Home » Articles » தாயார் சன்னதி

தாயார் சன்னதி

NOSTALGIA என்பதற்கு தமிழ் பதம் என்ன?
உங்களுக்கு இது சொந்த ஊர் இல்லை. வேலை பிழைப்புக்காக நீங்கள் நகரம் என்னும் நரகத்தில் துவள்கிறீர்கள். அப்படிதேய்…

உங்களின் ஊரின் சந்துகளுக்குள் அழைத்துப்போக ஒரு நண்பர் கிடைத்தால் எப்படி இருக்கும்..?
அப்படியே… திருநெல்வேலியை சுற்றியும் காண்பிக்கிறார் கதைகளும் சொல்கிறார் சுகா.

தாயார் சன்னதி, சுகா, சொல்வனம், ரூ. 200

முதலில் தாயார் சன்னதி… என்னை மிகவும் நெகிழ வைத்தது. எனக்கும் கீமோ தெரபி கொடுக்கப்பட்டு மொட்டையாகி… ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டேன். அதே போன்ற வலி, அதே அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட். இதில் தாயாரின் வலி, முஜிபுர், மூன்றாம் பிறை பாட்டி, அவர் மகன் என பலரின் வலிகளை சுமந்துள்ளது.

கயத்தாறு – கீரை விற்பவர்களைப் பற்றி… வட்டார மொழி சொல்லி கதை சொன்னால் இன்னும் நாம் எழுத்தாளர் பக்கத்தில் இருப்பது போல ஒரு உணர்வு. தி.ஜா.வின் மோகமுள் படித்து கும்பகோணம் தெருக்களில் சுற்றிவந்தால் தெரியும். அதுபோல திருநெல்வேலியில் சுகா.

டீச்சர்களுக்கு நம் வாழ்வில் முக்கியமான ஒரு பங்கு… பாலு மகேந்திராவின் இந்து டீச்சர் போல அனைவர்க்கும் ஒரு டீச்சர்… இங்கு லோகநாயகி டீச்சர். எனக்கு கலா டீச்சர். தீரா நோயின் பிடியில் இருப்பவர்களுக்கு தங்கள் வாழ்வில் சந்தித்த நல்லவர் அடிக்கடி நினைவுக்கு வருவார்கள். அப்படியே என் கலா சொன்ன சரித்திரக் கதைகள்தான் என்னை கதைகளின் பித்தனாக ஆக்கியது.

பெரியவர்கள் தங்கள் தோல்வியை சின்னவர்கள் முன் காட்ட மறுப்பார்கள். அதை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார்… ரங்கராட்டினம் (GIANT WHEEL). நம்முடைய பக்கத்தில் இருப்பவர்களின் திறமை நமக்குத் தெரிவதில்லை அல்லது நாம் கவனிப்பதில்லை. தி.ஜா.வின் நளபாகம் நாவலில் கதாநாயகன் கட்டை விரலால் வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவுவது அவர் மனைவிக்கு ரொம்ப நாள் கழித்துதான் தெரியவரும்… பாலு மகேந்திராவுக்கு சுகாவின் இசை ஞானம் கவனிக்கப்படவில்லை.

நாம் நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை மனிதர்களை இன்னும் உற்று நோக்க இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஒரு பிள்ளையார் சுழி.

சாப்பாடு பரிமாறுவதில் பல நுணுக்கங்கள் உள்ளன. உப்பு எங்கே வைக்க வேண்டும். கறி கூட்டு, சாம்பார், ரசம் என அனைத்தும் பரிமாற ஒரு விதி பட்டியலே உள்ளது. அதுவும் திவச சாப்பாடு என்றால் இன்னும் கூடுதல் கவனம் வேண்டும். இது பற்றி விலாவாரியாக “பந்தி” சிறுகதையில் சுகா விவரிக்கிறார்.

ஒரு வகையில் பார்க்கும்போது திவச சமையல் என்பது பெண்களை எப்படி அடிமைப்படுத்துகிறது என்று யோசிக்க வைக்கும். எந்த ஒரு சமையலையும், சரியாக இருக்க என்று ஒரு ருசி அல்லது பதம் பார்த்துவிட்டு பெண்கள் எல்லோருக்கும் பரிமாறுவார்கள். ஆனால் திவச சமையல் ருசி பார்த்து படைக்க முடியாது. இருபது வகையான பதார்த்தங்களைச் செய்வது ஒரு பெரிய வேலை. அதிலும், குறை கண்டுபிடித்தால் நமக்கு கோபம் வரும். இதில் பரிமாறுபவர்கள் ஆண்களாக இருந்தாலும் பெண்களுக்குதான் வசவு விழும். நான் நேரில் கண்டது. சுகா இந்தக் கதையில் பெண்களைப் பற்றி சொல்லாமல் சொல்கிறார்.

சினிமா ஸ்டார்ஸ் என்னும் நடிகர்களை நேரில் பார்ப்பது ஒரு த்ரில் தான். நட்சத்திரம் பார்த்தல் கதையில், நம்முடைய அபிமான நடிகர், எழுத்தாளர்கள் என்றால் நமக்கு ஒரு குதூகலம் தோன்றும். இசை ஞானி இளையராஜாவின் சகோதரர் ஒருமுறை மதுரையில் நடிகர் சிவாஜியை எப்படியாவது அருகில் போய்ப் பார்க்க வேண்டும் என்று பேர் ஆவல். எப்படியோ சிவாஜி அருகில் சென்று கூட்டத்தில் அவர் கையைத் தொட்டுவிட்டார். அதன் பிறகு மூன்று நாட்களுக்கு கடும் சுரம். ஒரு உண்மையான ரசிகனின் உணர்ச்சி வெளிப்பாடே அந்த சுரம்.

இப்படிப்பட்ட சுரம் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு முறையாவது வரும் – இந்தத் தொகுப்பு முழுவதும் வாழ்வின் அனுபவங்கள் பரவியுள்ளது.

கதைகளுக்கு ஏற்றதுபோல ஓவியங்கள் அளித்துள்ளது அருமை. கதையோடு ஓவியத்திலும் உங்கள் மனம் சிறு தூரம் பயணித்து வரும்.

அட்டைப்படம் எங்கள் தெருவில் உள்ளது என்று உங்களுக்குத் தோன்றும். அதில் நடந்து போவது உங்கள் அத்தை தானே. புத்தகம் படித்துவிட்டு அட்டைப்படத்தைப் பார்த்தல் உங்கள் அத்தையாகவே தோன்றும். “இதுவும் ஒரு நல்ல ரசிகருக்கு வரும் சுரம்.”

ஸ்ரீராம் & சுப்ரமணியம்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0000-192-5.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: