Home » Medical » ஒரு வரி மருத்துவம் ஓராயிரம்

ஒரு வரி மருத்துவம் ஓராயிரம்

தெனாலிராமன் கதைகளுள் ஒன்று நாட்டில் வைத்தியர்கள் மிகுதியாக இருப்பதாகக் கூறும். தாவரங்களின் மருத்துவ குணங்களை அறிந்து பழகிய அனுபவ வைத்தியமுறைகள் பலவும் ஒருவரை படித்த வைத்தியருக்கு இணையாகச் செய்யும் வல்லமை உடையன. அதனால்தான் அனுபவ வைத்தியமுறை அறிந்த கிழவிகளுக்குக் கிராமங்களில் இன்றும் மவுசு இருக்கின்றது. பாட்டி வைத்தியம் கை வைத்தியம் என்றும் கூறப்படும் மருத்துவ முறைகள் பெரும்பாலும் ஆரோக்கியமான உணவுமுறைகள், மூலிகையின் பயன்களைச் சார்ந்தே அமைகின்றன.

ஒரு வரி மருத்துவம் ஓராயிரம், மெலட்டூர் நாராயணபாரதி, ஜயஹனுமான் பதிப்பகம், ரூ. 50

சுய மருத்துவம் என்பது ஆபத்தானதே என்றாலும் பக்க விளைவுகளற்ற வருமுன் காக்கும் மருத்துவ முறைகளைப் பின்பற்றுவதால் வீண் செலவுகள் குறையும்; உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப நலமும் செழிக்கும். இதனை உணர்த்தும் வகையில் எழுந்த கையடக்க நூலே ஒரு வரி மருத்துவம் ஓராயிரம் என்னும் நூல்.

இதன் ஆசிரியர் மெலட்டூர் நாராயணபாரதி என்று அட்டை குறித்தாலும் அவர் தான் ஒரு தொகுப்பாசிரியரே என்று அறுதியிட்டுக் கூறிவிடுகின்றார். பல்வேறு நூல்களிலும் இதழ்களிலும் விரவிக் கிடக்கும் மருத்துவச் செய்திகளைப் பலரும் பயன்கொள்ளத் தொகுப்பாய்த் தரும் மருத்துவத் தகவல் களஞ்சியமாகவே இதனைக் கருதவேண்டும்.

இந்நூல் இரு தொகுப்பாய் வந்து இரு பதிப்புகளைக் கண்டுள்ளதே இன்றைய உலகில் இதன் தேவையையும் வரவேற்பையும் உணர்த்தும். ஒவ்வொரு தொகுப்பும் ஒரு வரியில் அமைந்த 1000 செய்திகளையுடையனவாக உள்ளது.

அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் தாவரங்களில் உள்ள மருத்துவக் குணங்கள், சிறிய வகை நோய்களுக்கு எளிய வைத்தியங்கள், உடற்பயிற்சியே மருத்துவமாதல், பெரிய வியாதிகளிடமிருந்து வருமுன் காக்கும் உணவு வகைகள் எனப் பல செய்திகளும் எளிய தமிழில் எல்லோரும் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் இவ்வாசிரியர் தந்துள்ளார். தொகுதி 2 இல் பக்கம் 76-77 இல் மைதா பற்றிய தகவல்களில் மைதாவின் தீமைகளை பட்டியலிட்டுத் தந்துள்ளார். மேலும் கேரளாவில் உள்ளதுபோல் தமிழ்நாட்டில் இதுகுறித்த விழிப்புணர்வு உருவாகவில்லை என்ற சமூக அக்கறையையும் காணமுடிகின்றது.

இந்நூல்,
“தக்காளி புற்று நோய்க்கு மருந்து. அளவாகச் சாப்பிடவும்.
தக்காளி அளவுக்கு மீறிச் சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் உண்டாக வாய்ப்புண்டு”
என்று ஒரு பொருளின் இருவிதமான பண்புகளையும் எடுத்துரைக்கின்றது.

மருத்துவம் சார்ந்த இந்நூலில் அச்சுப்பிழைகளைத் தவிர்த்தால் பொருள் சிதையாமல் இருக்கும். இந்நூலின் பயன்பாடு பற்றி ஆசிரியர் “இல்லந்தோறும் கண்ணில் படும்படியான இடத்தில் மேஜையின்மீது கிடக்கவேண்டிய சிறு கையேடு இது. நண்பர்கள் உறவினர்களோடு அவ்வப்போது தொடர்புகொண்டு நாலு வார்த்தை பேசுவதுபோல அவ்வப்போது நாலு வரி படித்துவையுங்கள்” என்று அனுபவமாகக் கூறுவதையே நானும் வழிமொழிகிறேன். இந்நூலின் சிறப்புகளை கருத்திற்கொண்டால் ஒரு வரி மருத்துவம் என்பதை ஒருவரி மகத்துவம் என்றே சுட்டலாம்.

வெ. சத்யநாராயணன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-409-8.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


1 Comment

  1. சரவணன் says:

    இதே மாதிரியான புத்தகத்தை தி.நகர் பஸ் ஸ்டாண்டில் 10 ரூபாய்க்கு விற்பார்கள்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: