Home » Medical » மருந்தில்லா மருத்துவம்

மருந்தில்லா மருத்துவம்

தெய்வீக சக்தி கொண்ட கண்களுக்குப் புலப்படாத நுண்துளிகளால் இப்பிரபஞ்சம் நிரம்பியுள்ளது, இறைவனால் படைக்கப்பட்டது இப்பிரபஞ்சம். நாம் சுவாசிக்கும் காற்று பிரபஞ்ச சக்தி – Rei. இந்தக் காற்று உடலில் உள்ள சக்தியாக மாறும்போது அது ki எனப்படுகிறது. Reiki என்பது Universal Life Energy என்ற ஜப்பானிய மொழியில் அழைக்கப்படும் சக்தி. 20 ஆம் நூற்றாண்டில் “ரெய்கி மருத்துவமுறையின் தந்தை” எனப்படும் Dr. மிகாவோ யுஸி (Mikao Usui) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நிரூபண உண்மை (பக். 10), இப்படித் தொடங்கும் இந்தப் புத்தகம் எனது பார்வையில் மூன்று விதமான வாசிப்பாளருக்குப் போய்ச் சேரவேண்டும் என்ற வகையில் எழுதப்பட்டதாக உணர்கிறேன்.

மருந்தில்லா மருத்துவம், டாக்டர் பி.எஸ். லலிதா, மயிலை முத்துக்கள், ரூ. 150

அடிப்படையில் அவர்களை (1) ரெய்கி பற்றி புதியவர்களுக்கும், (2) பொதுவான ஆன்மிகவாதிகளுக்கும், (3) ரெய்கி கலையில் முன்னேற விரும்புபவர்களுக்கும் என, மூன்று வாசிப்பாளர்களுக்கும் அழகான முறையில் நூலாசிரியர் டாக்டர் பி.எஸ். லலிதா அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

முதல் வகை வாசிப்பாளர்கள்:

ரெய்கி ஆர்வலர்களுக்கு…

ரெய்கி என்ற இயற்கை சக்தியை முற்றிலும் தெரியாதவர்களுக்கு ஒரு சிறப்பான அறிமுகப் புத்தகமாக மிக எளிய முறையில் விளக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக (தலைப்பு 1 மற்றும் 2) ரெய்கி அறிமுகம் மற்றும் உடலமைப்பில் ஆன்மிகத்தில் Bio current என்று பேசப்படும் இயற்கை சக்தி பற்றிப் பேசப்படுகிறது. மனித உடலில் சூக்கும சரீரம் எனப்படும் ஆரா கிர்லியன் kirlian போட்டோ நவீன கருவிகள் மூலம் அறியப்படுவதை மெய்ஞானப் பார்வையில் சொல்கிறது மனித உடலில் எவ்வாறு வடிவம் கொண்டுள்ளது என்பதையும் மனித உடலின் ஏழு சக்தி மையங்களுடன் எப்படித் தொடர்புகொள்வது என்பதைப் பற்றியும், மனிதர்களுக்கு இந்தச் சக்தி மையங்களின் சக்தி ஓட்டக் குறைபாடு நோய்களை வரவைக்கிறது என்பதைச் சொல்கிறது.

அதேபோல் பகுதி 16 – தோப்புக்கரணம், 17 – இதயம் VS இதயம், 20 – இசையும் ரெய்கியும், 22 – நமது கலாசாரத்தில் ரெய்கி, 23 – புதிய பாட்டில் பழைய மது, 25 – பன்றிக் காய்ச்சல் போன்ற பகுதிகள் சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் விதமாகவும் அதன் பயன்களும் இந்த இயற்கை சிகிச்சை பற்றியும் அதன் மகத்துவம் பற்றியும் பேசுகிறது. எளிய நடைமுறையில் உதாரணங்கள் மூலம் இந்தப் பகுதி அனைவரையும் மிகவும் கவரும் பகுதி.

இரண்டாவது வகை வாசிப்பாளர்கள்:

ஆன்மிகவாதிகளுக்கு ஓர் அட்சயபாத்திரம்…

பொதுவாக எந்த ஓர் ஆன்மிக மார்க்கத்தைத் தழுவுபவராக இருந்தாலும் அவர்களுக்குப் புரியும்படியும் ஆன்மிக சக்தி எப்படி நம் உடலை மேம்படுத்துகிறது என்பதைப் பற்றியும் மிக அற்புதமாக அதே சமயம் எளிமையாக விளக்குகிறது இந்நூல் பகுதி 9 முதல் பகுதி 15 வரை. 1. மூலாதாரச் சக்கரம், 2. ஸ்வாதிடான சக்கரம், 3. மணிபூரகச் சக்கரம், 4. அனாஹத சக்கரம், 5. விஷுத்தி சக்கரம், 6. ஆக்ஞா சக்கரம், 7. ஸஹஸ்ராரா சக்கரம் போன்ற ஆன்மிகத்தின் சக்தி மையங்களைப் பற்றியும் அதன் செயல்பாடுகள், அவைகளின் ஆன்ம தத்துவங்கள் பற்றியும் மிக அரிய பல புத்தகங்களின் விரிவை சாரமாகச் சொல்கிறது இந்நூல்.

அதில் பகுதி 19, வண்ணங்களின் தொடர்பு பகுதி. உச்சந்தலையிலிருந்து தண்டுவடத்தின் கீழ்ப்பகுதிவரை அமைந்துள்ள ஏழு சக்கரங்களுடன் எப்படிப் பிணைக்கப்பட்டுள்ளது அதன் மகத்துவம் பற்றி, பக்கம் 37 முதல் பக்கம் 129 வரை மிக விரிவாகத் தவிர்க்க முடியாத அதே சமயம் உன்னிப்பாகப் படிக்கவேண்டிய பகுதிகள்.

அதே போல பகுதி 21 ஆன்மிக சக்தி என்ற தலைப்பு (பக். 149) நமது உடலில் உயிர் கொடுக்கும் சக்தி இறைவனால் படைக்கப்பட்ட கண்களுக்குப் புலப்படாத பிரபஞ்சத்திலிருந்து நம்மை அடைகிறது நம் பூத உடலைச் சுற்றியுள்ள ஆராவில் ஏழு சக்கரங்கள் வழியாக நாம் பிரபஞ்ச சக்தியை சுவாசிப்பதால் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதாக எளிய முறையில் சொல்கிறது நூல்.

மூன்றாவது வகை வாசிப்பாளர்கள்:

ரெய்கி பயிற்சியாளர்களுக்கு ஒரு சிறந்த கையேடு…

ஆம், இதனை ஓரளவுக்குக் கற்றுத் தேர்ந்தவர்கள் தங்களை மிகச் சிறந்த ஒரு ரெய்கி மாஸ்டராக உருவாக்கிக் கொள்ள எல்லா வகையிலும் இந்தப் புத்தகம் முன் நின்று வழிநடத்துகிறது. பிரபஞ்ச சக்தியை உடல் சக்தியாக மாற்ற பகுதி 4 – ரெய்கி பயிற்சி மூலம் பேசுகிறது. அதேபோல அதன் ஐந்து முக்கிய தத்துவங்கள் எப்படிச் செயல்படுகிறது என்பது பற்றி பகுதி 5 ரெய்கி தத்துவங்கள் விளக்குகிறது. மேலும் மிக முக்கியமாக பகுதி 3 – தியானம், பகுதி 7 – சக்கரத் தியானம், பகுதி 18 – தங்க பந்து தியானம், பகுதி 26 போன்ற பகுதிகளில் தியானத்தின் அவசியம் பற்றி மிக உறுதியாகச் சொல்லப்பட்டுள்ளது.

ரெய்கியின் பகுதி 8 – சங்கேதக் குறிகள் பற்றிப் பேசும்போது கைகளின் சக்கரங்களே ரெய்கியின் சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கருவி. அவையே சக்தியை வெளிப்படுத்தும் ஆயுதமாகக் கருதப்படுகிறது. அதனைத் தூய்மையாக்கி வசப்படுத்தவே சங்கேதக் குறிகள்; ஐந்தில், மூன்று இங்கு விரிவாகப் பேசப்படுகிறது. இந்தப் பகுதிகள் அனைத்தும் மிக ஆழமாகவும் நுட்பமாகவும் ரெய்கி தத்துவ விசாரணைகளைத் துவக்கி வைக்கிறது.

அடுத்த பதிப்பில் கவனிக்கவேண்டிய சில விஷயங்கள்…

1. நூலின் ஆரம்ப சில பகுதிகள் இன்னும் கோர்வையாகச் சொல்லப்படுவதில் கவனம் செலுத்தவேண்டும்!
2. தேவையான இடங்களில் படங்கள் சேர்க்கப்பட்டு இருந்தால் இன்னும் அழகாகப் புரிய வாய்ப்பு இருக்கிறது!
3. அட்டையில், ‘மருந்தில்லா மருத்துவம்’ என்பதோடு – ‘ரெய்கி சிகிச்சை விளக்கப் புத்தகம் அல்லது கையேடு’ என குறிப்பிட்டு இருந்தால் இன்னும் பல வாசிப்பாளர் கவனத்தை ஈர்க்கவும் அவர்கள் தேடலைச் சென்று அடையும் வாய்ப்பு அதிகம். நூலின் விற்பனைக்கு இவை உதவும்!

மேற்படி ஆலோசனைகள் இந்நூலின் அடுத்த பதிப்பில் சரி செய்யப்படச் சொல்லப்பட்ட மிகச் சிறிய காரணங்கள். ஆனால் இவை எதுவும் புத்தகத்தின் சிறப்பைக் குறைத்து விடவில்லை, குறைக்கவும் முடியாது. அவ்வளவு அற்புதமான எல்லோராலும் வாசிக்கப்படவேண்டிய புத்தகம் இது.

சு. கிருஷ்ணமூர்த்தி

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0002-366-8.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: