Home » Politics » கறுப்புப் பணம்

கறுப்புப் பணம்

கறுப்புப் பணம், ரமணன், கிழக்கு பதிப்பகம், ரூ 80

கறுப்புப் பணம் புத்தகத்தின் அட்டையில் புத்தகத்தின் பெயரை பெரிய எழுத்தில் சிவப்பில் வடிவமைத்துள்ளனர். கறுப்புப் பணம் என்பது பழைய சொற்றொடர். அதனை மாற்றி சிவப்புப் பணம் என்றே இனி சொல்லலாம்.

இந்தியாவின் கோடிகணக்கான கறுப்புப் பணம் சுவிட்ஸர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று நாள்தோறும் செய்திகள் வருகிறன. அதனை மீட்டு வருவோம், ஒவ்வொரு இந்தியனுக்கும் சுமார் இருபது லட்சம் கிடைக்கும் என்று சொல்லியே ஆட்சியைப் பிடித்தார்கள். இன்றும் அதே நிலையில்தான் இந்த நாடு உள்ளது.

கறுப்புப்பணம் என்றால், ப்ளாக் ஜோக்காக சொல்லவேண்டும் என்றால், கறுப்புப்பணம் கடவுளைப்போல.

கடவுளை யாரும் கண்ணால் கண்டதில்லை. அதே போல் கறுப்புப் பணத்தையும் யாரும் கண்ணால் கண்டதில்லை.. எல்லாரும் கடவுளை பற்றியும் பேசுவார்கள். கறுப்பு பணத்தைப் பற்றியும் பேசுவார்கள்.

கறுப்புப் பணத்துக்கு அனைவரும் ஒரு காரணம் என்று இந்த நூலின் ஆசிரியர் ரமணன் ஓர் அதிர்ச்சி அளிக்கிறார். அது எப்படி? வரி கட்டப்படாத எந்த ஒரு பணமும் கறுப்புப் பணமே.

நீங்கள் ஒரு உணவகம் செல்கிறீர்கள்.. அங்கு பணிபுரியும் சர்வருக்கு டிப்ஸ் அளித்தால், அது அவன் கணக்கில் கறுப்புப் பணம். இது போல. கோவில் அர்ச்சகர் தட்டில் சேரும் தட்சணையும், உண்டியல் குலுக்கி சேரும் நிதியும்கூட.

எந்த ஒரு பணத்துக்கும் முறையான கணக்கு இருக்க வேண்டும்.. அதற்கு வரி கட்டப்பட வேண்டும்.. இல்லையேல் அது கறுப்புப் பணம்தான்.

கறுப்புப் பணம் என்றால் என்ன, அது எப்படி உருவாகிறது, எப்படி பதுக்கி வைக்கப்படுகிறது, இதில் சுவிஸ் வங்கியின் முக்கியத்துவம் என்ன, சுவிட்ஸர்லாந்து தவிர மற்ற எந்த நாடுகள் கறுப்புப் பணம் பதுக்க வழி செய்கிறது எனப் பல விவரங்களை புட்டு புட்டு வைக்கிறார் நூலாசிரியர்.

ஒரு இரண்டாயிரத்தி நானூறு சதுர அடி உள்ள ஓர் அலுவலகத்திலிருந்து இந்தியாவிற்கு எவ்வளவு அந்நிய முதலீடு வர முடியும்? யோசித்து பாருங்கள். இந்தியாவிற்கு வரும் அந்நிய முதலீட்டில் 7௦% மொரீஷியஸ் நாட்டிலிருந்து வருகிறது. ஒரே முகவரியில் சுமார் 2௦௦ அலுவலகங்கள் பதியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் லெட்டர்பேட் கம்பனிகள்.

எதற்கும் நிஜமான முகம் கிடையாது.. இந்தியாவில் உள்ளது போல KYCஐ (ஒரு வாடிக்கையாளர் பற்றிய முழு விவரங்கள்) இந்த நாட்டு வங்கிகள் வைத்திருப்பதில்லை. அதனால் இந்த கறுப்புப் பணத்தை மீட்க நினைத்தாலும் முடிவதில்லை.

ஆளும் கட்சி எதிர்க் கட்சி என பல தரப்பிலும் குற்றவாளிகள் உள்ளார்கள். வேண்டாதவர்கள் தவிர அனைவரையும் காப்பற்றும் மிக பெரிய பொறுப்பு நிதி அமைச்சருக்கு உள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி, நாடாளுமன்றத்தில் சுவிஸ் வங்கி பட்டியலை வெளியிட்டால் அவர்கள் பணத்தை எடுத்து வேறு நாட்டுக்கு கொண்டுசென்று விடுவார்கள், அதனை மீட்கவே முடியாது என்றார். அப்போது பாஜக கட்சியினர் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள். அவரிடம் தகுந்த விளக்கம் கேட்டார்கள். வெளிநடப்பு செய்தார்கள்.

ஆட்சி மாறியது.. ஆனால் காட்சி மாறவில்லை. இப்போது அதையே காங்கிரஸ்காரர்கள் செய்கிறார்கள். கறுப்புப் பணத்தை மீட்க இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும் என்று தெரியவில்லை.

ரமணன் மிகுந்த நம்பிக்கை உள்ளவர். ஊழலை ஒழிக்க நினைக்கும் சக இந்தியர்களுக்கு இந்த புத்தகத்தை சமர்பித்துள்ளார். அந்த நம்பிக்கை நிஜமாகி விட்டால் இந்தியாவிற்குப் பொற்காலம்தான்.

-முருகதாஸ்

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-8414-907-9.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: