Home » Articles » வலிகளை வெல்லலாம்

வலிகளை வெல்லலாம்

சென்னையில் பிரபலமான மருத்துவமனைகளில் இயன்முறை மருத்துவராக (பிசியோதெரபிஸ்ட்) பணியாற்றிய பிரபல டாக்டர் ஹரீஷ்குமார் எழுதியுள்ள புத்தகம்தான் வலிகளை வெல்லலாம்.

வலிகளை வெல்லலாம், டாக்டர் ஹரீஷ்குமார், மயிலை முத்துக்கள், ரூ. 100

முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வலி கண்ட அனைவருக்குமான எளிய பயிற்சியினைக் கொண்டும், வலிகளுக்கான சிகிச்சை முறைகளைப் பற்றியும், வலிகள் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ‘மயிலை முத்துக்கள்’ பத்திரிகையில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

கை, கால், இடுப்புப் பகுதிகளில் ஏற்படும் வலிகளை தனித்தனியே குறிப்பிட்டதோடு அவை ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்கள், வலி தரும் உபாதை, அவற்றின் தன்மைகள் எத்தகையது, வலி ஏற்படுவதற்கு முந்தைய நிலையிலேயே அவற்றை எவ்வாறு கண்டறிவது, பிறகு அவற்றை எவ்வாறு கையாள்வது… என்று படிப்படியாக விவரித்துச் செல்கிறார்.

* உடல் உழைப்பே இல்லாமல் இருப்பவர்களுக்கு முழங்கால் மூட்டு வலி கண்டிப்பாக வரும்.

* உடலின் பாரத்தைத் தாங்கக்கூடிய குதிகாலில் உள்ள தசைகளில் வீக்கம் வருவதால் குதிகால் வலி வருகிறது.

* சரியான காலணிகளை அணியாதவர்களுக்கு பாத எரிச்சல் வரும

* கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை பார்க்கும் பலருக்கு கழுத்து வலி வர வாய்ப்புண்டு.

* தோள் வலிகளை அறிய எக்ஸ்ரே எடுக்கத் தேவையில்லை, சில பரிசோதனைகளை செய்து பார்த்தாலே போதும், வலியை உண்டாக்கும் தசைகளைக் கண்டறிந்துவிடலாம்.

* பொதுவாகவே எல்லா வலிகளுக்கும் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது நல்லது. அவ்வாறு தருவதால் வலியைச் சுற்றியுள்ள இறுக்கமான தசைகள் தளரும், அதனால் வலி குறையும்.

மேலும், வெர்டிகோ (தலைசுற்றல் போன்ற உணர்வு ஏற்படும்) பற்றியும், தசைபிடிப்பு பற்றியும் சொல்லியதோடு, குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், பெண்களுக்கான உடலியல் தொந்தரவுகள், பைக் ஓட்டுபவர்களுக்கான டிப்ஸ் (டயர்களில் காற்று போதுமான அளவு இல்லையென்றாலும் முதுகெலும்புக்கு அதிர்ச்சி எளிதில் அடையும்), உட்காரும் முறைகள், காலணி வாங்கும் முறைகள்… என்று மருத்துவ அறிவுகள் பலதையும் முன்வைக்கிறார்.

உடலில் ஏற்படும் பெரும்பாலான வலிகளைக் குறிப்பிட்டதோடு அவற்றின் தன்மைகள் பற்றியும் அதற்கான வலி நிவாரணி பற்றியும் சொல்லியிருப்பது சிறப்பு.

அதை மேலும் எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வண்ணம் மிக எளிமையான நடையில் புகைப்படத்துடன் காட்டியிருப்பது கூடுதல் சிறப்பு.

ஸ்ரீநிவாஸ் பிரபு

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-366-9.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: