Home » History » மொழிப்போர்

மொழிப்போர்

Sanskrit திணிப்பு என்ற சர்ச்சைகள் எழும் இந்த சந்தர்ப்பத்தில் மொழிப்போர் நூல் படித்தது பொருத்தமாக இருந்தது. இன்று அறிக்கை அளவில் மட்டும் நிற்கும் இந்த சர்ச்சைகள் ஒரு காலத்தில் பல உயிர்களை பலி கொண்டுள்ளது என்பது சோகம் கலந்த வியப்பு.

பல மொழிகள் பேசப்படும் இந்தியாவில், ஹிந்தியை தேசிய ஒருமைப்பாடு என்ற போர்வையில் ஆட்சி மொழியாகவும் தேசிய மொழியாகவும் திணிக்க நடந்த முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களே மொழிப்போர் நூலின் சாரம்.

மொழிப்போர், ஆர். முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், ரூ. 110

பிடித்தது:

– மொழிப் போரின் நான்கு நிலைகளை தெளிவாக விவரித்தது.
– யார் யார் மொழிப் போரில் பங்கு பெற்றார்கள், அவர்களின் பங்களிப்பு என்ன, திராவிட இயக்கத்தின் பங்களிப்பு என்ன, மாணவர்களின் பங்களிப்பு என்ன என்ற பல கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் தந்தது.
– ஹிந்தி ஒரு மொழி என்ற எண்ணத்தைத் தகர்த்து ஹிந்தியின் பிரிவுகளை உணர்த்தியது.
– வரலாற்றை திரிக்காமல் எழுதியது.

ஆனால் Pro-Hindi தரப்பு வாதங்கள் சற்று குறைவாக உள்ளதாக தோன்றியது. தேசிய ஒருமைப்பாடு என்ற காந்தியின் வாதம் தவிர தீவிரமான வாதங்கள் இடம் பெறவில்லை. இதனால் ஆசிரியர் சற்று நடுநிலை தவறுவது போன்று ஒரு எண்ணம் தோன்றுகிறது.

மேலும் ஹிந்தி எதிர்ப்பு நடைபெற்ற மற்ற மாநிலங்களின் போராட்டங்கள் பற்றி விவரிக்கவில்லை. ஆட்சி மொழித் தேர்வு உலகின் பல நாடுகளில் சர்ச்சை நிறைந்ததாகவே இருந்து உள்ளது. அவைகளை ஆசிரியர் விவரித்து இருக்கலாம்.
(http://www.princeton.edu/~apatten/languagepolicy_politicaltheory.pdf)

மேலும் திராவிட இயக்கங்கள் தங்கள் அரசியல் லாபத்துக்கு ஹிந்தி எதிர்ப்பை உபயோகித்துக் கொண்டன என்ற எண்ணம் இன்றளவும் சிலரிடம் உள்ளது. அந்த விசயத்தில் ஆசிரியர் திராவிட இயக்கங்களின் ஆதரவு நிலைப்பாடு கொண்டு உள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலைப்பாட்டில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் ஆசிரியர் இந்த விசயத்தை மேலும் விரிவாக  எழுதி இருக்கலாம். அது வருங்கால சந்ததியின் சந்தேகங்களை விலக்கி இருக்கும்.

மொழிப் போரின் விளைவாக மொழிப் போரில் பங்குகொள்ளாத மாணவர்கள் அடைந்த  சிரமங்கள் என்ன, அவர்களின் மன நிலை என்ன போன்ற கேள்விகளுக்கு விடை இல்லாமல் போனது சற்று ஏமாற்றமாக இருந்தது.

Pro-Tamil தரப்பில் அதிகமான நபர்கள் இருப்பதால் அனைவரின் பெயர்களையும் மனத்தில் நிறுத்த முடியவுில்லை. அனைவரின் பங்களிப்புகளை விளக்கினால் இந்தப் புத்தகம் கையடக்கப் புத்தகமாக இருக்காது.

இந்தச் சிறு சிறு குறைகள் தவிர்த்து இந்த நூல் மொழிப் போர் பற்றி அறிய சிறந்த ஆவணம். புத்தகத்தில் Pro-Hindi தீவிரமாக இல்லாவிட்டாலும் நடைமுறையில் ஹிந்தியை நாட்டின் அனைத்து மூலைக்கும் கொண்டு சென்று விட்டார்கள் என்பது நிதர்சனம்.

ஆனந்த வேல்முருகன்

ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/978-81-8493-961-3.html

ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: