Home » Articles » கேள்விகள் பதில்கள்

கேள்விகள் பதில்கள்

இந்த நூலின் ஆசிரியர் நமக்கு நன்கு பரிச்சயமான பிரபல எழுத்தாளர், பேச்சாளர், சமூக நல ஆர்வலர், (கொஞ்ச காலம்) அரசியல்வாதி என பன்முகம் கொண்ட திரு. ஞாநி அவர்கள். இவர் பல கட்டுரைகள், நாடகங்கள், புத்தகங்கள் எழுதியுள்ளார். சில திரைப்படங்கள் கூட இயக்கியுள்ளார்.

கேள்விகள் பதில்கள், ஞாநி, அன்னம் அகரம் பதிப்பகம், ரூ. 170

இவர் பல்வேறு சமயங்களில் பல பிரபலங்களிடம் எடுத்த பேட்டியின் தொகுப்புதான் இது. ஒவ்வொரு பேட்டியும் வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு பத்திரிகையில் வந்தது. இதில் மொத்தம் 15 பிரபலங்களின் பேட்டிகள் உள்ளன. திரைத்துறை, எழுத்தாளர், பத்திரிகையாளர், சமூக ஆர்வலர், ஈழ மண்ணைச் சேர்ந்தவர், அரசியல்வாதி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்கள்.

முதலில் நடிகர் கமலஹாசனுடன் எடுத்த பேட்டி. இது 1982 இல் எடுக்கப்பட்டது. தீம்தரிகிட என்னும் பத்திரிகையில் வந்தது. வழக்கம்போல வழ வழ கேள்விகளாக இல்லாமல் கேள்விகள் ரொம்ப ஷார்ப்பாக வருகின்றது. இதுக்கு கமலின் பதில் வழக்கம்போல சில இடங்களில் பளீர், சில இடங்களில் சுளீர், சில இடங்களில் குழப்பம். ஆனாலும் பணத்துக்காகத்தான் சினிமாவில் உள்ளேன் என்று வெளிப்படையாகச் சொன்னது பெரிய விஷயம்தான். சினிமா வெறும் என்டர்டெயின்மென்ட்தான், அதனால் ஏதேனும் நல்ல விளைவுகள் வந்தால் அது உபரி லாபம்தான் என கமல் சொல்வது அப்பட்டமான உண்மை.

அதே 1982 இல் சமூகவியல் ஆராய்ச்சியாளரான பேராசிரியர் ரஜனி கோத்தாரி அவர்களின் பேட்டியில் வரும் ஒரு வார்த்தை, ‘இப்போ நடப்பது குண்டர்களின் ஆட்சி’. எத்தனை வருடம் கடந்தாலும் இந்த வார்த்தை இந்தியாவுக்குப் பொருந்தும்.

1994 இல் சுபமங்களா இதழுக்காக சோ அவர்களுடன் எடுத்த பேட்டியும் இதில் உள்ளது. எல்லாரும் ஜெயித்த பின் எனக்கு இதுதான் குறிக்கோள், நோக்கம் என கதைவிடுவது உண்டு. ஆனால் சோ நான் படுக்கும் போதும் சரி இப்பவும் சரி எந்த நோக்கமும் வைத்துக்கொள்வதில்லைன்னு வெளிப்படையாகச் சொல்கிறார். இப்போ தமிழ் படங்களுக்கு தமிழில்தான் பெயர் வைக்கணும்னு சொல்வதுபோல அன்று டி.கே. சண்முகம் அவர்கள் நாடகங்களுக்கு தமிழில்தான் பெயர் வைக்கணும்னு சொல்ல உடனே அதே மேடையில் சோ அவர்கள் என் அடுத்த நாடகத்தின் தலைப்பு ‘கோவாடிஸ்’ என அறிவித்தார். இது லத்தீன் பெயர். அப்பவே ரொம்ப லொள்ளுபிடித்தவர் போல. சிவாஜி, எம்.ஜி.ஆர் பற்றி அவரின் தகவல்கள் புதுசு. நாடகத்துறையின் எதிர்காலம் பற்றிய அவரின் கருத்து, சின்னத்திரை பற்றி எல்லாம் அருமையாக பேசியுள்ளார்.

1996 இல் தினமலர் தீபாவளி மலருக்காக கருணாநிதியுடன் எடுத்த பேட்டியும் இதில் உள்ளது. வார்த்தை விளையாட்டில் கலைஞரை மிஞ்ச ஆள் இல்லை என்பார்கள். இதில் தி.மு.க வின் பலம் எது பலவீனம் எது என்றதுக்கு பலம் மக்கள் மன்றம், பலவீனம் பத்திரிகைகள் என பேட்டி எடுப்பவரையே கிண்டல் செய்கிறார். அது ஒருவகையில் உண்மைதான். பத்திரிகை உலகில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் இவராகதான் இருப்பார். ஆனாலும் சன் டிவியால்தான் தமிழ் வளருதுன்னு சொல்வதுதான் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

2001 இல் வின்நாயகன் என்ற பத்திரிகைக்காக நடிகர் அஜீத்திடம் எடுத்த பேட்டியும் இதில் உள்ளது. வழக்கம் போல தன் மனதில் பட்டதை அப்படியே பேசுகிறார் தல. சொந்தமாக படம் எடுத்து நான் ரிஸ்க் எடுக்கமாட்டேன் என ஓப்பனாக சொல்கிறார். தமிழ்ப் புத்தகங்களை விட ஆங்கிலப் புத்தகம் அதிகம் படிப்பேன் என்கிறார். கோபத்தைக் குறைத்துக்கொண்டுள்ளேன், அரசியல் எனக்கு வேண்டாம், ரசிகர் மன்றம் தேவையில்லை என அவரின் அதிரடிகள் தொடர்கிறது.

வள்ளுவன், சுப்பண்ணா, கோமல் சுவாமிநாதன், அசோகமித்திரன், சிட்டி, யாசின் மாலிக், நெடுமாறன், பிரபஞ்சன், ஜெயபாலன் அக்னிபுத்திரன் என பலரது பேட்டிகளும் இதில் உள்ளன.

வழக்கமான பேட்டி போல இல்லாமல் கேள்விகள் புதிதாக உள்ளன. சில கேள்விகள் எதிராளியை கோபப்படுத்தக்கூடியதாகக் கூட உள்ளன. ஆனாலும் தைரியமாக கேள்விகளைக் கேட்டுள்ளார் ஆசிரியர். நூலின் பேப்பர் மட்டும்தான் கொஞ்சம் உறுத்துகிறது. மற்றபடி ஒரு அருமையாக நூல் இது. இதுபோல இவர் மற்ற பிரபலங்களிடம் எடுத்த பேட்டியையும் நூலாக்கினால் நலமாக இருக்கும்.

சக்தி

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-460-3.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: