Home » History » வில்லாதி வில்லன்

வில்லாதி வில்லன்

இருபத்து நான்கு வில்லன்களைப் பற்றி பேசும் போது தலைப்பு மட்டும் ஒருமையில் உள்ளதே என வாசிக்க ஆரம்பிக்கும் போது தோன்றிய எண்ணம், போகப் போக விலகியது. ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் என எவரும் இல்லை. உண்மையில் வில்லாதி வில்லன் என்ற தலைப்பு மிகப் பொருத்தம்.

நல்ல புத்தகம் பல வாசல்களை திறக்கும் என்பார்கள். வில்லாதி வில்லன் அந்த உண்மையை மீண்டும் நிரூபிக்கிறது.


வில்லாதி வில்லன், பாலஜெயராமன், கிழக்கு பதிப்பகம், ரூ 175

 ராபர்ட் ஈ. லீ, டியாகோ டி லான்டா, கோரட்டேஸ், பிசாரோ ஆகியோரை இந்நூலின் மூலமாக அறிமுகம் செய்து கொள்ளும் ஒருவர், இயல்பாக அமெரிக்க வரலாற்றை தேடி விரைவார்.

லிட்டன் மற்றும் ராபர்ட் கிளைவின் சுயநலமும் பதவி வெறியும் விளைவித்த கொடூரங்கள், இன்னும் இந்தியாவை வெள்ளைக்காரன் ஆண்டிருந்தால் நன்றாக இருக்கும் எனப் பேசிக்கொண்டிருக்கும் விபரம் அறியாதவர்களின் வாயை மூட வைக்கும். ஏதோ இப்போதிருக்கும் ஜனநாயகம் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றவாவது வாய்ப்பளிக்கிறது. ஏகாதிபத்திய ஆட்சியில் குரல்கூட எழுப்ப முடியாத அவலத்தை படித்து பதைக்கிறோம்.

பொதுவாக எல்லா தத்துவங்களும் மத போதனைகளும் சுத்த தங்கம் போன்றவை. அதை மட்டும் வைத்து ஆபரணங்கள் செய்ய முடியாது. நகையாக செய்ய கொஞ்சம் செம்பு கலக்க வேண்டும். அதேபோல தான் தத்துவம் ஆட்சி செய்ய முடியாது, ஆட்சி செய்ய கொஞ்சம் கலவை அவசியம். இங்கே ஆரம்பிக்கிறது சிக்கல். தான் புரிந்துகொண்டதுதான் உண்மையான தத்துவம் என்று ஒவ்வொருவரும் செய்த அட்டகாசங்களை பால் பாட், ரோயெஸ்பியர், ஜியா உல் ஹக், Kim ஆகியோரை படித்து அதிர்கிறோம்.

கொடூரமான குணநலன்களுடன் ஆணும் பெண்ணுமாய் இரண்டு டிராகுலாக்கள் பற்றிய விவரங்கள் இப்புத்தகத்தில் உண்டு. இனிமேல் வைரம் அணிவது பற்றிய குற்ற உணர்ச்சியை செசில் ரோட்ஸ் என்கிற வில்லன் அளிக்கப் போவது நிச்சயம்.

இந்த புத்தகத்தில் இந்தியாவோடு தொடர்புடைய வில்லன்கள் ராபர்ட் கிளைவும் லிட்டன் பிரபுவும் மட்டும்தான். ஆனால் தற்போதைய இந்தியாவிற்கு பாடமாக இருக்க கூடிய பிரச்சனைகளை அல்லது வில்லன்களை இப்புத்தகம் சுட்டிக் காட்டுகிறது. அவர்கள் நபர்கள் அல்லர், மனநிலைகள்.

ப்ரோடொக்கால்ஸ் ஆஃப் சியான் என்ற ஒரு புத்தகம் எப்படி யூத இனத்தையே எதிரிகளாக கட்டமைத்து மாபெரும் இன அழிப்பிற்கு வழி வகுத்தது என்பதை படிக்கும்போது, முந்தைய ஆட்சியாளர்களை வெறியர்களாக காட்டி பள்ளிப் பருவத்தில் இருந்தே குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக மன நிலையை உருவாக்கினால் என்ன விலையை கொடுக்க நேரிடும் என்பதையும், அதன் விளைவுகளை இன்னும் விரிவாக ஹூட்டு டூட்சி இன மோதல்கள் பற்றி படிக்கும்போதும் அறிகிறோம். அந்த வகையில் இப்புத்தகம் பெரியவர்களுக்கு மட்டுமன்றி அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டியது அவசியம்.

– சட்டநாதன்

ஆனலைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-514-1.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: