Home » Novel » சிநேகமுள்ள சிங்கம்

சிநேகமுள்ள சிங்கம்

சிநேகமுள்ள சிங்கம், பாலகுமாரன், திருமகள் நிலையம், ரூ 95

தலைப்பை வைத்து கதையை படிக்கவைப்பது ஒரு கலையே. சிநேகமுள்ள சிங்கம். சிங்கம் எப்படி சிநேகமுள்ளதாக இருக்கும். அப்படியானால் அது நாய்தானே. சிங்கமாகவே இருந்தாலும் அதனிடம் நாம் எப்படி சிநேகமாக இருக்க முடியும்? தலைப்பில் எத்தனை கேள்விகளை யோசிக்க வைக்கிறார் பாலகுமாரன்.

சிநேகமுள்ள சிங்கம் நாவலில் சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாநில கல்லூரியை கண்முன்னே நிறுத்துகிறார். சித்திரை பாண்டி என்ற ஓர் இளைஞனை அரசியல் எப்படி மெதுவாக தன்னுள் இழுக்கிறது என்று அடுக்கடுக்கான சம்பவங்கள் மூலம் சொல்கிறார்.

அவனது கல்லூரிக் காதல், மோதல், காமம், பாசம் எல்லாம் அடுக்கடுக்கான சம்பவங்களால் கதை வேகமாக நகர்கிறது.

முதல் முறை உணர்ச்சி வேகத்தில் ஒரு கொலை. அதன் பிறகு சிறைவாசம். நடுவில் காமம் காதல், அதன் பிறகு பொறுப்பு, படிப்பு, பாசம், தத்துவம், என பலப்பல அத்தியாயங்கள்.

அரசியலுக்கு வரவேண்டும் என்றால் சட்டம் தெரிய வேண்டும் அதற்காக இரண்டாவது கொலை. பாலகுமாரன் எழுதும் கதை களனை நன்கு ஆராய்ச்சி செய்து சில உண்மைகளை கதையின் ஊடே எழுதிவிடுவார்.  அவரது கதைகளில் “இரும்பு குதிரைகள்” லாரி பிஸினெஸ்தான் களம். ”பயணிகள் கவனிக்கவும்” கதையில் சென்னை விமான நிலையம். அதில் நடக்கும் ஒரு குண்டு வெடிப்பு, அதனால் பாதிக்கப்பட்ட பெண். ஒரு கதையில் சில உண்மைகளையும். நல்ல கற்பனைத் திறனையும் சேர்த்து கதையைப் படிக்கும் வண்ணம் செய்வது, பாலகுமாரனின் திறமை.

பாலகுமாரன் நாவலில் சில தத்துவங்களை அவரது ரசிகர்கள் புத்தகத்தில் சிகப்பில் கோடிட்டு வைத்திருப்பார்கள். அதை மேற்கோள் காட்டவும் செய்வார்கள். அரசு நூலகத்தில் பாலா நாவல்கள் படித்ததில் இது தெரிந்தது. அப்படி கோடிட்ட ஒரு அத்தியாயத்தில், ஒன்று அல்லது ரெண்டு வரிகள் நிச்சயம் அனுபவ உண்மையே. ”நோயில் விழும்போதுதான் பெண்ணின் துணை எவ்வளவு பலம் என்பதை ஆண் உணர்கிறான்.” இந்தக் கதையில் உள்ள இந்த வரி. எனக்கு உடனே ஞாபகம் வருகிறது. இப்படி நிறைய அத்தியாயம் தோறும் வருகிறது.

அரசியல்வாதிகள் எல்லாரும் அரசியல்வாதிகளே. மனிதபிமானம் உள்ளவர்களோ, நன்றயுள்ளவர்களோ அல்ல. எந்த நேரமும் காலை பிடிப்பார்கள் சமயம் வரும்போது காலை வாருவார்கள். கழுத்தையும் வெட்டுவார்கள். கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலே சாவு என்பது போல, அரசியலால் பாதிக்கபட்டவன் அரசியலிலே, அது நதியாக இருந்தாலும், சாக்கடையாக இருந்ந்தாலும் அதிலேயே பயணிக்கிறான், பிழைக்கிறான் பின் மரிக்கிறான்.

கல்லூரியில் அரசியல் எவ்விதம் ஆரம்பிக்கறது, ஒரு கல்லூரிக்கும் இன்னொரு கல்லூரிக்கும் மோதல் என பலவற்றைப் பற்றி இந்நாவலில் குறிப்பிடுகிறார். ஒரே கல்லூரியில், ஜாதி பிரச்சனைகள், ஆண் பெண் பேதம், கலைத்துறை அறிவியல்துறை என்ற பாகுபாடு, யார் தேர்தலில் நிற்பது, யார் போட்டி, யார் ஆதரவு, பின்புலத்தில் எந்த்த் தலைவர், எந்த கிரிமினல், எந்த கட்சி இருக்கிறது, அதில் பார்ப்பனர்கள் யார் பக்கம்…

இதில் முக்கியமாக தமிழ் மொழி. தமிழ் இல்லாமல் தமிழ் நாட்டில் அரசியல் செய்ய முடியாது. அதே நேரத்தில் தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. ஹிந்தி கற்றுக் கொள்ளாததால் தமிழகத்துக்கு என்ன இழப்பு என்று வேறு ஒரு கதையில் பாலா விவரிக்கிறார். ஒரு கதையின் தொடர்ச்சி அதே களத்தில் இன்னொரு நாவலில் வரும். ஆனால் எந்தக் கதையின் தொடர்ச்சி எந்தக் கதை என்று அவரின் தீவிர வாசகர்களுக்கே தெரியும். பாலகுமாரனுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. பலவேறு களத்தில் கதை எழுதி முடித்து இப்போது முழுவதும் ஆன்மிகம் மட்டுமே எழுதுவது ஒரு எழுத்தாளரின் நல்ல முதிர்ச்சி.

– சுப்பிரமணியன் சேதுராமன்

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0001-271-9.html

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


1 Comment

  1. அன்புடன் சுப்பிரமணியன் சேதுராமன்,
    வணக்கம் .பாலகுமாரன் அவர்களுக்கு தனி வாசிப்பாளார்கள் இருக்கிறார்கள் என்பது யாவருக்கும் தெரியும் .மற்ற நூல் விமர்சனங்களை விட அவர் நூல் வாசிப்பின் தளம் வேறு என்பதை நீங்கள் அறிவீர்கள் .உங்களின் எழுத்து ஆளுமையில் உங்களின் வாசிப்பின் நுட்பம் தெரிகிறது ஆனால் .இன்னும் நீங்கள் சில அடிகள் இந்த வாசிப்பில் மூழ்கி இருந்து மேலும் சில முத்துக்களை தந்து இருந்தால் என்னைப்போல பலரும் கூடுதல் சந்தோசம் பெற்று இருப்போம் .நன்றி .

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: