Home » Novel » புதிய எக்ஸைல்

புதிய எக்ஸைல்

நான் சாருவை அதிகம் படித்ததில்லை. சில சிறுகதைகள், சாருவின் வலைப்பூ, சில பத்திக் கட்டுரைகள். அவ்வளவே. அதனாலேயே ‘எக்ஸைல்’ படிப்பதற்கு ஆவலாக இருந்தது. மதிப்புரையின் இந்த முயற்சி படிப்பதற்கும் ஒரு உந்துதலாய் இருந்தது.

George Batailleன் ‘Story of the eye’ படித்தது ஒரு புது அனுபவமாய் இருந்தது. ‘பேசாப் பொருள்’ பேசிய அந்த நாவல் பல தளங்களில் புரிதலை ஏற்படுத்தியது. தமிழில் அத்தகைய எழுத்தை எழுதுபவர் சாரு என்று பல முறை படித்து கேட்டதும் இந்தப் புத்தகத்தைப் படிக்க மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.


புதிய எக்ஸைல், சாரு நிவேதிதா, கிழக்கு பதிப்பகம், ரூ. 1000

நாவல் கட்டமைப்பு என்பது இந்த சில நூறாண்டுகளில் பலவாறாக மாறி வந்துள்ளது. வரலாற்றுப் புதினங்களில் இருந்து பின் நவீனத்துவம் வரையிலான நாவல்கள், புதினங்களாக மட்டும் இல்லாமல் எழுத்தின் பல்வேறு பரிமாணங்களாகவும் இருந்துவந்துள்ளன. சாரு அவ்வாறே தமிழில் முதலில் ‘auto fiction’ என்ற genreல் எழுதுபவராக தன்னை முன் நிறுத்துகிறார்.

Auto fiction என்பது தன் வரலாறு (autobiography) எனப்படும் சுயசரிதையை கொஞ்சம் சாகசங்களுடன் எழுதுவது. அதுவே ‘எக்ஸைல்’. உதயா என்னும் எழுத்தாளரின் வாழ்வின் சில நிகழ்வுகளைப் பேசும் நாவல். அந்த எழுத்தாளர் அஞ்சலி என்ற மணமான பெண்ணுடன் கொண்டிருந்த காதல்/காமம் இந்த நாவலின் அடித்தளமாக இருக்கிறது. அதனூடே உதயாவின் வாழ்வின் பிற நிகழ்வுகள், அவன் வாழ்வின் ஊடே வரும் பிற மனிதர்களின் கதைகள் என விரிந்து செல்கிறது.

அஞ்சலியின் ஊடான காதல் முதல் சில பக்கங்களிலேயே அதன் வேகத்தை இழந்து கிட்டத்தட்ட படிக்க முடியாத அளவிற்கு அலுப்பூட்டுவதாக மாறி விடுகிறது. sms, கடிதங்கள் என விரியும் இப்பகுதிகள் பின் அஞ்சலியின் வாழ்க்கைக் கதையாக மாறும்பொழுது ஒரு தொலைக்காட்சித் தொடர் பார்க்கும் நிலையை அடைந்துவிடுகிறோம். அஞ்சலியின் கதையை விட்டு விட்டு வாசிக்கும் அளவிற்கு ஒரு கட்டத்தில் இந்த அலுப்பு இருந்தது. ‘கொக்கரக்கோ’ என்று ஒரு நண்பரின் சொற்களாக இடை இடையே வரும் கருத்துகள் இதை சாரு உணர்ந்திருப்பதைக் காட்டுகிறது.

இங்கே இந்த ‘கொக்கரக்கோ’ உத்தியைப் பாராட்டி ஆகவேண்டும். ஒரு வாசகனின் மன நிலையை ஒட்டி அமைந்திருக்கும் இந்தக் கருத்துகள் பிரதியின் இன்னொரு வாசிப்பை ஒரு எள்ளலுடன் முன்னெடுத்துச் செல்கிறது. உதயாவின் sexual prowess மற்றும்அஞ்சலியின் கண்ணீர்க் கதைகளை வாசிக்க இது மட்டுமே உதவுகிறது. இன்னுமொரு விதத்தில் இது நாவல் வாசிக்கும் அனுபவத்தின் குறுக்கே வருகிறது.

சாருவின் உரைநடை பல இடங்களில் நாவலின் வாசிப்பை உயர்த்துகிறது. பக்கிரி சாமியின் கதையும் இன்ன பிற மனிதர்களுடன் நிகழும் சிறு நிகழ்வுகளும் சுவாரசியமாக சொல்லப்படுகிறது.

சாரு ஒரு ‘name dropper’ என்று ஒரு கருத்து உண்டு. நான் அவ்வாறு கருதவில்லை எனினும் இவ்வாறான எழுத்தாளர்களுக்கு ஒரு முறையான அறிமுகம் இல்லாத வாசகர்களுக்கு இது ஒன்று எரிச்சலைத் தரும் அல்லது சாருவை பிரமிப்புடன் நோக்க வைக்கும். இதுவே சாருவின் வாசிப்பு/நிராகரிப்புக்கு காரணமாகி விடுகிறது. எழுத்தாளனின் வேலை இத்தகைய அறிமுகம் செய்து வைப்பதா? என்றால், என்னளவில் இல்லை என்றே சொல்லுவேன். ‘எக்ஸைல்’ முழுவதும் இத்தகைய Latin American / French ஆசிரியர்கள் வந்து செல்கிறார்கள்.

‘எக்ஸைல்’ ஒரு மாறுபட்ட வாசிப்பனுபவமாக இருக்கும் என்பதே நான் இதை தேர்ந்தெடுக்க வைத்தது. ஆனால் ஒரு குறைபட்ட அனுபவமாகவே அது முடிந்தது. சில இடங்களில் தெரியும் அந்த spark நாவல் முழுவதுமாக இருந்திருந்தால் இன்னமும் நன்றாகவே இருந்திருக்கும் என்று தோன்றியது.

Auto Fiction என்பதன் வாயிலாக அஞ்சலியின் affairஐ சாகசமாக எடுத்ததே இதன் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. சாருவின் கொண்டாட்ட வாழ்வின் சராசரி நெடுந்தொடர் நிகழ்வாய் இது மாறிப் போனதே காரணம்.

‘எக்ஸைல்’ என்ற தலைப்பும் கொஞ்சம் சுவாரசியமானதாக இருந்தது. சாரு தான் எதற்கு இந்தத் தலைப்பை வைத்தேன் என்று ஓரிடத்தில் கூறுகிறார். எனக்கென்னவோ தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்துகொண்டு அச்சமூகத்தால் தள்ளி வைக்கப்பட்டதாய் நினைக்கும் உதயாவே ‘எக்ஸைல்’ என்று தோன்றியது.

மொத்தத்தில் ஒரு நாவலாக ‘எக்ஸைல்’ கொடுக்கும் வாசிப்பனுபவம் ஏமாற்றத்தில் முடிந்தது என்றே சொல்லலாம்.

முத்து பிரகாஷ் ரவீந்தரன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-93-5135-191-7.html
ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

 

 


2 Comments

 1. என்ன சொல்வது இந்த விமர்சனத்தை ? வெளிப்படையானது என்பதா ? அல்லது சாருவின் கதையாக்கத்தின் உள்ளார்ந்த தேடல்களை உறவுகளின் நுண்ணிய முடிச்சுகளை கவனிக்க தவறி விட்டார் என்பதா தெரியவில்லை .

  ஆனால் ரூ1000 / கொடுத்து பெற வேண்டிய புத்தக்கதை இலவசமாக பெற்று ,அதற்க்கு மதிப்புரை எழுதும்போது நம்மால் அதை புரிந்து கொள்ளாமல் போகும் போது கூட அதன் சில பகுதிகளை இன்னும் கொஞ்சம் தொட்டு காட்டி சொல்லி இருக்கலாம் !

  இலவசமாக கிடைத்து விட்டதே என்பதர்க்காக பாராட்டி மட்டுமே எழுத வேண்டும் என்பதாக சொல்ல வ்ருவதாக புரிந்து கொள்ள வேண்டாம் .ஆனால் நமக்கும் இந்த இலவசமாக புத்தகம் பெற்று விமர்சனம் செய்வதுவும் எதர்க்கு என்று மறு பரிசீலினை பண்ணி கொள்வது யாவருக்கும் நலம் .இது தொடர நாம் ஒரு காரணமாக இருக்கிறது …அந்த வாய்ப்பை மற்றவருக்கு கிடைப்பதை தடுத்து விட வேண்டாம் .புரியும் என்பதாக புரிந்து கொள்கிறேன் .நன்றி .

  Like

 2. //சில இடங்களில் தெரியும் அந்த spark //
  சில இடங்கள் என்பதால் உங்களால் குறிப்பிட்டு சொல்ல இயலும் அல்லவா?
  அந்த spark கிடைக்கும் சில இடங்களை குறிப்பிடுங்களேன்!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: