Home » Articles » மசால்தோசை 38 ரூபாய்

மசால்தோசை 38 ரூபாய்

இவருடைய ப்ளாகை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வாசித்து வருகிறேன். இவருடைய முந்தைய புத்தகங்களை படித்ததில்லை.

சமீபமாக புத்தகக் காட்சியை ஒட்டி இன்னொரு புத்தகம் கொண்டு வருவதைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தார். புத்தகம் வெளிவந்துவிட்டது. சுவாரசியமான ஏதாவதொரு கேரக்டர் பற்றி எழுதி அனுப்புங்கள். புத்தகம் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்தார்.

ஒரு பத்தி எழுதி அனுப்பி வைத்தேன். புத்தகம் வந்து சேர்ந்தது. இனி புத்தகம் பற்றி…

MAasal Dosai 38 Rs

மசால்தோசை 38 ரூபாய், வா. மணிகண்டன், யாவரும்.காம், ரூ. 110

தன் ப்ளாகில் எழுதிய கட்டுரைகளில் இருந்து இருபத்தைந்து கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் துன்புறுத்தாத அளவில் மூன்று முதல் நான்கு பக்கங்கள் மட்டுமே. மிகச் சிறிய புத்தகம். ஒரே மூச்சில் படித்தால் ஒன்றரை மணி நேரத்தில் படித்துவிடக் கூடியது.

ஒரு சாமானியனாக தான் அன்றாட வாழ்வின் போக்கில் எதிர்கொண்ட அனுபவங்கள்தான் பெரும்பாலான கட்டுரைகளில் வெளிப்படுகிறது. ஓரிரண்டு கட்டுரைகள் பால்ய வயது சம்பவங்களை ஒட்டி எழுதப் பட்டிருக்கின்றன.

நாவல்களில் இருக்கும் ஒரு வசதி சிறுகதை, கவிதைத் தொகுப்புகளிலோ கட்டுரைத் தொகுப்பிலோ எழுதுபவர்களுக்கு இல்லை. நாவலில் என்னதான் சொதப்பலான அத்தியாயங்கள் இடையில் இருந்தாலும் கடேசியா என்னதான் சொல்றாங்கன்னு பாப்போமே என்று பெரும்பாலும் படித்து முடித்துவிடுவோம். நான் அப்படித்தான்.

ஆனால் கட்டுரைத் தொகுப்பெல்லாம் போடும்போது அதிகபட்ச உஷாருடன் இருக்க வேண்டும். இடையில் ஏதாவது ஒரு பகுதி பிடிக்கவில்லை என்றால் புத்தகம் படிப்பதை நிறுத்திவிட்டு போடா என்று போய் விடக்கூடிய அபாயம் உண்டு.

அந்தச் சிக்கலை இந்தப் புத்தகம் பெருமளவுக்கு வெற்றிகரமாகக் கடந்து விட்டிருக்கிறது என்று தைரியமாக சொல்லலாம். இந்தப் புத்தகத்திலும் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து போகும் கட்டுரைகள் உண்டென்றாலும் அது மிகச் சிலவே.

பெரும்பாலான கட்டுரைகள் மனிதத்தையும் யதார்த்தத்தையும் பேசுகின்றன. சிக்கலில்லாத மொழியும் கடுப்பேற்றாத நடையும் இவரின் பெரும் பலங்கள். தலைப்புக் கட்டுரையான மசால்தோசை 38 ரூபாய் கட்டுரை எளிய மனிதர்கள் மீது நாம் எப்போதும் சுலபமாகக் கொண்டுவிடும் முன் முடிவுகளைக் கேள்வி கேட்கிறது.

சினிமா, புத்தகங்கள், டிவி என்று சென்டிமென்டுகளைப் பிழியப் பிழியப் பார்த்து ஒரு சைஸாக மரத்துப் போய் விட்ட, என்னைப் போன்ற கேஸ்களையெல்லாம் சோகத்தைக் காட்டியெல்லாம் அவ்வளவு சீக்கிரம் உணர்ச்சிவசப் பட வைக்க முடியாது.

கார்த்திக்கால் ஆன உலகம் என்கிற இந்தப் புத்தகத்தின் கட்டுரையால் அது நடந்தது. அந்தக் கட்டுரையைப் படித்த பின் வேகமாக பைக்கில் போகும் இளைஞர்களைப் பிடித்து இழுத்து நிறுத்தி முன்மயிரைப் பிடித்து உலுக்கி மெதுவாப் போக முடியாதா என்று கேட்கத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை இந்தப் புத்தகத்தின் ஆகச் சிறந்த கட்டுரையும் இதுதான்.

தர்ம அடி, சொற்களால் நிரம்பியவன் போன்ற கட்டுரைகளைப் படிக்கும்போது ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு சின்னப் புன்னகை உதட்டோரம் ஒட்டிக் கொண்டிருந்திருக்கிறது என்பதை கட்டுரை முடிந்த பின்பே உணர முடிகிறது.

ஈரம் தேடும் நாவுகள் கட்டுரை படிக்கப் படிக்க எதிர்காலத்தைப் பற்றிய பயம் வயிற்றுக்குள் உருளுவதை உணர முடிகிறது.

தாத்தாவைப் பற்றிய கட்டுரையும், சல்மான் கான் கட்டுரையும் படிக்கும்போது கொஞ்சம் மெலோடிராமாட்டிக்காக இருப்பதுபோல் தோன்றினாலும் அவையும் சிறு சலனத்தை ஏற்படுத்தாமலில்லை.

புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டு உட்கார்ந்து முழ நீளத்துக்குப் பெரிய அறிவாளி மாதிரி விமர்சனம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். இதுவே எழுதியவரின் வெற்றியாகக் கொள்ளலாம்.

போகவேண்டிய தூரம் இன்னும் உள்ளது.

வாழ்த்துக்கள் மணி.

ஹரீஷ்

 

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: