Home » Articles posted by writermahadevan

Author Archives: writermahadevan

இலங்கை : பிளந்து கிடக்கும் தீவு

978-93-8414-902-4_b-01

இலங்கை : பிளந்து கிடக்கும் தீவு
(திஸ் டிவைடட் ஐலண்ட் – சமந்த் சுப்ரமணியன்,
தமிழில் ஜவர்லால், கிழக்கு பதிப்பக வெளியீடு
பக் 200; விலை 160)

ஸ்ரீலங்காவில் நடந்த உள்நாட்டுப் போர் தொடர்பான செய்திகளை ஒரு பயண நாவல் வடிவில் தொகுத்திருக்கிறார் ஆசிரியர் சமந்த் சுப்ரமணியன். ஸ்ரீலங்கா ஏதோ தங்கம் கொட்டிக் கிடக்கும் தீவுபோலவும், முதலில் கால் வைத்தவர் யாரோ அவருக்குத்தான் எல்லாமும் சொந்தம் என்பதுபோலவும் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நடந்து வந்த போர்களைச் சித்திரித்திருக்கிறார். மகாவம்ச காலத்தில் இருந்தே ஆரம்பமாகிவிட்ட போர் அது. சம காலத்தில் ஆல்ஃப்ரெட் துரையப்பாவின் உடலில் பாய்ந்த பிரபாகரனின் முதல் துப்பாக்கி குண்டில் ஆரம்பித்து 2009 கோடைக்காலத்தில் பிரபாகரன் அதேபோன்ற இன்னொரு துப்பாக்கியால் படுகொலை செய்யப்பட்டதுடன் முடிவுக்கு வந்த இன்றைய உள்நாட்டுப் போரை கனக்கும் இதயத்துடன் விவரித்திருக்கிறார்.

(more…)

வெள்ளை யானை

அறக் காய்ச்சல் முற்றுகையில் பிறழும் கலை மனம்

முரஹரி ஐயங்கார் என்றொரு கதாபாத்திரம் இந்த நாவலில் வருகிறது. வக்கீல் தொழிலுக்குப் படித்திருக்கும் அவர் பிரிட்டிஷாருக்கு நிதி ஆலோசனைகள் வழங்கும் ஆடிட்டராகவும் இருக்கிறார். பஞ்ச காலத்தில் லட்சக்கணக்கில் தலித்கள் செத்து விழுவதை அவர்களுடைய விதி என்று எள்ளி நகையாடுகிறார்.  கூடவே பிரிட்டிஷாருக்குக் கூட்டிக் கொடுத்தும் தனது செல்வாக்கைப் பலப்படுத்திக்கொள்கிறார் என்று நாவலில் சொல்லப்படுகிறது. அப்படி ஒருவர் இருந்தாரா… அவர் அதைச் செய்தாரா என்பவையெல்லாம் நிரூபிக்க முடியாத புனைவு உண்மைகள். ’பெரியார் மண்’ணில் சுமார் 20-25 ஆண்டுகளுக்கு மேலாகத் தனியொருநபராக, இந்து ஆன்மிக மரபின் இலக்கிய ஆதரவாளராக வீரியத்துடன் செயல்பட்டுவரும் ஜெயமோகனே இதையும் செய்திருப்பதைப் பார்க்கும்போது வேதனையே மிஞ்சுகிறது.

தலித்கள் இந்து சாதியமைப்பில் கூடுதல் துன்பங்களை அனுபவித்த பிரிவினர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்தவகையில் சாதி இந்துக்கள் அனைவருமே குற்றம்சாட்டப்படவேண்டியவர்களே.  ஆனால், பிரிட்டிஷாருக்கு முந்தைய காலகட்டத்துக் கொடுமைகளுக்கு மட்டுமல்லாமல் பிரிட்டிஷாரின் காலகட்டத்தில் நடந்தவற்றுக்கும் சாதி இந்துக்களே காரணம் என்று சித்திரித்திருப்பது மிகப் பெரிய வரலாற்று மோசடியே. முரஹரி ஐய்யங்கார் என்ற அந்த ஒற்றைப் பிரதிநிதியின் வார்த்தைகளை ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் குரலாக முன்வைப்பது அநியாயம்.


வெள்ளை யானை, ஜெயமோகன், எழுத்து வெளியீடு, ரூ 400, பக்கம் 408.

உண்மையில் இப்படியான சிந்தனைக்கு அடிப்படையான காரணம் சாதி பற்றிய பிழையான புரிதலே.  தொழில் புரட்சி ஏற்பட்ட பிறகு உலகம் முழுவதும் முகிழ்த்தெழுந்த சமத்துவ சமூக அமைப்பை இந்தியாவிலும் கொண்டுவர பிரிட்டிஷார் காலத்தில் முயற்சிகள் எடுக்கப்பட்டன. உலகின் பிற பகுதிகளில் கறுப்பர் வெளுப்பர், ஜெர்மானியர் யூதர் என இரட்டை அடுக்கே பிரதானமாக இருந்தது. அதாவது ஒடுக்கப்பட்ட பிரிவினரும் கணிசமான எண்ணிக்கையில் ஓரணியில் இருந்தனர்.  நவீன மக்களாட்சி உலகில் அந்த எண்ணிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அதுவே சமத்துவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது எதிர்பார்க்கும் பலன் கிடைக்க வழிவகுத்தன. அதோடு இனவெறி, நிற வெறி, மத வெறி போன்றவையெல்லாம் படு கொடூரமாக இருந்தன. எனவே, அவற்றுக்கு எதிரான குற்ற உணர்ச்சியும் மிக அதிகமாக இருந்தன. மேலும் மேற்குலகில் இயற்கை வளங்கள் அதிகம் மக்கள்தொகை குறைவு. அதோடு அவர்கள் காலனியாக்கல் மூலம் உலகின் வளங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கவும் செய்தனர். எனவே, அந்த பகுதிகளில் சமத்துவத்தைக் கொண்டுவருவது எளிதாக இருந்தது. அதாவது அந்த நாட்டு மேல் அடுக்கினர் உலகின் உச்சிக்குச் சென்றனர். எனவே அங்கிருந்த கீழடுக்கினர் பிறபகுதிகளைவிட ஒப்பீட்டளவில் மேலான நிலைக்கு உயர்ந்தனர்.  இந்தியாவில் நிலைமை முற்றிலும் வேறானது. இங்கு இரட்டை அடுக்கு முறை இருந்திருக்கவில்லை. மையம் அழிக்கப்பட்ட அமைப்பு என்பதால் ஒடுக்குமுறை கொடூரமானதான இருந்திருக்கவில்லை. சமத்துவம் இருந்திருக்கவில்லை, ஆனால் சந்தோஷமான வாழ்க்கைக்கான வெளி அனைத்து சாதிகளுக்கும் இருந்தது. இயற்கை வளங்கள் குறைவு. மக்கள் தொகை அதிகம். இது போன்ற காரணங்களால் இங்கு சமத்துவத்தைக் கொண்டுவர முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் கடைநிலை சாதிகளை இடைநிலை சாதிகளோடு மோதவைத்துவிட்டன. இந்தக் காலகட்டத்தில் நடந்த வன்முறைகளை அடிப்படையாக வைத்து முந்தைய கால சாதிய சமூகத்தையும் அதே அளவுக்குக் கொடூரமானதாகச் சொல்லி இந்துப் பாரம்பரியத்தை முற்றாக நிராகரிக்கும் முடிவுக்கே அனைவரும் செல்கிறார்கள். உண்மையில் நோய்க்குத் தரப்பட்ட மருந்தினால்தான் (அதுவும்கூடத் தரப்பட்ட விதத்தில்தான்) நோய் முற்றியிருக்கிறது.  தவறு மருந்தைத் தந்த விதத்தில்தான் இருக்கிறதே தவிர நோய் அவ்வளவு கொடியது அல்ல. (more…)