Home » Short story » அப்பாவின் ரேடியோ

அப்பாவின் ரேடியோ

சுஜாதாவின் சிறுகதை என்றுமே ஒரு இனிய அனுபவமோ அல்லது அதிர்ச்சியோ கொடுக்கும். சுஜாதாவின் சிறுகதைகளில் சில எனக்கு வரிக்கு வரி மனப்பாடம். அதிலும் கடைசியில் அவர் கொடுக்கும் ஷாக் அல்லது திருப்பம் அலாதியானது.

அப்பாவின் ரேடியோ, சுஜாதா தேசிகன், பத்து பைசா பதிப்பகம், ரூ. 110

எனக்குப் பிடித்த கதைகளில் சில. இன்றும் வரிக்கு வரி ஞாபகம் இருக்கும்… முயல், அரிசி, தேன்நிலவு, திமலா, (ஒரு லாட்டரி டிக்கெட் நம்பர்) வந்தவன், முதல் மனைவி, கர்ஃப்யு (curfew), அரங்கேற்றம் என்பவை சில…

சுஜாதாவின் தீவிர ரசிகர் என்பதால் சுஜாதாவின் பாணி சில கதைகளில் தெரிகிறது. சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் மீண்டும் அனுபவிப்பது போன்ற உணர்வு.

எல்லா சிறுகதைத் தொகுப்புகள் அதிலுள்ள ஒரு சிறந்த கதையின் தலைப்பே புத்தகத்தின் தலைப்பாக வைப்பது மரபு. அதே போன்று சுஜாதா தேசிகனின் அப்பாவின் ரேடியோ நிச்சயம் ஒரு சிறந்த படைப்பு. இந்நாட்களில் பழைய வால்வு ரேடியோ காணக் கிடைப்பதில்லை. உங்கள் வீட்டுப் பரணில் தட்டுமுட்டுச் சாமான்களில் ஒரு பொக்கிஷம் ஒளிந்திருக்கும். அப்படித் தேடிய தேசிகனுக்கு ராஜாஜி எழுதிய கடிதம் போல எதாவது கிடைத்தால் அது தேசிகனின் வெற்றி.

வின்னி போன்று உங்களுக்கும் ஒரு நண்பன் இருக்கலாம். அவனை பல வருடங்கள் கழித்து நல்ல சந்தர்ப்பம் அல்லது அல்லாத சந்தர்ப்பம் ஒன்றில் சந்திக்கலாம்.

தேசிகனின் எல்லாக் கதைகளும் ஒரு அனுபவத் தொகுப்பாகும். இது எல்லாருக்கும் வாழ்க்கையில் வந்து போன சம்பவங்கள்தான். அதை நன்றாக அனுபவித்து ஒரு சிறந்த கதையாகக் கொடுப்பவரே ஒரு சிறந்த எழுத்தாளர். அவ்வகையில் என் வாழ்விலும் இதுபோன்ற சம்பவங்கள் வந்துள்ளன. இப்போது நினைத்து சந்தோஷப்பட்டு கதையாக மாற்றலாம்.

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகளில் வரும் பாம்பு அடிக்கும் அத்தியாயம் போல, நடு இரவில் கீச் கீச் என்று சத்தம் போடும், எலியை வேட்டையாடும் படலம் எல்லார் வீட்டிலும் நடக்கும். ’கீச் கீச்’ எலி என்று நினைத்தால் அது எலியா, சுண்டெலியா பெருச்சாளியா, அல்லது ரெண்டும் இல்லாமல் மூஞ்சூரா… இந்தச் சிறுகதை நல்ல ஹாஸ்யத்துடன் விவரிக்கிறது.

பில்லா – ஒரு நாய் கடித்த அனுபவம்

குரைக்கிற நாய் கடிக்காது என்று குரைக்கும் நாய்க்கும் சரி கடிக்கும் நாய்க்கும் சரி நிச்சயமாகத் தெரியாது.

குழந்தை வளர்ப்பதில் உள்ள அன்றாட பிரச்சனைகள், குடும்ப நிகழ்வுகள் பச்சை உருண்டை கதையில் வருகிறது. இதில் குழந்தை பாச்சை உருண்டையை சாப்பிட்டது, என் பையன் ஒரு கொய்யாப்பழத்தை.

உயிர் நண்பன் அறுவை சிகிச்சை செய்த டாக்டராகவோ அல்லது ஊசி போட்ட செவிலியாகவோ இருக்கலாம். மாமா தயவு இருந்தால் மலையை தாண்டலாம் என்பது பேச்சு வழக்கு.

இருபதாம் நூற்றாண்டு ஐ டி கைஸ்

இதை நம்ப வேண்டும் என்றால் “அபார்ட்மெண்ட்” கதையைப் படித்தால் தெரியும். அல்லது நீங்கள் ஒரு சிக்கலில் மாட்டி “ஒரு நம்பிக்கையை இன்னொரு பெரிய நம்பிக்கை வைத்து வீழ்த்துவது இரு கோடுகள் தத்துவம் போல”. அதனை ஒரு சின்ன செயல் மூலம் உங்கள் மாமா தீர்த்து வைத்தால் நம்புவீர்கள்.

ஆண்கள் திருமணம் அமெரிக்காவில் இருந்தாலும், அதன் தாக்கம் இங்கே வந்தால் என்ன ஆகும்… “லக்ஷ்மி ராதா கல்யாண வைபோகமே” கதையில் நகைச்சுவையுடன் சொல்கிறார்.

சுஜாதாவின் கதைகளைப் படித்து பெங்களூர் தெருக்களில் சுற்றிவருவேன் என்று அப்போது நினைக்கவில்லை. ஆனால் பம்பாயில் வேலை கிடைத்து என்னை பெங்களூர் போஸ்டிங் போட்டார்கள். அதுவே என் உண்மை ஆசையை நிறைவேற்றியது.

இந்தத் தொகுப்பில் ஒரு அறிவியல் புனைகதையில் சுஜாதாவின் ரசிகராக… என்னை அவரிடம் கொண்டு சென்றது.

இப்போது மாணவர்கள் பாடத்தைத் தவிர படிப்பதில்லை என்று பரவலாக சொல்லப்படுகிறது. தவிர என் கல்லூரி நாட்களில் நாடகம் போடுகிறேன் என்று ஒரு குரூப் எப்போதும் “டேபரென்ட் டேபரென்ட்” என்று புதுமைபற்றி பேசிக்கொண்டிருப்பர்.

இப்போது அதே டிரென்டு விஸ்காம் படித்துவிட்டு ஆளுக்கு ஒரு கேமெராவைத் தூக்கிக்கொண்டு அலைகிறார்கள். ஆனால் நல்ல கதை, நல்ல திரைக்கதை கிடைப்பதில்லையே. அதன் காரணம், அவர்களுக்கு சிறுகதை வாசிப்பு இருப்பதில்லை.

அப்படிப் படிக்க ஆரம்பிக்க, நல்ல திரைக்கதை எழுத, இந்த “அப்பாவின் ரேடியோ” சிறுகதைகள் நல்ல துவக்கமாக இருக்கும்.

எஸ். சுப்ரமணியன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0000-812-4.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: