Home » Articles » ஓலைச்சுவடி

ஓலைச்சுவடி

தாளியோலை எனும் மலையாள மூலத்தை ஓலைச்சுவடியாக்கியிருக்கிறார் ஆசிரியர். வந்தாரை வாழவைக்கும் தமிழைப் போல, எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் மெய்பொருள் காணும் வகையாக இந்தப் புத்தகத்தை வழங்கியிருக்கிறார். இன்றைய காலத்திற்கு இது எந்த வகையில் உதவும் என்பது இளைஞர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்து ஆதரிப்பதைப் பொறுத்தே அமைகிறது. பள்ளிகளில் இப்போது சமூக நீதி, நீதி போதனை என வகுப்புகளை நடத்திட வேண்டும் என்று அரசியலார் பாடுபடுகின்ற இந்த வேளையில், இந்தப் புத்தகம் நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஓலைச்சுவடி, வெங்கானூர் பாலகிருஷ்ணன், அடோன் பப்ளிஷிங் குரூப், ரூ. 240

அடிப்படையில், பண்டைக் காலத்தவர்கள் ஏதாவது சொல்லி நம்மை நம்ப வைத்துள்ளனர் என்றால் அதற்குப் பின்னால் தெளிவான சாஸ்திரமும், அறிவுரையும் அடங்கியிருக்கும் என்பதை மையமாகக் கொண்டு இந்தப் புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கு ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் சில ஆசாரங்கள் இந்தக் காலகட்டத்தில் ஒவ்வாதவையாக உள்ளன. அதற்கும் காரணம் நாம்தான் என்பதை மறந்திடல் கூடாது. உதாரணத்திற்கு, முடிந்தவரை காலில் செருப்பு அணியாமல் நடை பழகுவது அன்றைய சீன அக்குபஞ்சர் முறைக்கு ஈடானது என்கிறார். ஆனால் நாமோ காலில் செருப்பு அணியாமல் தெருவில் இன்று நடமாட முடியாத நிலைமையில் இருக்கிறோம். காரணம் உங்களுக்கே தெரியும். சுகாதாரமின்மைதான். அந்த நிலைமையை உருவாக்கியதே நாம்தான் என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அது நீங்களோ நானோ அல்லது பக்கத்து வீட்டுக்காரனாவோ இருக்கலாம்.

காலையில் எழுந்து சிறிது தூரம் நடந்து பின்னர் ஆற்றிலோ குளத்திலோ குளிக்கவேண்டும் என்கிறார். இன்றைய இந்தியாவில் மக்கள் பெருக்கம் காரணமாக எல்லா குளங்களும் சுத்தமில்லாமல் உள்ளன அல்லது பாகம் பிரித்து வீடு கட்டும் மனையாகிப் போனது ஒரு வருந்தத்தக்க சம்பவம்.

உடம்பிலும் தலையிலும் தேய்த்துக் குளிக்கும் எண்ணெய்களும் பல வித ரசாயனப் பொருட்கள் கலக்கப்பட்டு அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு விற்கப்படுகின்றன.

இப்படியாக இன்றைய இளைஞர்கள் அலைக்கழிக்கப்பட்டு என்ன செய்வது எதைக் கடைப்பிடிப்பது என்பது புரியாமல் திரியும் இந்த வேளையில் இந்தப் புத்தகம் ஒரு வரப்பிரசாதம்தான். மீண்டும் நாம் அந்த கலப்படமில்லாத, உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காத உற்பத்திப் பொருட்கள் கிடைத்த காலத்திற்குத் திரும்பிச் செல்ல மாட்டோமா என ஏங்க வைக்கிறது.

நாம் ஏன் தாய் தந்தை குருவை வணங்க வேண்டும், எப்படி வணங்க வேண்டும் போன்ற பல உண்மைகளைத் தெரிந்துகொள்வதில் தவறில்லை அல்லவா? இன்றுதான் தினமும் நாளேடுகளில் பார்க்கிறோமே, மாணவன் ஆசிரியரை அடித்தான் என்றும் ஆசிரியர் மாணவியை மானபங்கம் படுத்தினான் என்றும். இதற்கெல்லாம் காரணம் இவர்களுக்கு சிறு வயதிலிருந்தே இது போன்ற ஒரு நல்லொழுக்கப் பாடம் இல்லாமல் போனதுதான்.

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என எல்லா வகை ஆசாரங்களும் மிகத் தெளிவாக எப்படி உபயோகப்படுகின்றன, ஏன் எப்படி கடைப்பிடிக்க வேண்டும்? அதனால் என்ன நன்மைகள் என வரிசைப் படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது.

ஆனால் கோயில் கொடி மரத்தை விட உயரமான கட்டடம் கட்டினால் தீ பிடிக்குமா என்ற தலைப்பில் ஒரு சில விஷயங்கள் சரியாக வரவில்லை என்றே நினைக்கிறேன். கோயிலின் கொடி மரத்தை விட கோபுரம் உயரம் அல்லவா? எப்படி இவர் கொடிமரத்தை இங்கே குறிப்பிடுகிறார் என்பது புரியவில்லை. ஒரு வேளை மொழி மாற்றத்தின் பலனாய் இது இங்கே நேர்ந்திருக்குமோ?

பிறப்பு முதல் இறப்பு வரை, சீமந்த பலன்கள் முதல் கல்யாணம் ஆன பெண் கடைப்பிடிக்க வேண்டிய சாஸ்த்ரிய சம்ப்ரதாயங்கள் வரை என இப்படிப் பல சொல்லிக்கொண்டே போகலாம்.

இத்துடன் மதிப்பிட இயலாத அன்றாட வாழ்க்கையில் பயனளிக்கும் தியான மந்திரங்கள் இணைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொன்றையும் நாம் ஆற அமர யோசித்துப் பார்த்தால் நமது முன்னோர்கள் உண்மையாகவே நமக்கு பல பொக்கிஷங்களை நமக்காக விட்டுப் போயிருப்பது தெளிவாகப் புரிய வருகிறது.

இப்படியாக நம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சம்பவத்தையும் ஒன்று விடாமல் அலசி ஆராய்ந்து இங்கே 325 பக்கங்களில் உருவாக்கி நாம் வாழ்வாங்கு வாழ மெனக்கெட்டு இருக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் இனியாவது இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கும் பல விஷயங்களை, இந்தக் காலத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்களை மனதில் இருத்தி நம் வருங்கால சந்ததியினராவது சிறப்பாக வாழ முதல் படியை எடுத்து வைப்போமாக.

அசோக்ராஜ்

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0001-539-0.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: