Home » Novel » ஸீரோ டிகிரி

ஸீரோ டிகிரி

நூலின் ஆரம்பம் முதலே பலவாறான அதிர்ச்சிகள் எதிர்ப்பட்டன. இந்த நூலின் விமர்சனத்தை இன்னொரு தளத்தில் வாசிக்க நேர்ந்தது. ஒரு காட்சியோ எழுத்தோ அருவருக்கத்தக்க மனநிலைக்கு கொண்டுசெல்வதை சமஸ்கிருதத்தில் ஜுகுபிசம் என குறிப்பிடுகிறார் அந்த வகையான நாவல்.

ஸீரோ டிகிரி, சாரு நிவேதிதா, கிழக்கு பதிப்பகம், ரூ. 200

இவ்வகையான ஆங்கிலத் திரைப்படங்களைக் காணும் சூழல் அமைந்ததுண்டு. கொடூரமான கொலைகளாக இருக்கலாம், நிர்வாணத் துன்புறுத்தலாக இருக்கலாம், வெடித்துச் சிதறும் மனித உடல்களாக இருக்கலாம், அழுக்கான சூழ்நிலையையோ வாசனையையோ விவரிக்கும் காட்சிகளாக இருக்கலாம், புறம்பான புணர்தலாக இருக்கலாம்… இத்தகைய காட்சிகளை எந்தவிதச் சலனமின்றியும், ரசித்தும் பார்க்கும் நண்பர்களைப் பார்த்திருக்கிறேன். சாப்பிடும்போது டிஸ்கவரி சேனலில் வேட்டையாடி கொன்று தின்னும் மிருககாட்சி வரும்போதே சானலை மாற்றும் கேட்டகரியில் இருப்பவர்கள் ஒரு நிமிடம் ஆடித்தான் போகவேண்டும்.

இந்நாவலின் தன்மைகொண்ட ஒரு ஆங்கில நாவலை படித்துக்கொண்டிருந்தபோது ஒரு கட்டத்திற்கு மேல் வாசிக்க இயலாத சூழலில் ஒதுக்கி வைக்கப்பட்டு மீண்டும் வாசிக்கப்படவேயில்லை.

தமிழ்ச் சூழலுக்கு புதிதானதோ வாழ்க்கை முறையில் முற்றிலும் கண்டிராத அல்லது அறிந்திராத விடயங்கள் சொல்லப்பட்டிருக்கிறதா என தெரியவில்லை. ஏனெனில் பல சங்ககால இலக்கியங்கள் ஊடல் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கலாம், என்னளவில் படித்த வெகுசில இலக்கியப் புத்தகங்கள், சந்தித்த மனிதர்கள் மற்றும் கேட்ட நிகழ்வுகளின்படி இது மிகவும் புதிதாகவும், மிகைப்படுத்தப்பட்டதாகவே தோன்றுகிறது,

நான்-லீனியர் (non-linear) வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.

முழுக்க முழுக்க வாசிப்பவரின் கட்டமைப்பிற்கே விட்டிருக்கிறார் ஆசிரியர். இறுதி அத்தியாயத்தில் நாவலின் அனைத்துப் பெயர்களையும் குறிப்பிட்டு “எல்லாம் வெறும் பெயர்களா வெறும் குறிப்புகளா சிதறிக் கிடக்கும் இந்த காகிதங்களின் கற்பிதமா” என படைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் தமக்குள்ளே கேட்டுக்கொள்வது போல் அமைந்துள்ளது, “இவை முடிவுறாமல் நீண்டுகொண்டே செல்லும்” என்ற வரிகளில் ஆசிரியர் வாசகனுக்கு அவரவர் சிந்தனை வழி இதனை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என புரிய வைக்கும்போது காலமும், தலைவலியும் கடந்துவிடுகின்றன,

கிசுகிசுக்களில் எழுதப்படுவதுபோல் வரும் பெயர்களும், வலிந்து திணிக்கப்பட்ட ஆபாசமும் கொடூரமும் கடுமையான அயர்ச்சியைத் தருகின்றன. இறுதி அத்தியாயத்தை நெருங்கும்போது ஆர்ப்பாட்டங்களை விடுத்து ஒருவித அமைதி நிலவும்போது “அப்பாடா” என்றிருந்தது. அந்த அத்தியாயங்களை ரசிக்கவும், முந்தைய அத்தியாயங்களைப் பற்றிய புரிதலும், ஒதுக்கித் தள்ளவேண்டிய விடயங்களைச் சிந்திக்கவும் அந்த அமைதி உதவுகிறது.

இலக்கியம் வாசிக்க வேண்டும் என்ற ஆவலில் ஆரம்பகட்ட வாசிப்பில் இருக்கும் ஒருவன் இப்புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தால் இலக்கியம் இப்படியா இருக்கும் என எண்ணி விழுந்தடித்து ஓட வாய்ப்புகள் அதிகம். ஒருமுறை நூலகத்தில் ஒரு பிரபல எழுத்தாளரின் நூலைப் படிக்க நேர்ந்தபோது பல பக்கங்கள் புரட்டியபோதும் என்ன சொல்ல வருகிறார் என புரியவேயில்லை. அவ்வளவு கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள். மிக எளிமையான, நெகிழ்ச்சியான, வக்கிரம் இல்லாத இலக்கியப் புத்தகங்களைக் கொடுக்க இயலாமலில்லை. அத்தகைய புத்தகங்களே மென்மேலும் வாசிக்கத் தூண்டும். வாசிப்பின் புரிதல் சிறிதளவு கிடைத்தபிறகு இத்தகைய புத்தகங்களைத் தொடுவது நலம்.

ஒவ்வொருவருக்கும் இப்புத்தகம் பற்றிய அபிப்பிராயம் வேறுபடும். சிலருக்கு சில பகுதிகள் பிடிக்கலாம், எரிச்சலூட்டுபவையாக தோன்றலாம், அபத்தமாக இருக்கலாம், என்ன கருமம் இது என தூக்கி கெடாசலாம், மனதினுள்ளே ரசித்துக்கொண்டு “உவ்வே” என்று நடிக்கலாம். அவரவருடைய சூழ்நிலை, பண்பாட்டு முறை அல்லது பண்பாடாக கற்பிக்கப்பட்டவை ,அனுபவப்பட்ட, கேள்விப்பட்ட விடயங்களைப் பொறுத்து வேறுபடும். மேற்கண்டவற்றில் என்னுடைய அபிப்பிராயம் என்னவென்பதை நூலின் ஆசிரியரைப் போல, இம்மதிப்புரையை வாசிப்பவரின் கருத்திற்கே விடுகிறேன்.

ஜெகதீஸ் தனபால்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-81-8493-765-7.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 

 


3 Comments

 1. மதிப்புரை எழுதுகிறவர்களின் இணைய முகவரி, மின்னஞ்சல் இவற்றை இணைத்தால் அவர்களோடு தொடர்புகொள்ள வசதியாயிருக்கும்.

  Like

  • சொல்லுங்கள் வெளங்காதவன் 🙂

   Like

   • ‘மதிப்புரை’யை தொடர்ந்து வாசித்து வருகிறேன். கேசவமணி போன்றோரை எளிதில் அடையாளம் காண முடிந்தாலும், மற்றவர்களை அறிந்துகொள்ள பல பொழுதுகளில் முடிவதில்லை. அதனால், மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் விவாதம் ஏதும் இருந்தால் தொடர ஏதுவாயிருக்கும்.

    அதுதேன் ஜெகதீசு தனபால். 🙂

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: