Home » Novel » புலிநகக் கொன்றை

புலிநகக் கொன்றை

சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் ஆரம்பிக்கும் கதை எழுபதுகளின் ஆரம்பத்தில் வந்து முடிகிறது.

திருநெல்வேலியின் நாங்குனேரியில் ஒரு தென் கலை ஐயங்கார் குடும்பத்தின் நான்கு தலைமுறைகளைத் தொட்டுத் தொடர்ந்து நீளும் கதையில் அந்தக் கால அரசியலும் அதை எளிய மக்கள் எதிர்கொண்ட விதமும் மழைக்குப் பிந்தைய குளத்து நீரின் சேறுபோல் கலந்து விரவியிருக்கிறது.

புலிநகக் கொன்றை, பி.ஏ.கிருஷ்ணன், காலச்சுவடு, ரூ. 250

இளவயது மரணங்கள் எல்லாத் தலைமுறைகளிலும் நிகழக் காரணம் குடும்பத்தைச் சூழ்ந்திருக்கும் சாபத்தின் நிழல் என்று அக்குடும்பம் நினைக்கிறது. உண்மை என்ன என்பதை படிக்கும் வாசகர் அறிவார். இளம் மரணங்கள் சாபம் மூலமாக நடப்பதாக நம்பும் குடும்பத்தில் எண்பத்தைந்து வயதுக் கிழவர் எல்லா சம்பவங்களுக்கும் சாட்சியாய் கடைசி வரை இருப்பது யதார்த்தமான முரண்.

ஆசிரியர் இது முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவல் என்றும் பின் தமிழில் தன்னாலேயே எழுதப்பட்டதென்றும் குறிப்பிடுகிறார். அவர் இரண்டு நாவல்களையும் தனித் தனியே பாவித்துத்தான் எழுதியிருக்க வேண்டும். மொழிபெயர்ப்புக்கான எந்தச் சாயலும் எவ்விடத்திலும் தென்படவில்லை.

கதையின் நடை ஊஞ்சலில் அமர்த்தி வைத்து ஆட்டி விடுவதைப்போல படிப்பவரை காலக் கிரமத்தின் முன்னும் பின்னும் மாறி மாறிப் பயணிக்க வைக்கிறது. முதலில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டாலும் கதையில் வரும் கண்ணன் நீச்சல் பழகி அதன் மேல் பைத்தியமாவதைப் போல மெல்லக் கதை நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது.

கதை முடியும் தறுவாயில் அங்கும் இங்கும் அலைவதை சற்றே தவிர்த்திருந்தால் அந்தச் சின்னஞ்சிறு அயற்சியைத் தவிர்த்திருக்கலாம்.

அதனால் ஒன்றும் பாதகமில்லை. இந்தப் புத்தகத்தைப் படிப்பது ஒரு அனுபவம். கால யந்திரத்தில் பயணிப்பது போன்ற ஒரு அனுபவம், சமீபமாக நான் வாசித்த புத்தகங்களில் சிறந்த காலப் பயண அனுபவத்தைக் கொடுத்தது எஸ் ராவின் யாமம். இந்தப் புத்தகம் அதிலிருந்து வெகு தூரத்தில் இல்லை.

ஹரீஷ்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0000-059-2.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: