Home » Articles » ஆவியுலகின் அற்புதங்கள்

ஆவியுலகின் அற்புதங்கள்

பேய் இருக்கா இல்லையா, பார்த்திருக்காங்களா பார்த்ததில்லையா,  நம்பலாமா நம்பப்பிடாதா என்பது பல முருகேசன்களுடைய மனதிலும் ஒரு தீர்க்கப்படாத சந்தேகமாகவே இருந்து வருகிறது. உண்மையில், கடவுளை நம்பாதவர்கள் கூட பேய்களை, ஆவிகளை நம்புகிறார்கள். நம்பவில்லை என்றால்கூட பயப்படக்கூடியவர்கள் அதிகம். இது எதுவும் இல்லை என்றாலும் பேய்க்கதைகளைக் கேட்பதில் கண்டிப்பாக ஆர்வம் இருக்கும். அப்படி ஒரு ஆர்வத்தில்தான் டாக்டர் கிருஷ்ணகாந்த் எழுதிய ஆவியுலகின் அற்புதங்களை தேர்வு செய்தேன்.

ஆவியுலகின் அற்புதங்கள், டாக்டர் கிருஷ்ணகாந்த், சிக்ஸ்த் சென்ஸ், ரூ. 60

எடுத்த எடுப்பிலேயே – ஆவிகளை சந்தித்தது பற்றிப் பலரும் பலவிதமான கதைகளைக் கூறுவதுண்டு. ஆனால் இந்தக் கதைகளில் பெரும்பாலானவை பிறர் சொல்லிக் கேட்டதாகத்தான் இருக்கும். ‘என் மாமா சொன்னார்’, ‘என் நண்பன் ஒரு முறை போனபோது…’ இப்படி வாய் வழி பரவி கண், காது வைத்து சொல்லப்பட்ட கதைகள் அல்லது வதந்திகளாகத்தான் இவை இருக்கும். இவற்றைத் தாண்டி ஆதாரபூர்வமாக வந்து நிரூபணம் ஆன செய்திகளை மட்டும் நாம் பார்ப்போம் என்று தீர்மானமாகச் சொல்லிவிடுகிறார் ஆசிரியர். ஆனால் அதனை கடைப்பிடித்தாரா என்பது சோதனைக்குரியது.

முன்னொரு காலத்திலே என்று ஆரம்பித்து பொத்தாம் பொதுவாகச் சொன்னால்கூட பரவாயில்லை. கூகுள் காலத்தில் வந்து 1890ல் ஒரு ஸ்காட்லாந்து கப்பல் என்றோ 1955ல் ஒரு பிரேசில் விவசாயி என்றோ கதையளந்தால் யாரும் நம்பிவிட மாட்டார்கள். நியாயமாக, ‘ஆதார பூர்வமாக’ என்கிற வார்த்தையை உபயோகிக்கும் பட்சத்தில் அதன் source, references என்ன என்பதை புத்தகத்தின் இறுதியில் தந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஆங்கில அல்லது பிறமொழி சொற்களையோ பெயர்களையோ பயன்படுத்தும்போது அதன் ஸ்பெல்லிங்கையாவது கொடுத்திருக்க வேண்டும்.

தட்டுத்தடுமாறி புத்தகத்தில் உள்ள தகவல்களின் உண்மைத்தன்மையை இணையத்தில் சோதித்தபோது லிங்கனின் ஆவி சம்பந்தப்பட்ட தகவல்கள் பரவலாகக் கிடைத்தது. கார்னோவன் பிரபுவின் மம்மியின் கை புனைவு என்ற முன்குறிப்புடன் கிடைக்கிறது. கொரியாவின் கியும் நதிக்கரை மலர்கள் பற்றிய தகவல் ஒரு ப்ளாக்கில் படிக்கக் கிடைத்தது. மற்றபடி, ஹங்கேரி தங்கும் விடுதி, பிரேசில் விவசாயி, ஸ்காட்லாந்து கப்பல் போன்ற தகவல்களைக் கண்டுபிடிக்கவே இல்லை. மொத்தத்தில், புத்தகத்தில் உள்ள தகவல்கள் பெரும்பாலானவை போலி என்பது மட்டும் தெளிவாகப் புலப்படுகிறது.

புனைவு என்கிற வகையில் எடுத்துக்கொண்டால், மேஜையைச் சுற்றி மூன்று ஆவிகள் என்ற கதையும், மூன்று சூனியக் கிழவிகள் கதையும் அட்டகாசமாக இருக்கிறது. வேறு எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆவியுலகின் அற்புதங்கள் – சுவாரஸ்யங்களற்ற ஒரு புத்தகம்.

என்.ஆர். பிரபாகரன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0000-207-4.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: