Home » Novel » சொர்ண ரேகை

சொர்ண ரேகை

19484046

சொர்ண ரேகை, இந்திரா சௌந்தர்ராஜன், திருமகள் நிலையம், ரூ 90

எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜனுக்கு அறிமுகம் தேவையில்லை. சன் டி.வி.யில் ஒளிபரப்பான `மர்ம தேசம்’ மூலம் அவருடைய எழுத்துக்கள் எனக்கு அறிமுகமானது. நீண்ட காலத்திற்குப் பிறகு, இப்போது `மதிப்புரை’க்காக அவரது இரு (குறு) நாவல்கள் – `சொர்ணரேகை’, `வைரம், வைரம், வைரம்’ அடங்கிய `சொர்ணரேகை’ என்கிற தலைப்பிலான புத்தகத்தைப் படித்தேன்.

அவரே `என்னுரை’யில் கூறியிருப்பது போல இந்த இரண்டு கதைகளுமே மாத நாவல் வகையைச் சேர்ந்தது. இந்த அவசரமான உலகத்தில் பார்க்க (தொலைக்காட்சி) நேரம் இருக்கிற அளவிற்கு படிப்பதற்கான பொறுமையோ, நேரமோ(?!) இல்லை. எனவே இவருடைய கதைகளை படிப்பவர்களைக் காட்டிலும் (அப்படியிருந்தும் மதிப்புரைக்கான இந்நூல் மூன்றாவது பதிப்பை எட்டியிருக்கிறது) பார்ப்பவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது.

பெயருக்கேற்ப சொர்ணரேகை நாவல், தங்கப்புதையலைத் தேடும் காவல் துறை, முனிரத்னம் என்கிற தூக்குத்தண்டனை கைதியின் கீழ் இயங்கும் கும்பல், அப்பாவியான டூரிங் தியேட்டர் ஆபரேட்டர் என இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களை `நறுக்’கென்று, கொஞ்சமும் `த்ரில்’ குறையாமல் 93 பக்கங்களில் கதையை நகர்த்திச் சென்றிருப்பது பாராட்டுக்குரியது. முதலீட்டுக்காக `தங்கத்தை, வைரத்தையும்’ தேடி ஓடும் இந்த அவசரமயமான உலகில் படிக்க பொறுமையில்லாதவர்கள் கூட இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தால் படித்து முடித்த பின்புதான் கீழே வைப்பார்கள். அந்த அளவுக்கு ஒரு விறுவிறுப்பு. புத்தகத் தலைப்பில் உள்ளது போல கைரேகை சோதிடத்தை மையமாக வைத்து இந் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

கடைசியில் ‘தங்கப்புதையல் யாருக்க…?’ கதையைப் படிக்கும் போது வாசகர்கள் நினைப்பது ஒன்றாக இருக்கும் ஆனால் நூலாசிரியர் தனக்கே உரித்தான பாணியில் ஒரு `ட்விஸ்ட்’ வைத்து முடித்திருக்கிறார்.

தங்கத்திற்கு அடுத்தபடியாக, “வைரம், வைரம்,வைரம்’. திருப்பதி பாலாஜிக்கு சேர வேண்டிய `பிரேம வைர’த்தையும் அகால மரணம் அடைந்த வேலாயுதம் பிள்ளையின் நகைக் கடையையும் சுருட்ட நினைக்கும் அவரது மருமகன் துரைரத்னத்தின் வில்லத்தனமான செயல்களும், வேலாயுதம் பிள்ளையின் மகள் சுந்தரவடிவு, மகன் விச்சு, சின்னவீடு சூடாமணி, அவளுடைய சகோதாரன், வேலாயுதம் பிள்ளையின் நம்பிக்கைக்குப் பாத்திரமான வெங்கடாஜலம் என ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் கதை இது.

இந்திரா செளந்தர்ராஜன் கதைகளின் சிறப்பு என்னவெனில், ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புதான். ‘வைரம், வைரம்….’ கதையில் வைரம் பற்றிய குறிப்புகள் அந்தந்த அத்தியாயத்திற்கான முன்னோட்டமாக இருப்பதுடன் முழுக்கதையையும் இழையோட்டமாக சொல்லிச் செல்கிறது.

இவருடைய கதைகளை டி.வி. தொடர்களாகப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் இந்த `கதை சொல்லியின்’ சிறப்பு! விறுவிறுப்பை ஆரம்பம் முதல் இறுதி வரை கொண்டு செல்வது என்பது எல்லா நூலாசியர்களுக்கும் கைவராது. ஆனால், இவருடைய கதைகளின் சிறப்பே அதுதான். எப்படி, ஃபேண்டஸி கதைகள் படிக்கும் போது லாஜிக்கையெல்லாம் மூட்டைக் கட்டி விடவேண்டுமோ அது போல தான் இந்தக் கதைகளைப் படிக்கும்போதும்!

–  சித்தார்த்தன் சுந்தரம்

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: 94459 01234

 

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: