Home » Politics » சங்பரிவார் (நேற்று – இன்று – நாளை)

சங்பரிவார் (நேற்று – இன்று – நாளை)

சங்பரிவார் (நேற்று – இன்று – நாளை), முஹம்மது தாஹா, இலக்கியச் சோலை, ரூ 110

வரலாற்று முகங்களைத் திருப்பிப்பார்க்கும்போது அங்கு உண்மைகளின் இனிய அனுபவத் தரிசனங்களையும் வலியுடன் கடந்து வந்த பயணங்களையும் அதற்குறிய ஆதாரங்கள் முழுமையையும் நூலாசிரியரின் பார்வையில் எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். காரணம் வரலாற்றுச் சம்பவக் காலங்கள் அன்றைய சூழ்நிலையை மையப்படுத்திப் பின்னோக்கிப் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்குறியது. அன்று நடந்ததை இன்றைய கோணத்தில் பார்க்கும்போது அவை வலிமையற்ற உண்மைகளாகத் தென்படலாம். இரண்டாம் பதிப்பாக வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தில், M. K. A. முஹம்மது தாஹா இந்திய இஸ்லாமிய மக்களின் சூழ்நிலையையும் அவர்களுக்கு எதிரான சூழலையும் மையமாக வைத்து அழுத்தமான குரலைப் பதிவு செய்து இருக்கிறார். நூலைக் (183 பக்கம் – பிற்சேர்கையுடன்) கையில் எடுத்தால் கிழே வைக்க முடியாத அளவுக்கு ஒரே ஓங்கிய குரலாகப் பதிவு செய்து இருக்கிறார்.

அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தங்களது 40 வயதில் (கி. பி. 610) நபித்துவம் பெற்றார்கள். அவருடைய இஸ்லாமியப் பிரச்சாரத்தின் பயனால் இந்த உலகமெல்லாம் வெளிச்சம் பாய்ச்சி வந்தார் அரபு நாடுகள், உலகம் முழுவதுவும் இஸ்லாம் என்ற சத்திய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் பலர் இந்தச் சத்திய மார்க்கத்தை உலகம் எங்கும் எடுத்துச் செல்லும் நோக்குடன் ’சஹாபாப்’ பெருமக்களின் மூலம் இந்தியாவிற்கும் இஸ்லாம் வந்தது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது 63 ஆவது வயதில் (கி. பி 632) இறைக்கட்டளையை நிறைவேற்றிய பின், தன் முன்மாதிரி வாழ்வை முடித்துக் கொண்டார். அவரின் மரணத்திற்கு பின்னால் 10 ஆண்டுகளுக்குள் – கி. பி 642 ல் கேரளாவின் – கொடுங்கல்லூரில் முதல் பள்ளிவாயில் கட்டப்பட்டுவிட்டது. இதன்மூலம் இஸ்லாமிய மார்க்கம் இன்னும் பெரும் நோக்கில் இந்திய மண்ணில் வேர்விடத் தொடங்கியது. ஆனால் அரசியல் சக்தியாக அந்த மார்க்கம் ஹிஜ்ரி 557 ல், இந்தியாவின் சிந்து நதிக்கரையை இஸ்லாம் பிரச்சாரக் குழுவின் தலைவராகச் சுல்தான் ஸையத் இப்றாஹீம் அவர்கள் வந்ததும் அவரின் வருகையைத் தவறாகப் புரிந்து கொண்டு அப்போதையச் சிந்து மன்னன் ஆப்தாப் சிங் அவர்கள் போரிட்டுத் தோற்றதன் முதல் இஸ்லாம் ஷரீஅத் சட்டங்கள் இந்திய மண்ணில் அரசியல் சக்தியாகத் துவங்கியது..

அப்போதைய இந்திய மக்களின் எதிர்பார்ப்பை, ஆசைகளை, தேடல்களை நிறைவேற்றி வைத்தததால் பெரும்பாலான மக்கள் பரிசுத்த மார்க்கமான இஸ்லாத்தில் தங்களை இணத்துக் கொண்டார்கள் என்று பதிவு செய்யும் ஆசிரியர், கிபி 13 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த மார்க்கோ போலோ கிபி 12 ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் வந்த இஸ்லாம் கூட்டத்தினர் தென்னகத்தின் மூடப் பழக்கத்தை, கடும் சிரத்தையெடுத்துப் போதித்துத் தடுத்து முடிந்தவரை ஒழித்திருக்கின்றனர் என்பதைச் சொல்கிறார் (பக். 15) அதோடு கடந்த 14 நூற்றாண்டுகளாக இந்தியாவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட இந்திய மக்கள் வாழையடி வாழையாக முஸ்லிகளாக வாழ்ந்து வருவதாகப் பதிவுச் செய்கிறார் – இஸ்லாம் வந்ததற்குச் சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கிறிஸ்துவ மதம் இந்தியாவில் துவங்கியது என்றும் ஆசிரியர் இங்கு நினைவுபடுத்துகிறார்.

கி. மு 2000 ல் ரஷ்யாவிலுள்ள அரான்கடற்கறைப் பகுதியில் வாழ்ந்த ஒரு கோத்திரத்தார் (பக்143), கி. மு 1500 ஆம் ஆளவில் இந்துகுஷ் மலையிலுள்ள கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து தங்களிட உள்ள ஆடு மாடுகளை மேய்க்க புல்வெளிகளைத் தேடிப் பஞ்சாப் பகுதிக்கு வந்து சிறிய கிராமங்களாக வாழத் தொடங்கினார்கள் (ப. 142). அவர்களுக்குக் குதிரைகளைக் கையாளும் திறனும் இரும்பினைப் பயன்படுத்திக் கூரிய ஆயுதங்களைச் செய்யும் திறமையும் இருந்தன. அதன்மூலம் இந்திய நாகரீகம் தெரிந்த பூர்வக் குடிமக்களைக் கொன்று ஒழித்துத் தங்கள் வாழ்வைத் தொடங்கினார்கள். கி. பி 8 ஆம் நூற்றாண்டில் புத்த, ஜைன மதங்களைச் சார்ந்தவர்களையும் அவர்களின் வழிபாட்டுத் தளங்களையும் ஆக்கிரமித்தனர். தாங்கள் மட்டுமே வாழும் வகைக்கேற்றார் போல வேதங்களையும், மனுஸ்மிருதி கொண்டு மனிதச் சமூகத்தை 5 பிரிவுகளாகப் பிளந்து முதல் பிரிவாக உயர்குடிகளாகத் தங்களையும் தங்களுக்குக் கீழ் மற்ற அனைவரையும் கொண்டு வந்து பிரகடனப்படுத்திப் பிரித்தாண்டனர்.

”இப்போதும் அப்படித்தான் ஒன்றுபட்டுக் கிடந்த அப்பாவி மக்களைத் தங்கள் நாட்டுக்குள்ளே பிரித்து காலங்களுக்கேற்ப அவர்கள் அராஜகத்திற்கு ஆள்வோரின் பெயர்கள் மட்டும்தான் மாறுகிறதே தவிர வேறெதுவும் இல்லை” (பக். 142)

இவ்வாறு 7 ஆம் நூற்றாண்டு வரை அடிமைத்தளையில் அகப்பட்டு வேறு வழிதெரியாமல் வாழ்ந்த மக்கள் இஸ்லாத்தின் சமத்துவம், சகோதரத்துவம், சம உரிமையும், உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், செம்மையான பண்பும், பரிவும், பாசமும் மறுமை வாழ்கை என்ற உயர்தத்துவமும் இந்திய மக்களை வெகுவாகக் கவர்ந்து இழுத்தது (பக். 54 – 55). இந்த ஒரு காரணத்தால் இஸ்லாத்தை நோக்கி மக்கள் வருவது அதிகரித்தது. இதைப் பொறுத்துக் கொள்ளாத சில அமைப்புகள் முஸ்லிம் மதத்தை வெறுக்கத் தொடங்கியது.

இன்றைய நிலையில் மேலும் இஸ்லாத்தின் சத்திய மார்க்கத்தை உலகில் 60 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. அதனால் இந்த ஆரோக்கியமான வளர்ச்சியை விரும்பாத சில சுய நலமிக்க உலக அளவில் இஸ்லாத்துக்கு எதிராகக் கடந்த 1942ல் உலகளாவிய இஸ்லாமியத் தலைமை (கிலாஃபத்) அமைப்பைக் கவிழ்த்தது. இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களுக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எவ்வித முரண்பாடும் இல்லை. ஆனல் இதை விரும்பாத சில சக்திகள் இந்தியாவை விட்டு முழுவதுமாக அகற்றப் பார்ப்பதாகவும் இங்குள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அதனால் இவர்கள் ஐந்தாம் படையினர், அந்நியர், மிலேச்சர் என்ற அவதூறுப் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருவதுவும் (பக். 104) இதற்காகப் பாஸிச மற்றும் ஸியோனிசக் கொள்கைகளைப் பின்பற்றி ஒரே சக்திப் பல முகங்களாக (அமைப்பாக) செயல்படுவதாக நூலாசிரியர் தனது குற்றசாட்டை அழுத்தமாகவும் ஆவேசமாகவும் முன் வைக்கிறார்

21 வது நூற்றாண்டில் இந்தியாவில் வாழும் முஸ்லிகளுக்கு எதிரான சோதனை அதிகரித்துள்ளதாகக் கருதும் நூலாசிரியர் முஹம்மது தாஹா அதற்கான ஆதாரங்களை முன்வைக்கிறார். 1927 ஆம் ஆண்டுச் செப்டம்பர் ஏற்பட்ட நாக்ப்பூர் கலவரம் தொடங்கி, 2013 செப்டம்பர் முஸாபத் நகர் கலவரம் வரை தொடர்கிறது (பக். 108) என ஆதரமாகச் சொல்கிறார்

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தங்களுக்கு எதிரான உலகளாவியச் சதிகளையும், நாடு தழுவிய சக்திகளையும் அறிந்துகொண்டு காலம் தாழ்த்தாது விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே இஸ்லாமும், முஸ்லிம்களும் அழிவிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் (பக் 17), இங்கு வாழும் முஸ்லிம்கள் எந்தப் பிரச்சினையையும் கண்டு கொள்ளாமல் வெறுமெனெத் தொழுகையிலும், திக்ரிலும், கப்ரையும் கட்டிக்கொண்டு அழுவதிலும், உலக ஆசைகளிலும் பணம் ஒன்றே குறிக்கோள் என வாழ்வதிலும் உழன்றால் ஏதோ ஒரு வாளுக்கோ, ஈட்டிகோ ஒருநாள் இறையாக வேண்டியது வரும் (பக். 57) என்றும் எச்சரிக்கைச் செய்கிறார் ஆசிரியர்!

இந்திய இஸ்லாம் மக்களின் வாழ்வுக்காக அழுத்தமான குரல் கொடுக்கும் முஹம்மது தாஹா அவர்கள் பல கேள்விகளை நமக்குள் ஏற்படுத்தினாலும், அவரின் கோணத்தில் இந்த நூலின் கருத்துக்களை சரியாகப் புரிந்து கொள்வதும், நமக்கானத் தேடலின் அடிப்படையிலும் முடிவு செய்வதுவும் இந்நூல் நமக்குத் தரும் சவால்கள். ஆனால் இந்தியாவில் வாழும் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வும்  பூமியில் எங்கு பிறந்திருந்தாலும் வாழும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதும் அதைப் பறிப்பது, நமக்கான இறையாண்மையைத் தொலைப்பதுற்கு சமம் என்பதும் நிச்சயம்.

– சு. கிருஷ்ணமூர்த்தி.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0002-454-6.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: