாக இருக்கும். இரண்டு பக்கம் வரவேண்டியவை இருபது பக்கம் இருக்கும். அதைப் படித்தபின் தூக்கிபோட்டுவிடவேண்டும், முயற்சித்து பார்க்க கூடாது. ஆனால் இந்த விதிகளை உடைத்துள்ளது இந்தப் புத்தகம். (more…)

கறுப்புப் பணம்

கறுப்புப் பணம், ரமணன், கிழக்கு பதிப்பகம், ரூ 80

கறுப்புப் பணம் புத்தகத்தின் அட்டையில் புத்தகத்தின் பெயரை பெரிய எழுத்தில் சிவப்பில் வடிவமைத்துள்ளனர். கறுப்புப் பணம் என்பது பழைய சொற்றொடர். அதனை மாற்றி சிவப்புப் பணம் என்றே இனி சொல்லலாம். (more…)

சிநேகமுள்ள சிங்கம்

சிநேகமுள்ள சிங்கம், பாலகுமாரன், திருமகள் நிலையம், ரூ 95

தலைப்பை வைத்து கதையை படிக்கவைப்பது ஒரு கலையே. சிநேகமுள்ள சிங்கம். சிங்கம் எப்படி சிநேகமுள்ளதாக இருக்கும். அப்படியானால் அது நாய்தானே. சிங்கமாகவே இருந்தாலும் அதனிடம் நாம் எப்படி சிநேகமாக இருக்க முடியும்? தலைப்பில் எத்தனை கேள்விகளை யோசிக்க வைக்கிறார் பாலகுமாரன். (more…)

நூற்றியெட்டு ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்கள்

நூற்றியெட்டு ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்கள், வேணு சீனிவாசன், கிழக்கு பதிப்பகம், ரூ 400

இந்த நூல் உங்கள் கையில் கிடைப்பது கடவுளின் அருள் என்றே உணரவேண்டும். “ அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி” என்பார் மாணிக்கவாசகர். முதலில் இந்த புத்தகத்தை ஒரு ஆன்மீக நூலாகவே எல்லோரும் பார்ப்பார்கள். ஆனால் இதை ஒரு சிறந்த பயணக் கையேடாக உபயோகபடுத்தலாம். (more…)

Categories