Home » Articles » தொழில் வல்லுநர்

தொழில் வல்லுநர்

இந்தப் புத்தகம் ஒரு சாமானிய மனிதனுக்கு எந்த சுவாரஸ்யத்தையும் தர வல்லதல்ல. ஆனால், ஒரு துறையில் வல்லுநராக இருப்பவருக்கும், வல்லுநராக நினைப்பவருக்கும் தேவையான தகவல்களைக் கொண்டது.

தொழில் வல்லுநர், சுப்ரதோ பாக்ச்சி, கிழக்கு பதிப்பகம், ரூ. 200

ஒரு துறையில் வல்லுநராக இருப்பவருக்கு, நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்ற உணர்வைத் தரும். ஒரு துறையில் வல்லுநராக நினைப்பவருக்கு மேலும் என்ன செய்யவேண்டும் என்பதை உணர்த்தும்.

மருத்துவமும், பொறியியலும், சட்டமும் பயின்றவர்கள் மட்டும் தொழில் வல்லுநர் அல்ல. ஒரு வெட்டியான் கூட தொழில் வல்லுநர்தான். யார் ஒருவர் தன் வேலைகளை முழு மனதுடன் யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் சிறப்பாகச் செய்து முடிக்கிறாரோ அவர்தான் ‘தொழில் வல்லுநர்’.

மருத்துவமும், பொறியியலும், சட்டமும் பயின்ற, நேர்மையற்றவர்கள் எப்போதும் தொழில் வல்லுநர்களாக முடியாது என்று தெளிவாக உரைக்கிறது இந்நூல். நேர்மையும், செயலும்தான் ஒருவரை தொழில் வல்லுநர் ஆக்கும்.

பொதுவாக பணம் என்ற அளவைக் கொண்டே நிறுவனங்கள் வல்லுநரை எடை போடும். அது மட்டுமே வல்லுநரின் அடையாளம் அல்ல என்பதை பல இடங்களில் உறுதியாகக் கூறுகிறார். நேர்மையும், திறமையும், நல்ல பண்புகளையும் ஒருங்கே உடையவர்தான் அத்துறையின் வல்லுநர்.

ஆசிரியர் சுப்ரதோ பாக்ச்சி எளிமையான மனிதர்களுக்குள் ஒளிந்திருக்கும் வல்லுநரைத் தேடிப் பிடித்து நமக்குக் காட்டுகிறார். மாபெரும் மனிதர்களைக் காட்டி அவர்களின் நேர்மையையும், திறமையையும், பண்புகளையும் விளக்குவதைத் தவிர்த்து இருப்பது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.

பணமும், புகழ்ச்சியும், போலி முகமூடியும்தான் இன்று பலரை வீணடித்துக் கொண்டிருக்கிறது.

இவையனைத்தையும் தகர்த்தெறிந்து தன் தொழிலைச் சிறப்பாகச் செய்யும்போதுதான் ஒரு வல்லுநர் உருவாகிறார். உதவுவதும், உதவி கேட்பதும் மிக முக்கியமான ஒன்று என்று விளங்க வைக்கிறார்.

சில இடங்களைத் தவிர, மொழியாக்கம் சிறப்பாகவே உள்ளது. ஆசிரியர் கணினி துறை சார்ந்தவர் என்பதால் அத்துறை சார்ந்த பல அனுபவங்களைக் கூறியிருப்பது மற்ற துறை சார்ந்த வாசகர்களுக்கு சற்று சலிப்பை ஏற்படுத்தலாம்.

நரேந்திரன்

 

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-93-5135-153-5.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: