Home » Short story » ஃபேஸ்புக் பொண்ணு

ஃபேஸ்புக் பொண்ணு

அதிஷா என்னுடைய ஃபேஸ்புக் நண்பர். அவ்வப்போது உள்பெட்டியில் போய் மொக்கை போடுவேன். இப்போது 99 days of freedom என்று போஸ்டர் ஒட்டிவிட்டு ஃபேஸ்புக்கிலிருந்து அஞ்ஞாதவாசம் போயிருக்கிறார். இவர் ப்ளாகை தொடர்ந்து வாசிப்பதுண்டு.

மொக்கை போடும் சமயங்களில் ஓரிரு முறை “சூப்பரா எழுதறீங்களே ப்ரோ. சீக்கிரம் புக்கு போடுங்க” என்று சொல்லும் போதெல்லாம் ரஜினி மாதிரி எல்லாம் காலத்தின் கையில் இருக்கு என்று பிட்டு போடுவார்.

Facebook ponnu

ஃபேஸ்புக் பொண்ணு, அதிஷா, உயிர்மை பதிப்பகம், ரூ. 100

இந்த வருஷம் நிஜமாகவே புத்தகம் போட்டுவிட்டார். அதுவும் எனக்குப் பிடித்த மாதிரி சிறுகதைத் தொகுப்பு. பதினைந்து கதைகள். மிகச் சிறிய புத்தகம். படிப்பதற்கு அதிக சிரமம் தராத எளிய நடை. சில கதைகள் ஏற்கெனவே அவர் ப்ளாகில் படித்திருக்கிறேன். சில கதைகள் புத்தகத்துக்காக எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

முதலில் ஒரு முக்கியமான விஷயம். இந்தப் புத்தகத்தில் சில கதைகள் உங்களுக்கு பலத்த அதிர்ச்சியைத் தரலாம். கோட்பாடு பண்பாடு புடலங்காயெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு கதை என்று மட்டும் பார்த்தால் புகுந்து விளையாடியிருக்கிறார்.

ஆனால் பெரியவர்களுக்கான சீரியஸான கதைகளை விட குழந்தைகள் உலவும் இவரது கதைகளே என் விருப்பம். அவையும் பெரியவர்களுக்கானதே. இந்தப் புத்தகத்துக்கு இந்தப் பேரை வைப்பதை விட மரம் செடி மலை என்று பெயர் வைத்திருக்கலாம். தொகுப்பின் முதல் கதையான மரம் செடி மலைதான் எனக்கு பர்சனலாக மிகவும் பிடித்த கதை.

வாராது வந்த வாசகன், சாமியார் மகிமை, விதியுடனொரு விளையாட்டு போன்ற கதைகள் இவரது ட்ரேட்மார்க். எள்ளலும் பகடியும் பொங்கி வழிகிறது இக்கதைகளில். உதட்டோரப் புன்னகை நிச்சயம்.

புத்தகத்தின் ஆரம்பத்தில் குட்டீஸ்களுக்கு என்று புத்தகத்தை டெடிகேட் செய்திருக்கிறார். குட்டீஸ்களுக்கு டெடிகேட் செய்த புத்தகத்தில் யாக்கை, ஈரிலை கதைகள் தேவையா என்பது மட்டும்தான் (என்னுடைய) சின்ன நெருடல். குட்டீஸா இந்தப் புத்தகத்தை படிக்கப் போகிறார்கள் என்று யாரேனும் எதிர்க் கேள்வி கேட்கலாம்.

எது எப்படியாயினும் முதல் முயற்சி தைரியமான முயற்சி என்பதற்காகவே இவரைப் படிக்கலாம். எல்லாக் கதைகளும் இல்லையென்றாலும் நிச்சயம் உங்களை அசைத்துப் பார்க்கும் கதை இந்தப் புத்தகத்தில் இருக்கலாம்.

– ஹரீஷ்

 

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: