Home » Religion » நூற்றியெட்டு ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்கள்

நூற்றியெட்டு ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்கள்

நூற்றியெட்டு ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்கள், வேணு சீனிவாசன், கிழக்கு பதிப்பகம், ரூ 400

இந்த நூல் உங்கள் கையில் கிடைப்பது கடவுளின் அருள் என்றே உணரவேண்டும். “ அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி” என்பார் மாணிக்கவாசகர். முதலில் இந்த புத்தகத்தை ஒரு ஆன்மீக நூலாகவே எல்லோரும் பார்ப்பார்கள். ஆனால் இதை ஒரு சிறந்த பயணக் கையேடாக உபயோகபடுத்தலாம்.

நூற்றியெட்டு திவ்ய தேசங்கள் இந்தியாவின் எல்லா  பகுதிகளிலும் உள்ளது. அதில் பாதி தமிழகத்தில் உள்ளது. என் நண்பர் இந்தப் புத்தகத்தை பரிந்துரை செய்தார். எனக்கு பயணம் செய்வதில் ஆர்வம் உள்ளது. ஆனால் ஆன்மீக நாட்டம் அதிகம் இல்லை. இந்த புத்தகத்தை என்னிடம் கொடுத்து முதலில் சென்னையை சுற்றியுள்ள திவ்ய தேசங்களை பார்த்து வாருங்கள், நிறைய செய்திகள், பல அனுபவங்கள் கிட்டும் என்றார்.

நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் முதலில் சென்னையைச் சுற்றியுள்ள கோவில்களில் எனது பயணத்தைத் தொடங்கினேன்.

சென்னையை சுற்றியுள்ள திவ்ய தேசங்கள் பின்வருமாறு:

 1. திருவல்லிக்கேணி
 2. திருவள்ளூர்
 3. திருநீர்மலை
 4. திருவிடந்தை
 5. மகாபலிபுரம்
 6. சோளிங்கர்
 7. திருநின்றவூர்

முதலில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி. ” குழந்தைக்களுக்கு சொல்ல கிருஷ்ணன் கதைகள் உகந்தது.”  கிருஷ்ணருக்கு ஏன் மீசை இல்லை என்று என் மகன் ஒருமுறை கேட்டான். உலகில் திருவல்லிகேணியில்தான் கிருஷ்ணருக்கு மீசை உள்ளது. இங்கு மட்டும்தான் கிருஷ்ணர் ருக்மணி, பலராமர் சாத்யகி அநிருத்தன், பிரத்யும்னன், குடும்ப சகிதமாக காட்சியளிக்கிறார்.

பீஷ்மர் விட்ட அக்னி அம்புகள் கிருஷ்ணரைத் தாக்கின, அதனால் அவர் முகத்தில் வடுக்கள் தோன்றின. இங்குள்ள கோவிலில் மூலவரும், காயங்களுடனே இருக்கிறார். இதன்படிப் பார்த்தால், கிருஷ்ணர் என்பவர், கதையைத் தாண்டி ஒரு வாழும் மனிதராகவே மக்களுக்குத் தோன்றுகிறார்.

புதிய செய்தியாக இதை நான் தெரிந்து கொண்டேன். மகாபாரதத்தை இன்னொரு முறை முழுமையாக படிக்கும் ஆவலை இந்தப் பயண நூல் எனக்கு ஏற்படுத்தியது.

அடுத்து திருநின்றவூர், திருவள்ளூர் சென்றேன். சென்னை சென்ட்ரலில் ரயில் பிடித்து நேராகச் செல்லலாம். (நூல் ஆசிரியர் சில இடங்கள் பற்றி, பயணம் செய்யாமல் எழுதியது போல உள்ளது.) பல இடங்கள் செல்லும் விவரத்தை திருத்தம் செய்ய வேண்டுகிறேன். இவர் சொன்னது போல பூந்தமல்லி, திருவள்ளூர் வழியாக திருநின்றவூர் செல்வது அதிக நேரம் பிடிக்கும்.

சோளிங்கர் மலையை எப்படி ஏறுவேன் என்று மலைப்புதான் ஏற்பட்டது. ”முதல் அடியை எடுத்து வையுங்கள்….  பகவான் தானாகவே நம்மை நோக்கி முன்னறி வருவார்.” சக பயணி ஒருவர் சொன்ன தத்துவம் இது. மலை ஏறத் தயங்கிய என்னை, கதையும் தத்துவமும் சொல்லியே அழைத்து வந்து விட்டார். ஒரு வேளை இவரைச் சந்திக்கவே விதி என்னை இங்கு அழைத்து வந்ததா? ஆன்மீக நாட்டம் இல்லாமல் என்னைப் போல் இருப்பவரையும் இது போன்ற பயணங்கள் கடவுளை நோக்கி இழுக்கிறதா? யாம் அறியோம் பராபரமே!

திருநீர்மலை: ஹீரோ பல பல  புகைப்பட போஸ் கொடுப்பது போல நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான்.. பல கோலங்கள்.

மகாபலிபுரம் மற்றும் திருவிடந்தை ஒரே நாளில் பார்த்துவிடலாம். ஒருநாள் கல்யாணம் என்றாலே ஜே ஜே என்று இருக்கும். திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாள். திருமணத் தடை நீங்க மக்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். அருகில் இருக்கும், முட்டுக்காடு, முதலை பண்ணை, விஜிபி, கோவளம் பீச் என்று ஒரே நாளில் எல்லா இடங்களும் பார்த்தால் பெரியவர்களையும் குழந்தைகளையும் ஒரே பயணத்தின் மூலம் திருப்திப்படுத்தலாம். நித்யகல்யாணப் பெருமாள் கோவிலுக்கு வந்தால் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள். அந்த நம்பிக்கையே அவர்கள் நினைத்த காரியத்தை நடத்துகிறது.

இந்தப் பயணங்கள் என்னுள் பல நம்பிக்கைகளை விதைத்துள்ளது. ஒவ்வொரு மாவட்டமாக சுற்றி வந்தால் நான் பரமபதம் சேர்வதற்குள் குறைந்தது நூறு திவய தேசத்தை பார்த்து (சேவித்து) விடுவேன்.

– ரமேஷ் அகிலன்

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-5135-197-9.html

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


1 Comment

 1. //நூல் ஆசிரியர் சில இடங்கள் பற்றி, பயணம் செய்யாமல் எழுதியது போல உள்ளது.//

  இருந்த இடத்தில் இருந்து கொண்டே பல புத்தகங்களைப் பார்த்து, படித்து, தரிசன அனுபவம் ஏதும் இல்லாமல் எழுதினால் அப்படித்தான் சார் இருக்கும்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: