Home » History » பாகிஸ்தான் போகும் ரயில்

பாகிஸ்தான் போகும் ரயில்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மானோ மாஜரா எனும் கிராமமே இந்நாவலின் கதைக்களம். பரந்து விரிந்திருந்த பாரத தேசம், சுதந்திரத்தின்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளாகத் துண்டாடப்படுகிறது. அந்நேரத்தில் ஏற்பட்ட மதக்கலவரங்களினால் பல இலட்சக்கணக்கான மக்கள் மிகப்பெரிய அளவு இடப்பெயர்வைச் சந்திக்கின்றனர்.

பாகிஸ்தான் போகும் ரயில், குஷ்வந்த் சிங், கிழக்கு பதிப்பகம், ரூ. 175

நடைப் பயணம், சாலைப் போக்குவரத்து மற்றும் இரயில் பயணங்கள் மூலம் வருவோரும் (பாகிஸ்தான்) இங்கிருந்து (இந்தியா) செல்வோரும் ஏராளம். அதில் பலருடைய உடைமைகளும் உயிர்களும் சூரையாடப்பட்டது.

ஒரு மாலை வேளையில், எல்லையில் எந்தவிதப் பதற்றமும் இன்றி மதநல்லிணக்கங்களுடன் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மானோ மாஜரா என்னும் கிராமத்திலுள்ள இரயில் நிலையத்திற்கு பாகிஸ்தானிலிருந்து ஒரு இரயில் வந்து வெகு நேரமாக நிற்கிறது.

அந்த இரயிலில் இருந்து எவரும் இறங்கவுமில்லை, ஏறவுமில்லை, இரயில் வண்டியும் மேற்கொண்டு புறப்பட்டுச் செல்லவில்லை. எனவே சந்தேகத்தின் பேரில் அங்கு பணியிலிருந்த காவலர்கள் சென்று ஒவ்வொரு பெட்டியாக சோதனையிட்டனர். அப்போது அவர்கள் அங்கு கண்டிருந்த கோரக் காட்சிகள் அவர்களை மட்டுமல்ல நம்மையும் உலுக்கும் வண்ணமிருந்தன.

ஆம், இரயிலில் பயணித்து வந்த அனைவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணங்களாகவே இங்கு (இந்தியா) வர அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என அனைவரும் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டிருந்தனர். உயிரற்ற உடல்களை காவல் துறையினர் விறகு மற்றும் மண்ணெண்ணெய் கொண்டு அருகிலிருந்த இடத்திலேயே எரித்து சாம்பலாக்கினர்.

ஊர் முழுவதும் இந்தச் செய்தி காட்டுத் தீப்போல பரவியது. இந்த நேரத்தில் ஒருவரது குற்றத்தை முன்வைத்து அடுத்தவர்கள் தங்களது குற்றத்தை (காழ்ப்புணர்ச்சிகளை) அரங்கேற்றத் தொடங்கினர்.

குறிப்பிட்ட சிலரின் தூண்டுதலின் பேரில் இரயில் வண்டி மூலம் பாகிஸ்தான் செல்லவிருக்கும் அனைத்து முஸ்லீம் மக்களையும் கொன்று பிரேதங்களை மட்டுமே அங்கே அனுப்ப வேண்டுமென ஒரு குழு முடிவு செய்து களத்திலிறங்கி செயலாற்றினர். இதன் மூலம் இந்து, முஸ்லீம், சீக்கியர் என ஒற்றுமையுடன் வாழ்ந்துவந்த மானோ மாஜரா கிராமம் சிதறுண்டு போனது.

சுதந்திர தேசத்திலும் பதற்றத்துடன் செய்வதறியாது மக்கள் தத்தமது உடைமைகளையும் உறவுகளையும் இழந்து இடமாற்றத்திற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர்.

“எரியிற வீட்டுல புடுங்கிறது இலாபம்”  என்ற சொல்லாடலுக்கு ஏற்றபடி பலர் விட்டுச் சென்ற பொருள்களையும், கால்நடைகளையும் நயவஞ்சகர்கள் சிலர் களவாடத் தொடங்கினர்.

இறுதியாக இரயிலில் செல்லும் (காதலி) மக்களுக்காக, நயவஞ்சகர்களின் பாதகச் செயலை முறியடித்து அப்போராட்டத்தில் தனது இன்னுயிரையும் இழக்கும் ஜக்கா சிங் மனிதத்தைக் காப்பாற்றி நமது நெஞ்சில் நீங்கா இடம்பிடிக்கிறார்.

நம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தேசப்பிரிவினை எவ்வாறு ஒரு மிகப்பெரிய களங்கமோ அதுபோலவே பிரிவினையில் ஏற்பட்ட பல இழப்புக்களில் இச்சம்பவமும் நம்மை இன்னும் உலுக்குகின்றது.

வட இந்திய தேசத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தென்னிந்தியாவைச் சேர்ந்த நம்மை முழுமையாகப் பாதிக்கவில்லை என்றே சொல்லலாம்.

‘பாகிஸ்தான் போகும் ரயில்’ ஒரு மொழிபெயர்ப்பு நாவல் என்பது புத்தகத்தின் அட்டைப் படத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி வாசகர்களுக்கு மொழிபெயர்ப்பை நினைவுபடுத்தாத அளவிற்கு நாவல் விறுவிறுப்பாகப் பயணிக்கிறது.

குமார்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-81-8493-668-1.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: