Home » Articles posted by haranprasanna

Author Archives: haranprasanna

மாதொருபாகன்

பெருமாள் முருகன் தான் இனி எதுவும் எழுதப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். இது ஒரு தற்காலிக அறிவிப்பாகவே இருக்கவேண்டும். அவர் மீண்டும் எழுதவருவார் என்றே நினைக்கிறேன். பிரச்சினைகள் ஓய்ந்த பிறகு அவர் மீண்டும் எழுதவரவேண்டும் என்றே விரும்புகிறேன். பெருமாள் முருகன், ஐ’ம் வெயிட்டிங்.

மாதொருபாகன், பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம், ரூ 175

மாதொருபாகனை முன்வைத்து நடக்கும் பிரச்சினைகள் மிகவும் மோசமான முன்னுதாரணமாக அமைந்திருக்கின்றன. எங்கோ வெளியான திரைப்படம் ஒன்றுக்கு சென்னை ஸ்தம்பித்தபோது நாம் அதிர்ந்தோம். இன்று திருச்செங்கோடு ஸ்தம்பித்திருக்கிறது. அது அமெரிக்கா, இது திருச்செங்கோடு என்பார்கள். உண்மைதான். ஆனால் என்னளவில் உணர்வளவில் இந்த இரண்டும் ஒன்றே. இது இப்படியே வளர்ந்து நாளை அங்கே செல்லக்கூடும். திருச்செங்கோட்டு மக்களை அந்த நாவல் வசைபாடவில்லை. அது ஒரு புனைவு மட்டுமே. புனைவுக்கும் ஒரு எல்லை உண்டு என்பது சரி. அப்படி அந்த எல்லை மீறப்பட்டால் அதை எதிர்கொள்ளும் வழி இதுவல்ல. (more…)

ஆர் எஸ் எஸ் – கடந்து வந்த பாதையும் செய்ய வேண்டிய மாற்றங்களும்

978-93-5135-156-6_b

ஆர் எஸ் எஸ்ஸை மிக நெருக்கமாக கடந்த 45 வருடங்களாகப் பார்த்துவரும் ஒருவர் ஆய்வு செய்து எழுதிய புத்தகம் இது. இவர் ஆர் எஸ் எஸ்ஸிலும் இருந்தவர். எனவே உள்ளே இருந்து எழும் ஒரு விமர்சனக் குரலாக ஒலிக்கிறது ஆசிரியரின் குரல். அது கலகக்குரல் இல்லை. மாறாக விமர்சனக் குரல். ஒருவகையில் ஆர் எஸ் எஸ் எப்படி இருந்து இப்போது இப்படி வீழ்ச்சி அடைந்துவிட்டதே என்று வருத்தப்படும் குரல். அல்லது மீண்டும் ஆர் எஸ் எஸ் பழையபடி வீறுகொண்டு எழாதா என்று விரும்பும் ஏக்கக்குரல். இப்படி ஒரு கலவையாகவே இந்தப் புத்தகத்தைப் பார்க்க முடிகிறது.

ஆர் எஸ் எஸ்ஸின் முழுமையான வரலாற்றுப் பார்வையை இப்புத்தகம் தரவில்லை. என்றாலும், ஆர் எஸ் எஸ்ஸின் முக்கியமான மூன்று தலைவர்களின் ஆளுமைகளையும் அவர்களது செயல்பாடுகளையும் அலசுவதன்மூலம் ஆர் எஸ் எஸ் அமைப்பின் வரலாறும் விவரிக்கப்படுகிறது.

ஹெட்கேவர் காலத்தில் இந்து சமூகத்தை ஒருங்கிணைக்கும் ஒரு சக்தியாகவே ஆர் எஸ் எஸ் தொடங்கப்பட்டது. அங்கே சமத்துவமும் சகோதரத்துவமும் மிக முக்கியமானவையாக வலியுறுத்தப்பட்டன. உயர்சாதி தாழ்ந்த சாதி வேறுபாடுகள் ஆர் எஸ் எஸ்ஸுக்குள் நுழையக்கூடாது என்பது ஹெட்கேவர் காட்டிய அக்கறையை மிகத் தெளிவாகவே ஆசிரியர் குறிப்பிடுகிறார். (more…)