Home » Religion » ஸ்ரீ பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள்

ஸ்ரீ பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள்

அனு.வெண்ணிலா அவர்கள் பல கவிதைநூல்கள், புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள் என எழுதியுள்ளார். இவர் அதிகமாக எழுதியது ஆன்மிக நூல்களே. வயதானது இவரின் மெய்க்குதான் எழுத்துக்கு இல்லை என்பதை இவர் எழுத்துகள் படிக்கும் அனைவரும் புரிந்துகொள்வார்கள்.

பூண்டி மகானைப் பற்றிய விவரங்கள் ஆரம்பிக்கும் முன் ஆசிரியரின் முன்னுரையே 15 பக்கம் வருகிறது. இரண்டு பாகங்களை ஒன்றாக இணைத்து வெளியிட்டுள்ளார். முதல் பாகம் 52 அத்தியாயங்களாகவும், இரண்டாம் பாகம் 32 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது.

ஸ்ரீ பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள், புலவர் அனு.வெண்ணிலா, திவ்யா பதிப்பகம், ரூ. 220

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது பூண்டி எனும் சிறுகிராமம். இங்கு வாழ்ந்து பல அற்புதங்கள் செய்த ஒரு சித்தர்தான் இவர். இவருக்கென தனிப்பெயர் இல்லாததால் ஊரின் பெயரிலேயே ‘பூண்டி மகான்’ என அழைக்கப்படுகிறார்.

நம்பினால் நம்புங்கள்:

சில விஷயங்கள் அறிவிற்கு அப்பாற்பட்டது, அதை நம்புபவர் ஆத்திகர் என்றும் நம்பாதவர் நாத்திகர் என்றும் சொல்கிறோம். கிழே சில செய்திகள் சொல்லப்போகிறேன். அதை நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்.

* குடும்பக் கஷ்டத்தைச் சொல்லவந்த இருவரிடம் “மாடுதான் வைக்கோலை கவ்வுது, மனிதன் ஏன் மண்ணை கவ்வ வேண்டும்?” என்றார். மறுநாள் வந்தவரில் ஒருவர் இறந்து மண்ணில் புதைக்கப்பட்டார்.

* ஆசிர்வாதம் வாங்க வந்த மாணவனை “வாங்க ஜட்ஸ் அய்யா” என அழைத்தார். பின்நாளில் அவர் ஜட்ஸ் ஆனார்.

* வாயில் சாப்பிடக் கொடுத்த ஒரு சாத்துக்குடிச் சுளை இரண்டாக வந்தது, காரணம் இரண்டாம் திருமணத்திற்கு சம்மதம் வாங்க வந்திருந்தார்.

* விடியற்காலையில் சுவாமியைப் பார்க்க வந்தவர் கட்டிலில் பார்த்தது பெரும் கரும்நாகம் தான்.

* இந்த வருடம் மணிலா வியாபாரம் வேண்டாம் என சுவாமி தடுத்தும் செய்தவர் நஷ்டமடைந்தார்.

* இரும்பை தங்கமாக மாற்றினார்.

* ஆற்றின் நடுவே இருக்கும்போது வெள்ளம் அவரைத் தீண்டாமல் சுற்றிச் சென்றது.

* ராட்சஷ உருவமெடுத்து கற்களை கனிபோல உண்டார்.

* தியேட்டரில் ஓடும் படம் மற்றவர்களுக்கு படமாகத் தெரிய ஒருவருக்கு மட்டும் வெண்மைத்திரை மட்டும் தெரிகிறது.

இப்போ நான் சொன்னது எல்லாம் வெறும் 57 பக்கங்களுக்குள் வந்த செய்திகள். மொத்தம் 302 பக்கங்கள். அப்போ எவ்வளவு செய்திகள் இருக்கும் என பார்த்துக்கொள்ளுங்கள். நடுவில் நாற்பது பக்கத்திற்கு போற்றி துதிப் பாடல்கள் மற்றும் சில பாடல்கள் அமைந்துள்ளன.

புத்தகத்தின் சில அத்தியாயத்தைப் படிக்கும்போது இப்படி நடக்க வாய்ப்பு உண்டா என கேட்கத் தூண்டுகிறது. உதாரணம் இரும்பு தங்கமாக மாறுவது, வெள்ளம் இவரை சுற்றிச் செல்வது. இதை பக்தியாகப் பார்த்தால் ஆச்சர்யம் வரும், கொஞ்சம் ஏட்டிக்குப்போட்டியா யோசித்தால் இப்படி எல்லா இரும்பையும் தங்கமாக்கினால் நாம எளிதில் வல்லரசாக மாறிவிடலாமே. அதுபோல வெள்ளத்தில் யாராவது மாட்டிக்கொண்டால் எளிதில் அவரை அடைந்து காக்கலாமே என நக்கல் விடத் தோன்றும்.

பிடித்த விஷயங்கள்:

* நூலின் இறுதியில் இந்த நூல் எழுத குறிப்புகள் கொடுத்து உதவிய நபர்களை மறக்காமல் தேதியுடன் குறிப்பிட்டுள்ளார்.

* பூண்டி மகான் படம் இடையில் வெளியிட்டிருப்பது.

* பின் அட்டையில் ஆசிரியரின் விவரத்தை தெளிவாகக் குறிப்பிட்டிருப்பது. இதனால் அந்த ஆசிரியரின் வேறு நூல்களும் நமக்குத் தெரிய வருகிறது.

மொத்தத்தில்…
“கல்லைக் கண்டால் நாயகனைக் காணும்
நாயகனைக் கண்டால் கல்லைக் காணும்”
எனும் கூற்றுப்படி கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், புராணக்கதைகள் மற்றும் சித்தர்களின் வரலாற்றை விரும்பிப் படிப்பவர்கள் இதைப் படிக்கலாம். இவர்கள் விரும்பும் எல்லாம் இதில் உள்ளது. படித்து சிலாகிக்கலாம்.
எதற்கெடுத்தாலும் ஏன்? எப்படி? எதுக்கு? இப்படிலாம் நடக்குமா? என கேள்வி கேட்பவர்கள் இந்த நூல் பக்கம் வரவேண்டாம். வந்தால் பிரஷர் அதிகமாகும் ஜாக்கிரதை.

ராஜபாட்டை – ராஜா

 

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/100-00-0002-410-0.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: