Home » History » இந்தியப் பிரிவினை – உதிரத்தால் ஒரு கோடு

இந்தியப் பிரிவினை – உதிரத்தால் ஒரு கோடு

இந்தப் புத்தகத்தில் இந்தியப் பிரிவினை பற்றி ஒரு விரிவான பார்வை கிடைக்கிறது. புத்தகத்தின் ஆரம்பத்திலேயே, இந்தியப் பிரிவினையால் ஏற்பட்ட வலியைத் தெளிவாகக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். ஒரு ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் சம்பவங்களின் மூலம், அன்றைய இந்தியாவின் பிம்பத்தைக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். அதைப் பற்றி காந்தி, ஜின்னா, நேரு ஆகியோரிடம் எழுப்பப்படும் கேள்விகள், ஒவ்வொரு இந்தியனிடமும் கேட்கத் தகுந்த கேள்விகளே. அந்த நிகழ்ச்சியை நேரில் கண்ட ஒவ்வொருவரும் “எதற்கு இந்த சுதந்திரம்?” என்கின்ற கேள்வியை நிச்சயம் கேட்பர்.

இந்தியப் பிரிவினை – உதிரத்தால் ஒரு கோடு, மருதன், கிழக்கு பதிப்பகம், ரூ. 140

இப்புத்தகத்தின் நிகழ்ச்சிகள் மவுண்ட்பேட்டன் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஆக பதவியேற்றதில் தொடங்குகிறது. அவரின் காலத்தில்தான் இந்தியப் பிரிவினையின் பூர்வாங்க பணிகள் ஆரம்பித்தன. எனவே இது மிகச் சரியான ஒரு தேர்வே என நினைக்கிறேன். மேலும், தேவையான இடத்தில் சரித்திர நிகழ்ச்சிகளை கூறிச் செல்வது, படிப்பதற்கும் அந்நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை அறியவும் உதவியாக இருக்கிறது.

காங்கிரஸ், முஸ்லிம் லீக், அலிகார் இயக்கம் போன்ற அமைப்புகளின் தோற்றத்தைப் பற்றி இப்புத்தகம் விரிவாக தெரிவித்திருக்கிறது. பிரிவினையில், ஜின்னா அவர்களின் பங்கும், அவரின் அரசியல் வாழ்க்கையைப் பற்றியும் இப்புத்தகம் எடுத்துரைக்கிறது. அவர் காலத்திற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப தன் கொள்கைகளை மாற்றிக்கொண்டதைப் பற்றியும் விளக்குகிறது.

இந்தியப் பிரிவினை மதத்தின் பெயராலே நடந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்து-முஸ்லிம்-சீக்கியர் மூன்று மதத்தைச் சேர்ந்தவர்களும் தத்தம் பங்கிற்கு மற்ற மதத்தினரை  காவு வாங்கினர், களங்கப்படுத்தினர். அது தான் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பிரிவினை விஷயத்தில் காந்தியை குற்றம் சொல்பவர்கள் பலர். இப்புத்தகத்தின் பின்பக்க அட்டையில்கூட, “என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும், என்று சொன்ன காந்தி ஏன் பிரிவினையை ஏற்றுக்கொண்டார்?” என்கின்ற கேள்வி முன்வைக்கப்பட்டிருக்கிறது. “காந்தி நினைத்திருந்தால் இதை தவிர்த்திருக்க முடியுமா? எனில், இது காந்தியின் தோல்வியா?” என்பதின் பதில்தான் இந்த நூல்.

காந்தி பிரிவினையைத் தவிர்ப்பதற்காக ஆட்சி அதிகாரத்தையும் விட்டுத்தர தயாராய்தான் இருந்தார். ஆனால் நேருவும் படேலும் அதற்கு சம்மதிக்கவில்லை. ஜின்னா தன் நிலையில் உறுதியாக இருந்தார். எனவே தான் பிரிவினை நிகழ்ந்தது என்பதை இப்புத்தகம் தெளிவாக உணர்த்தியிருக்கிறது. சுதந்திரம் என்னும் வார்த்தை காதில் விழும்வரை காந்தியின் பேச்சைக் கேட்ட இந்திய மக்கள், அதன் பின்னர் அவர் பேச்சைக் கேட்காமல் தங்கள் நிலையில் பிடிவாதமாய் இருந்ததுதான் இதற்கான காரணம் என நான் புரிந்துகொண்டேன்.

இந்தியாவிற்கு சுதந்திரம் தந்ததால் இங்கிலாந்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களையும் இப்புத்தகம் எடுத்துரைக்கிறது. சுதந்திரம் தர முற்பட்ட தேதி முதல் இந்திய-பாகிஸ்தான் எல்லை முடிவு செய்யப்பட்டது உள்பட எல்லாம் ஒரு குத்துமதிப்பாகதான் நடந்தது என்பதை இப்புத்தகத்தின் மூலமே தெரிந்துகொண்டேன்.

இப்புத்தகத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் பிடிவாதமும், இந்து அமைப்புகளின் நடவடிக்கைகளும்தான் பிரிவினையின் அடிநாதம் என்பதை தெளிவாக விளக்குகிறது. பிரிவினையின் சமயம், அந்த அரை வருடம் பிரிந்திடாத இந்தியாவில் இரண்டு ஜாதிதான்; கொல்லத் துடிப்பவர்கள், கொல்லப்படுபவர்கள் என்பதை இப்புத்தகத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இதனைதான் “ஹே ராம்” படத்திலும் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

பின்னிணைப்பு 1ல் கொடுக்கப்பட்டிருக்கும் “பிறகு” என்னும் தகவல்கள் மிகவும் பயனுள்ளது. அதில் “மதவெறி” என்பதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கம் “இன்னமும் சாகவில்லை”, நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் ஒரு விளக்கம். பின்னிணைப்பு 2ல் கொடுக்கப்பட்டிருக்கும் “காலவரிசை” மிகவும் பயனுள்ளது.

மொத்தத்தில் இந்தியப் பிரிவினையைப் பற்றித் தெரிந்துகொள்ள நல்லதொரு படைப்பு. திரு. மருதன் அவர்களுக்கும், மதிப்புரைக்கும் என் நன்றிகள்.

சங்கர் கிருஷ்ணா

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-81-8493-038-2.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: