Home » Short story » பழைய கணக்கு

பழைய கணக்கு

எப்போதும் தான் வாழும் மண் சார்ந்த கதைகளைச் சொல்லும்போது எல்லோருக்குள்ளிருந்தும் ஓர் அற்புதமான ஒரு படைப்பாளி வெளிப்படுகிறான் என்பதற்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற பல சிறந்த எழுத்தாளார்களை நாம் கவனித்து வருகிறோம். அவர்களுள் ஆமருவி தேவநாதனும் ‘பழையகணக்கு’ (புனைகதைகள்) என்ற இந்தப் படைப்பு மூலம் கலந்துவிட்டார். மொத்தக் கதைகளுள் 90 சதவிகிதம் உண்மைச் சம்பவங்களால் பின்னப்பட்ட கதைகள் என்பதால் கூடுதல் பலம் சேர்த்து, உணர்வுகளைக் கவனிக்க வைத்து படிக்கத் தூண்டுகிறது. இவரிடம் இன்னும் சிறந்த படைப்புகளை நம் தமிழ் சமூகம் எதிர்பார்க்கலாம்.

பழைய கணக்கு, ஆமருவி தேவநாதன், ரூ. 80

முதல் மூன்று, 1. சொத்து, 2. பழைய கணக்கு, 3. உபகாரம் போன்ற கதைகள் படித்தபோது கொஞ்சம் சிறுகதை சொல்வதற்கான உத்திகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உண்மைக் கதைப்பாத்திரங்கள் என்பதால் சம்பவங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பாத்திரங்களின் உணர்வுகளில் குறைந்து இருந்ததால் தொடர்ந்து படிக்க முடியாமல் தளர்ந்தேன். ஆனால் ‘கரிய நிலம்’ என்ற நான்காவது கதை கொடுத்த வேகம் புத்தகத்தை ஒரே மூச்சில் மீதி அத்தனை கதைகளையும் படிக்கத் தூண்டும் விதமாக மிகச் சிறப்பான அதே சமயம் அழுத்தமான உணர்வுகளில் ஆசிரியர் தேவநாதனால் பதியப்பட்டு இருக்கிறது.

ஐந்து மற்றும் ஏழாவது கதைகளான ‘மாயவரமும்’, ‘ஸார் வீட்டுக்குப் போகணும்’ போன்ற கதைகள், தமிழாசிரியர்களின் தமிழ்ப் பற்றையும் தங்கள் இறுதி மூச்சு வரை அவர்கள் தமிழ் மேல் வைத்து இருந்த தீராத தேடல்களையும் மிக வலி மிகுந்த சம்பவங்களைக் கொண்டது. முக்கியமாக,

‘நம்ம நாட்டுல தமிழையும் ஆன்மிகத்தையும் பிரிச்சுட்டாங்க, செக்யூலர் என்ற போர்வையில் தமிழின் ஆன்மாவை அதனிடமிருந்து பிரித்து விட்டார்கள். இதை எப்படியாவது ஒன்று சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மொழி அழிந்துவிடும்.’ (மாயவரமும் பக்.37). இன்றைய தமிழ் மொழியின் தேவையை நிதர்சனமாகப் படம் பிடிக்கும் வார்த்தைகள் அவை.

அடுத்து ஏழாவதான ‘ஸார் வீட்டுக்கு போகணும்’ கதையில்,

‘குரு என்பவர் நம் உடலின் இடைப்பகுதி போன்றவர். இடுப்புக்கு மேலே பரமாத்மா, இடுப்புக்குக் கீழே ஜீவாத்மா. இரண்டையும் இணப்பது குரு’ (பக்.59) என்ற உவமை தமிழுக்கு அதுவும் ஆன்மிகத்திலிருந்து பிரிக்க முடியாத தமிழுக்குப் புதிய விஷயமாக விளக்குகிறார் ஆசிரியர் தேவநாதன். ஆன்மிகத்தின் திறவுகோலான மூலாதாரம் என்ற பகுதியும் அதில் குண்டலினி என்ற பேராற்றல் அடங்கியிருப்பதையும் அதையறிந்து குரு அதைத் தொட்டு எழுப்பித் தருவதும் அற்புதமான குறியீடு.

இதில் ஆறாவது கதை ‘தரிசனம்’ என்ற கதை காஞ்சி பெரியவரை பற்றிச் சொல்லும் ஒரு செய்தி சொல்வது மிக அற்புதம்.

‘பெரியவர் அப்பாவை தீர்க்கமாகப் பார்த்தார். தனது தடித்த கண்ணாடியின் வழியாக அவர் பார்த்தது பல ஆயிரம் ஆண்டுகள் முன்னிருந்து எங்களைப் பார்ப்பது போலப் பட்டது’ (பக்.49). ஞானிகளின் முக்காலம் உணர்ந்த பார்வையைப் பற்றி அங்கு சொல்லப்பட்டு இருக்கும்.

அதே போல் எட்டாவது – ஒரு தேரின் கதை. ஒன்பதாவது – அனுமன் சொன்ன கதை, பத்தாவது – வாசல், பன்னிரண்டாவது – ஆமாம் கொலைதான் போன்ற நான்கு கதைகளும் வரலாற்றையும் அதனுள் நடந்த ரகசிய உண்மைகளோடு அமானுஷ்யம் கலந்து, மிக ஆழமாக விவரிக்கப்பட்டவை. வரலாறு வாய்கொண்டு பேசும்போது நாம் எதிர்பார்க்கும் நிகழ்வுகள் மறைந்து போய்விடும் என்பதில் அக்கறை கொண்ட பதிவுகள் இவை. ஆனால் காலத்தின் அழகியல் உணர்வோடு செதுக்கப்பட்ட கதைகள்.

பதினொன்றாவது கதை, ‘ரங்கு என்ற ரங்கபாஸ்யம்’ – ஆழ்வார்கள் பாசுரமும் ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரியும் சந்திக்கும் முடிச்சுகளைத் தொட்டு ஆய்வு செய்யும் விதமான கதை இவை. எனக்கு இந்தக் கதையும் இதற்கு அடுத்து பதிமூன்றாவதான ‘கொஞ்சம் வரலாறு கொஞ்சம் சுவாசம்’ கட்டுரை வடிவக் கதையும் மிகவும் பிடித்தவை. இந்தக் கட்டுரையில் தனது ஆவேசமான வரலாறு பாதுகாக்கப் படவேண்டும் என்று வலியுறுத்தும் ஆசிரியர், சகலமும் அறிந்த இறைவனிடம் நாம் வேண்டிப் பெற வேண்டியது எதுவுமில்லை என்பதை ஆன்ம நேயத்துடன் அழுத்திச் சொல்கிறார். அற்புதமாக இருக்கிறது. ஆசிரியர் ஆமருவி தேவநாதனின் முதல் படைப்பே முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

சு. கிருஷ்ணமூர்த்தி

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-463-6.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: