Home » Health » நலம் தரும் வைட்டமின்கள்

நலம் தரும் வைட்டமின்கள்

நலம் தரும் வைட்டமின்கள், என்.சொக்கன், நலம் வெளியிடு, ரூ 185

மருத்துவம், உணவுக் குறிப்புகள் பற்றிய நூல்கள் என்றால் அவற்றுக்கென சில நியதிகள் இருக்கும். பக்கம் பக்கமாக வெறும் குறிப்புகளும், இப்படிச் செய் அப்படிச் செய், இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என ஒரே அறிவுரை மாயமாக இருக்கும். இரண்டு பக்கம் வரவேண்டியவை இருபது பக்கம் இருக்கும். அதைப் படித்தபின் தூக்கிபோட்டுவிடவேண்டும், முயற்சித்து பார்க்க கூடாது. ஆனால் இந்த விதிகளை உடைத்துள்ளது இந்தப் புத்தகம்.

ஆரம்பமே கிண்டலான தொனியில் ஆரம்பிக்கிறது. H. M. S சலிஸ்பரி என்னும் கப்பலை ஸ்கர்வி கப்பல் என்று அழைக்கலாம் எனத் துவங்குகிறது. இங்கே ஸ்கர்வி என்றால் என்ன? அதன் விளைவுகள் என்ன? அது ஏன் வருகிறது என்பதை மிக எளிதாகப் புரியவைகின்றார் ஆசிரியர். எலுமிச்சை பழம் சாப்பிட்டால் ஸ்கர்வி வராது என்று பள்ளியில் மனப்பாடம் செய்திருக்கிறோம். அது எப்படி என்று அழகாகப் புரியவைத்துவிட்டார்.

வைட்டமின் வைட்டமின் என்று ஆளாளுக்கு சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன என்பதை அடுத்த அத்தியாயத்தில் விளக்கியுள்ளார். “வைடல்” என்றால் உடம்பு,  “அமைன்” என்றால் நைட்ரஜன் கலந்த கூட்டுப்பொருள் எனக் குழந்தைக்கு சொல்வது போல எளிதாகச் சொல்லிவிட்டார். ஆயிரம் வைட்டமின் மருந்துகள் வந்தாலும் உணவுக்கு ஈடு இணையில்லை என அடித்துக் கூறுகிறார்.

வைட்டமின்கள் எத்தனை வகைப்படும் என அந்த அத்தியாயத்திலேயே பட்டியலிடுகிறார். ”பெரி பெரி” என்ற நோய் எப்படி வருகின்றது, அது நம்மை எப்படி பாதிக்கும் என ஐந்தாம் அத்தியாயத்தில் விளக்கியுள்ளார். சிங்கள மொழியில் பெரிபெரி என்றால் “என்னால் முடியாது, என்னால் முடியாது” என்று அர்த்தமாம். அந்த அளவு நோய் வந்தவர் கதறும் அளவு நோயின் தாக்கம் இருக்குமாம்.

தெரியுமா?

  • B2 வைட்டமின் அமெரிக்காவில் வைட்டமின் G என்றுதான் அழைப்பார்கள்.
  • B1 வைட்டமினுக்கு உற்சாக வைட்டமின் என்றும் ஒரு பெயர் உண்டு.
  • பெல்லகரா என்ற நோய்க்கு 3D என்று பெயர். இது DEMENTA, DIARRHEA, DERMATITIS என்ற மூன்று பிரச்சினைகளைச் சேர்த்துக்கொண்டுவரும்.
  • எலி வைட்டமின் என்று முன்பு அழைக்கபட்டது B6 வைட்டமின்.
  • வைட்டமின் B9 குறைவுடைய குழந்தைகள் பசும்பால் குடிக்கமாட்டார்கள்.
  • வைட்டமினும், தாதுக்களும் (MINERALS) சேர்ந்து இருக்கும் ஒரே வைட்டமின் B12 தான்.
  • ALBERT SZENT GYOGRI என்பவர் தான் வைட்டமின் C யைக் கண்டுபிடித்தார்.

மேற்கண்டவை எல்லாம் எனக்குப் புதிய விஷயங்கள். இது போல பல நல்ல, புதிய தகவல்கள் இந்த நூலில் பரவிக்கிடக்கின்றன.

வழக்கமான மருத்துவ நூலில் உள்ள சில குறைகள் இதிலும் உள்ளன. வழக்கம் போல சாப்பிடவேண்டிய உணவு வகைகளைப் பட்டியலிடும் போது அதிகபட்சம் எல்லா உணவு வகைகளும் வந்துவிடுகின்றன. ஒரு கட்டத்தில் எந்த உணவில் எந்த வைட்டமின் இருக்கிறது என்பதே குழப்பமாக உள்ளது.

அளவுக்கு அதிகமாக வைட்டமின் சேர்த்துக்கொள்ளக் கூடாது, அது உடலைப் பாதிக்கும் எனக் கூறிவிட்டு கடைசி அத்தியாயத்தில் மெகா வைட்டமின் என்பது குறிப்பிட்ட அளவுக்குமேல் வைட்டமின் சாப்பிடால் அது சில நோயைக் குணமாகும் எனச் சொல்லும்போது ஒரே குழப்பமாக உள்ளது.

இதுபோல சிறு சிறு குறைகளைக் களைந்துவிட்டுப் பார்த்தால் ஒரு சிறந்த, உடல் நலத்தைப் பாதுகாக்க விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.

– ராஜபாட்டை ராஜா

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8368-482-8.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

 


1 Comment

  1. வைட்டமின் மாத்திரை போலவே அற்புதமான அளவுள்ள ,சக்தியான விமர்சனம் .இதுவே போதும் இந்த நூலின் சிறப்பைச் சொல்ல ,

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: