Home » Politics » தமிழக அரசியல் (2ம் பாகம்)

தமிழக அரசியல் (2ம் பாகம்)

kjp044

தமிழக அரசியல் வரலாறு (2 பாகங்கள்), கிழக்கு பதிப்பகம், ஆர்.முத்துக்குமார்.

தமிழக அரசியல் வரலாற்றை இரண்டு பாகங்களாக எழுதியிருக்கிறார் ஆர். முத்துக்குமார். முதல் பாகம் சுதந்தரம் முதல் எமர்ஜென்சி வரையான வரலாற்றையும், இரண்டாம் பாகம் எம். ஜி. ஆர் ஆட்சி முதல் 2000ஆம் ஆண்டு வரையான வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறார். இங்கு இந்நூலின் இரன்டாம் பாகம் குறித்துப் பார்க்கலாம்.

திமுக மூளையில் இருந்து உருவான கட்சி, அதிமுக இதயத்தில் இருந்து உருவான கட்சி என்று பொதுவாக ஒரு சொலவடை இருக்கிறதே, அதனை முழுமையாக இந்தப் புத்தகத்தில் இருந்து புரிந்து கொள்ள முடியும். அதற்கேற்றபடியான நிகழ்வுகள் எம். ஜி. ஆரின் ஆட்சிக்கால நிகழ்வுகளில் தெரிய வருகிறது. ஆனால், அப்படி இதயத்தில் இருந்து உருவான கட்சியே கூட எம். ஜி. ஆரின் கண்முன்பே உடைந்திருக்கிறது, அவருடைய இறப்புக்குப் பிறகு கட்சியே இரண்டாகவும் பிரிந்து சண்டையிட்டு நிகழ்வையும் பார்க்கிறோம். அந்தப்பக்கம் திமுகவும் இதேபோல பிரிவைச் சந்தித்திருப்பதையும் பதிவு செய்திருக்கிறார்.

வரலாற்றை நாம் புரட்டிப் பார்க்கும்போது சில விநோதங்களும், சில நிகழ்வுகள் அப்படியே 180 டிகிரிக்கு அடியோடு மாற்றம் பெற்ற சில நிகழ்வுகளும் கொண்டது. உலக வரலாற்றின் நிலவரமே இப்படி இருக்கும்போது, தமிழக அரசியல் வரலாற்றிலும் இத்தகைய விநோதங்களும், தலைகீழ் மாற்ற நிகழ்வுகளும் இருக்கின்றன. அத்தகையை நிகழ்வுகளை இப்புத்தகத்தில் ஆங்காங்கே பார்க்கிறோம்.

எம். ஜி. ஆர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்பட்டதும், பின்பு நிலை மாறியதையும், அவர் வழிவந்த ஜெயலலிதா 69% இடஒதுக்கீட்டை நிலைநிறுத்தியதும்.

உளவுத்துறையின் சதியில் வீழ்ந்துவிடாதீர்கள் என்று எச்சரித்த கலைஞர் உளவுத்துறையின் தகவல் என்று கூறி வைகோவுக்கு எதிராக பொங்கியெழுந்ததும்.

திமுகவில் கணக்கு கேட்டு வெளிய வந்த எம். ஜி. ஆரின் அதிமுகவில் அவரை நோக்கி மீண்டும் கணக்கு கேட்ட நிகழ்வுகள்.

இன்றைய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அன்று செய்த ஐந்து சத்தியங்களையும், இன்று ராமதாஸ் மற்றும் அந்த ஐந்து சத்தியங்களின் நிலையும் இன்னொரு விநோதம்.

திமுக நெட்டுக்குத்தாகப் பிளந்து அதிமுக ஆன பிறகு இரண்டு கட்சிகளுக்கு இடையே அங்கும் இங்கும் மாறி மாறிக்கொண்டிருந்த நபர்களைப் போன்றவர்களை இன்னமும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இப்படித் தமிழக வரலாற்றில் நிகழ்ந்த விநோதங்கள் விசித்திரமானது.

விநோதங்கள் மட்டுமல்ல, சில விடை தெரியாத புதிர்களும் தமிழக அரசியல் வரலாற்றில் ஆங்காங்கே இருக்கின்றன. அதுவரை கட்சியில் முதன்மை இடத்தில் இருந்த சிலர் ஜெயலலிதா தலைமையிலான அணிக்கு கட்டுப்பட்டவர்களாக இறங்கிப்போனது எதன் அடிப்படையிலாக இருக்கும் என்ற புதிர் இறுதிவரையில் தெளிவடையவே இல்லை. அதேபோல ஜெயலலிதாவின் இருப்பையே எதிர்த்து அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் பின்னாட்களில் அவருடைய தலைமைக்குக் கட்டுப்பட்டு கட்சிக்குள் இருந்தது எப்படி என்று இன்னும் சில புதிர்கள். நிச்சயமாகவே அதிமுக இதயத்தால் பினைக்கப்பட்டது தானோ? இன்றுவரை ஓ. பன்னீர்செல்வம் போன்றவர்கள் இதயத்தால் இனைந்தது என்ற வாதத்தை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

புத்தகத்தின் அத்தியாயத் தலைப்புகள் சில லேசான புன்முறுவலையும், ஆச்சரியங்களையும், சில லேசான கடுப்பையும் தருபவையாக இருக்கின்றன. ‘மீண்டும் அண்ணா திமுக’, ‘காவிரி தந்த கலைச்செல்வி’, ‘நசுக்கப்பட்ட நக்சலைட்டுகள்’, ‘இந்தி எதிர்ப்பு, நகல் எரிப்பு, பதவிப்பறிப்பு’, ‘மீண்டு(ம்) வந்த கருணாநிதி’, ‘பாமகவின் ஈழம், பாஜகவின் அயோத்தி’ என்று சில தலைப்புகளைக் குறிப்பிட்டுக் காட்டலாம்.

புத்தகத்தில் இருந்த சில வரலாற்று நிகழ்வுகள், இன்றைய சூழலை லேசாக நினைவுறுத்துவது எல்லாம் வரலாறு மீண்டும் திரும்பும் என்பதை நிரூபிக்கத்தான். வேளான் துறை அதிகாரி முத்துக்குமாரசாமியின் மரணத்தைப் போன்ற ஒரு நிகழ்வும், அதற்கு எதிர்க்கட்சிகளின் மிகக் கடுமையானப் போராட்டங்களும், எரிசாராய விற்பனையில் நடந்த ஊழலும் என்று அன்றைய சூழலின் ஒரு நகலாகவே இன்றைய நிகழ்வுகள் தமிழக வரலாற்றில் நடந்திருக்கின்றன.

2000ஆம் ஆண்டுக்குப் பிறகான அரசியல் நிகழ்வுகள் இன்னும் வரலாறாக உருப் பெறவில்லை. ஆகவே அவற்றைப் பின்பு ஆய்வு செய்வோம் என்கிறார் ஆர். முத்துக்குமார். அது அவருடைய சுதந்திரம். ஆனால், புத்தகம் எழுதப்பட்ட 2012ஆம் ஆண்டு வரைக்குமான இடைப்பட்ட 12 ஆண்டு காலத்தில் அரசியல் அரங்கில் ஏற்பட்ட மாற்றங்கள் அதற்கு முந்தைய அறுபது ஆண்டுகால வரலாற்றின் நீட்சியாக இருந்திருக்கும். காவிரி நதி நீர் சிக்கல் தொடர்பான நிகழ்வுகளின் தொடர்ச்சி, ஜெயலலிதாவின் மீது தொடரப்பட்ட வழக்குகளின் இன்றைய நிலவரம், ஈழப் போராட்டங்களின் முடிவு, தமிழகத்தில் மதவாத சக்திகளின் நுழைவு என்று தமிழக அரசியல் வரலாற்றின் நீட்சியாக அமைந்திருக்கும். இப்புத்தகத்தின் மூன்றாம் பாகமாக இவற்றை வெளியிடலாம்.

– த.பழனி

போன் மூலம் இந்தப் புத்தகத்தை வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

ஆன்லைனில் இந்தப் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-786-2.html


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: