Home » Short story » தேர்ந்தெடுத்த கதைகள் – கு.அழகிரிசாமி

தேர்ந்தெடுத்த கதைகள் – கு.அழகிரிசாமி

கு.அழகிரிசாமியின் கதைகளை இது வரை படித்ததில்லை. இந்தப் புத்தகத்தில் இருபத்தோரு கதைகள் இருக்கின்றன.

சில கதைகள் படிக்கும்போது குபீரென சிரிக்க வைப்பவை. சில கதைகள் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு புன்னகையைத் தேக்கி வைக்கும் தன்மை படைத்தவை. சில கதைகள் சொல்லும் யதார்த்தம் முகத்தில் அறைகிறதென்பது உண்மை. எவ்வித சலனங்களும் இன்றி மேம்போக்காகக் கடக்கக் கூடிய கதைகளும் இல்லாமல் இல்லை.

Therenthedutha Kathaigal-Ku.Azhakirisami

தேர்ந்தெடுத்த கதைகள் – கு.அழகிரிசாமி, ச.தமிழ்ச்செல்வன், பாரதி புத்தகாலயம், ரூ. 150

அன்பளிப்பு என்னும் சிறுகதை ஏற்கெனவே பிரபலம். கல்யாண கிருஷ்ணன் கதையைப் படிக்கும்போது ஆரம்பம் முதல் இறுதி வரை மேலே சொன்ன மாதிரி முகத்தில் புன்னகைக்கு கியாரண்டி. இரண்டு ஆண்கள் கதையும் அதே ரகம்தான்.

திரிபுரம் கதை காட்டும் வாழ்க்கையின் மறுபக்கம் அதிர்ச்சி தரக் கூடியது. யதார்த்தம் முகத்தில் அறையும் வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூர் சென்ற மகன் கதை நிச்சயம் மனதில் உண்டு பண்ணும் சலனம் அந்தக் கிழவிக்காக நம்மை வருந்த வைக்கக் கூடியது.

வெறும் நாய் கதை சொல்லும் சேதி மிக எளிமையானது. ஆனால் அழுத்தமானது.

இருவர் கண்டஒரே கனவு கதை தரும் அதிர்ச்சி நிச்சயம் படிப்பவர்களைக் கட்டிப் போடும். ஆனால் அதிர்ச்சி மதிப்பைத் தாண்டி அக்கதையில் ஏதும் இல்லை.

இப்படி ஒவ்வொரு கதையைப் பற்றியும் தனித் தனியாகச் சொன்னாலும் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் இன்றைய காலத்துக்கும் பொருந்துவதுதான் அக்கதைகளின் வெற்றி. கதைகளைப் படிக்கப் படிக்க, இன்றைக்கும் மனிதர்கள் இப்படித்தானே இருக்கிறார்கள். மனித குணாதிசயங்கள் பெரிதும் மாறி விடவில்லையே என்கிற எண்ணம் எழாமலில்லை.

அந்த வகையில் இது அழகிரிசாமியின் வெற்றிதான்.

ஹரீஷ்

 

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: