Home » Novel » ஆயிரத்தில் இருவர்

ஆயிரத்தில் இருவர்

ஆயிரத்தில் இருவர் வரதட்சணை கொடுமையால் இறந்து போகிறார்கள் – என்கிற புள்ளி விவரத்துடன் புத்தகம் துவங்குகிறது. புத்தகத் தலைப்புக்கு அதுதான் காரணம் என்று நீங்கள் முடிவு கட்டக்கூடும். இல்லை. அந்த ஆயிரத்தில் இருவர் – கணேஷ், வசந்த். சுஜாதா விரும்பிகளைப் பொறுத்தவரையில் கணேஷ், வசந்த் என்பவர்கள் வெறும் கதாபாத்திரங்கள் அல்ல. அவர்களை நிஜ மாந்தர்களாகவே பாவித்த சமூகம் நம்முடையது. குறிப்பாக வசந்த்திற்கு ரசிகைகள் ஏராளம். ஒரு கதையில் வசந்த்துக்கு திருமணம் செய்வதாக எழுதி, இளம்பெண்களின் சாபங்களைப் பெற்றுக்கொண்டாராம் சுஜாதா.

ஆயிரத்தில் இருவர், சுஜாதா, கிழக்கு பதிப்பகம், ரூ. 70

கணேஷ் – வசந்த் கதைகளைப் பொறுத்தவரையில் அவற்றை இரண்டு வகையாகப் படிக்கலாம். நாம் வெறுமனே வாசகர்களாக இருந்து படிக்கக்கூடியவை. மற்றொன்று நாமும் கணேஷ், வசந்த்துடன் சேர்ந்து துப்பறியக் கூடியவை. ஆயிரத்தில் இருவர் இரண்டாவது வகையறா. மிகவும் கடினமெல்லாம் இல்லை பிரதர். முதல் அத்தியாயத்திலேயே குற்றவாளி யார் என்பதற்கான க்ளுவைக் கொடுத்துவிடுகிறார் சுஜாதா. கவனமாகப் படிக்கவேண்டியது மட்டுமே நம் வேலை.

வேறு சில சுஜாதா நாவல்களைப் போல அல்லாமல் முதல் அத்தியாயத்திலேயே கணேஷ் – வசந்த் உள்ளே வந்துவிடுகிறார்கள். அவர்களைச் சந்திக்க ஒரு கண் பார்வையற்றவரும் அவருடைய இளைய மகள் (வசந்த் மொழியில் எத்திராஜ் காலேஜ் எத்னிக் சிக்) ப்ரதிமா இருவரும் வருகிறார்கள். ப்ரதிமாவின் மூத்த சகோதரியான நாராயணி ஒரு கேஸ் விபத்தில் இறந்திருப்பார். அது விபத்து அல்ல. அவளது கணவர் மற்றும் குடும்பத்தினரால் திட்டமிட்ட கொலை என்று குற்றம் சாட்டுகிறார்கள். அதனை கணேஷ், வசந்த் கூடவே நாமும் சேர்ந்து கண்டுபிடிக்கிறோமா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

சுஜாதா நாவல்களில் நான் மிகவும் ரசிக்கிற விஷயம் ஒன்று உண்டு. அந்தக் காலகட்டத்தில் சுஜாதா தன்னுடைய நாவல்களை வார / மாத இதழ்களில் எழுதி வந்திருப்பார். எனவே, தொடர்ச்சியாக இதழ் வாங்குபவர்கள் மட்டுமே நாவலைப் புரிந்துகொள்ள முடியும். அப்படியானால் இடையில் எங்கேயாவது படிக்கத் துவங்கியவர்களுக்கு? அவர்களுக்காகவே ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பார் சுஜாதா. ஆயிரத்தில் இருவரில் பத்தாவது அத்தியாயத்தில் வருகிறது. ஏதாவது இரு பாத்திரங்கள் மூலமாகவோ அல்லது வேறு விதமாகவோ இதுவரை நடந்த கதைச் சுருக்கத்தினை கதையினூடே சொல்லிவிடுவார்.

த்ரில்லர் நாவல்களில் உள்ள ஒரு சிக்கல் மிகுந்த சிரத்தையெடுத்து நாவலைப் படித்து முடிக்கையில் கதையின் முடிவு அப்படியொன்றும் பெரிய சுவாரஸ்யமாக இருக்காது. ஆயிரத்தில் இருவரும் அப்படித்தான் என்றாலும் கூட சுஜாதாவுக்காகவும், கணேஷுக்காகவும், வசந்த்துக்காகவும் வாசிக்கலாம்.

என்.ஆர். பிரபாகரன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-81-8493-612-4.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: