Home » Short story » பழைய கணக்கு

பழைய கணக்கு

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு எப்போதும் தங்கள் தாய் மண் பற்றிய சிந்தனை அவ்வப்போது வாட்டும். அதுவே அவர்கள் கவிதை, கதை, இலக்கியம் என்று தங்கள் மண் பற்றிய சிந்தனை வரும் விஷயங்களில் ஈடுபட முக்கிய காரணம்.

பொங்கலுக்குப் பின் சென்னை நகரமே ஒரு பத்து நாள் காலியாக இருக்கும், போகி அன்று அடித்துப் பிடித்து எப்படியாவது பொங்கலுக்கு ஊரில் இருப்பார்கள். அதே உணர்வுதான் இத்தனை சிறுகதைகளுக்கு வித்து.

பழைய கணக்கு, ஆமருவி தேவநாதன், விலை: ரூ. 80

எல்லோருக்கும் தன் சொந்த மண்ணுக்குத் திரும்பி வரவேண்டும் என்றுதான் விருப்பம். அதனால் வருடத்துக்கு ஒரு முறை சைபீரீயாவிலிருந்து வேடந்தாங்கல் வருடம்தோறும் வரும் பறவைகள் போல பிறந்த மண்ணுக்கு ஏதோ ஒரு காரணம் சொல்லி வந்து போய்விடுகிறார்கள். அந்தக் காரணம், வேண்டுதல், குல தெய்வம், ஊர்த் திருவிழா, படையல், நேர்த்திக் கடன், காது குத்து, கல்யாணம் என பல காரணங்கள் இருக்கலாம். எப்படியாவது இங்கு வந்துவிடவேண்டும் என்ற பேர் அவா, மன உந்துதல்.

சிறுகதை படிப்பதில் ஒரு மிகப்பெரிய சிரமம் உள்ளது. சிறுகதைகளை தொடர்ந்து படிக்க முடியாது, படிக்கவும் கூடாது.

ஒரு நல்ல மென்மையான உணர்வு தரும் கதை சொன்ன பிறகு, அடுத்த கதை ஒரு வலியைக் கொடுக்கலாம். அதனால் எனக்கு, சிறுகதை படிப்பதற்கு நீண்டநேரம் எடுக்கும். கரிய நிலம் அப்படி ஒரு வலியைக் கொடுக்கும் சிறுகதை.

இவ்வளவு நாள் தனக்கு தனியாக, சைவ சாப்பாடு போட்ட பாய் கடை இருந்த இடத்தில், மிஞ்சி இருப்பது கரிய நிலம் மட்டுமே.

நாம் படித்துவிட்டு எழுதவேண்டியதை, ஆமருவி தேவநாதனும், சித்ராவும் முன்னுரை மற்றும் என்னுரையிலே கொடுத்துவிட்டனர்.

ஒரு நல்ல தமிழாசிரியரை இந்தச் சமூகம் எப்படி அலைக்கழிக்கிறது… மாயவரம் கதை சொல்லும் நிஜம். தமிழால் ஆட்சியைப் பிடித்து பல கோடி சொத்து சேர்த்தவர்கள் ஒரு தமிழாசிரியரை புறக்கணித்தே கொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் அரசியல் பல களங்களில் உள்ளது. கோஷ்டி அரசியல், ஜாதி அரசியல், மத அரசியல், இன அரசியல், மொழி அரசியல், கோர்போரடே அரசியல் என்று பல களங்களில்… இப்படி எல்லா அரசியலும் சேர்ந்து தமிழை வாழ வைத்தவர்களை வதைக்கிறது.

தேர்… தேரேழுந்தூர்… தேர் எரிந்து… பின் தேர் எழுந்த கதை சொல்லும்.

ரங்கு என்ற பாத்திரம் போல எல்லா கல்லூரியிலும், சில அறிவுஜீவிகள் இருப்பார்கள்.
என் வகுப்பில், ரங்கு போலவே ஒரு அதி புத்திசாலி இருந்தான்.  ஒரு நல்ல ஆசிரியர் கண்ணில் பட்டதால், அவன் நல்ல நிலைக்கு வந்தான். இல்லாவிட்டால், ரங்குவைப் போல எல்லோரும் சேர்ந்து அவனை பைத்தியம் ஆக்கி இருப்பார்கள்.

“ஆமாம் கொலைதான்…” அறம் வழி நிற்பவர்கள் எப்படியும் உதவிக்கு வருவார்கள் என்பதை, “தெய்வம் மனுஷ்ய ரூபேனாம்” என்பதை உணர்த்துகிறது.

சென்னையிலிருந்து திருமலைக்கு தினமும் பாக்கேஜ் டூர் சுமார் ஆயிரம் கார்கள் செல்கின்றன. காலை ஐந்து மணிக்குக் கிளம்பி, மாலை ஐந்து மணிக்கு தரிசனம் முடித்து திரும்ப கொண்டுவந்து விட்டுவிடுவார்கள். அவசர யுகத்தில் அவசர பக்தி… அவசர தரிசனம்… எல்லாம் அவசரம்… என் பாட்டி ஒரு முறை தெரியாத்தனமாக பாக்கேஜ் டூர் சென்று வெறுத்து, அடுத்த முறை “யாரும் வேணாம்… எனக்கு பெருமாள் மட்டும் போதும், என்னை பெருமாள் பார்த்துப்பார்” என்று தனியாக நடந்தே வந்து தரிசனத்தை முடித்த என் பாட்டியின் நினைவு தந்தது “கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் சுவாசம்.”

சேது

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-463-6.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: