Home » Biography » நபிகள் நாயகம்

நபிகள் நாயகம்

உலகிலேயே இரண்டாவது பெரிய மதமும் அன்பை போதிக்கும் மதமாகவும் அறிப்பட்ட இஸ்லாத்தை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் வெகு நாட்களாகவே இருந்து வந்தது. இஸ்லாத்தின் கடைசி தூதராக அறிப்பட்ட முகமது நபி அவர்களின் வாழ்க்கையை இந்தப் புத்தகம் எளிமையாக விளக்குகிறது.


நபிகள் நாயகம், தாழை மதியவன், கிழக்கு பதிப்பகம், ரூ 300

அன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் இருந்த பல்வேறு மத நிலைபாடுகள் குறித்த அறிமுகம், அதில் இருந்த குறைகளை முன்வைத்து நூல் துவங்குகிறது. இறைத்தூதர் இபுறாகீம் அவர்களின் புதல்வர் இஸ்மாயில் மற்றும் துணைவி ஷாஜிரா ஆகிய இருவரும் இறைவனின் சித்தப்படி அரபுலகம் வழியாக ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள் அங்கே ஜம்ஜம் நீருற்றை கண்டடைகிறார்கள். பிறகு அவர்களை காணவந்த இபுறாகிம் நபிகள் இறைவன் ஆணைப்படி அங்கு கஅபா எனும் ஆலயத்தை நிர்மானித்து இறைவன் ஒருவனே என்ற அடிப்படையில் அதை தரிசிக்க வரும்படி அழைப்பு விடுக்கிறார். இபுறாகீம் அவர்களின் அழைப்பு மற்றும் ஆலயம் அமைந்திருந்த இடத்தின் புவியியல் ரீதியான முக்கியத்துவத்தினால் பலரும் வழிபட ஆரம்பிக்கின்றனர். இது நடந்தது கி. மு 2௦௦௦ களில் அந்த கஅபா தான் மக்காவில் அமைந்துள்ள இஸ்லாமியர்களின் புனிதத்தலம்.

காலம் உருண்டோட கி. பி 400 களில் கஅபாவின் நிலைமை வெகுவாக மாறுகிறது. இபுராஹீம் நபிகளாரின் வழித்தோன்றல்களான குறைஷி இனத்தவர் கஅபாவின் காவலர்களாக தொடர்கின்றனர். ஓரிறைக் கொள்கை மழுங்கடிக்கப்படுகிறது வழிபட வந்த பல்வேறு இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் பல சிலைகளை வைத்து அவற்றை வழிபட ஆரம்பித்தனர். அவற்றை நிர்வாணமாக வலம் வரும் மூட நம்பிக்கைகளும் பரவியிருந்தன. கி. பி 571 இல் அண்ணலார் பிறக்கிறார் முகமது என பெயரிடப்படுகிறார். இளமைக்காலம் அடைந்தவுடன் கஅபாவின் பொறுப்பு அவரை அடைகிறது. கஅபாவை புனர் நிர்மாணம் செய்கிறார் குறைஷிகளிடமும் ஆலயத்தை வணங்க வரும் மற்ற கொத்திரத்தினரிடமும் செல்வாக்கு பெற்றவராக விளங்குகிறார். சில காலத்திற்கு பிறகு ஹிரா குகையில் “ஓதுவீராக, நீரே இறைத்தூதர்” என அருளப்படுகிறார். இறைவன் ஒருவனே அவன் உருவமற்றவன் நான் அவரின் தூதுவர் என்றும் பின்பற்றும் மூடப்பழக்கங்கள் தேவையற்றவை என சொல்ல சொந்த சகோதரர்களான குறைஷிகளே அவரை விரட்டுகின்றனர். யத்ரிப் நகரில் (மதீனா) குடியேறுகிறார். பலர் அண்ணலாருக்கு இறைவனால் சொல்லப்பட்ட குர் ஆன் வாசனைகளை கேட்டு இஸ்லாத்தை பின்பற்ற தொடங்க எங்கே கஅபாவில் வைக்கப்பட்டுள் சிலைகளும், நம்பிக்கைகளும், கஅபாவின் பாதுகாவலர்கள் என்ற பெயரும் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் முகமதை ஒழிக்க தீவிரமாகிறார்கள். இஸ்லாத்தை ஏற்றவர்கள் துணைகொண்டு பத்ருப்போர், உஹதுப்போர், அகழிப்போர் என பல போர்களை எதிர்கொண்டு கஅபாவை கைப்பற்றுகிறார். இஸ்லாத்தை தழைக்க செய்கிறார்.

மிக எளிமையான நடை, ஆரம்பத்தில் பல்வேறு கோத்திரங்களும், பெயர்களும் நினைவில் கொள்ள கடினமாக இருந்தாலும் அவை பிற்பாடு புத்தகம் முழுவதும் வருவதால் அவசியமாகிறது. இடையிடையே குர்ஆன் வசனங்கள் மற்றும் நபிகளார் பின்பற்றிய போர்த்தந்திரங்கள், போர் கைதிகளை நடத்திய விதம், அன்பு செலுத்திய பாங்கு இஸ்லாத்ததை அன்பு மதமாகவே வளர்த்தெடுக்கிறது.

கடவுள் சார்ந்த குழப்பங்கள் என் மனத்தில் எப்போதும் உண்டு. ஏன் எல்லோருக்கும் பொதுவான, fantasy background இல்லாத, கட்டுப்பாடுகளை விதிக்காத, அவரவர் சுதந்திரத்தை மதிக்கின்ற, என்னை வணங்கினால் மட்டும் நன்மை செய்வேன் வரம் தருவேன் என்ற சுயநலமில்லாத கடவுளோ, கொள்கையோ, சக்தியோ இல்லை என அடிக்கடி தோன்றும்.

அறிவியல் சார்ந்து கடவுள் இல்லை என்று சொல்ல முடியாது என்று தோன்றுகிறது. சுஜாதாவின் “கடவுள் இருக்கிறாரா” என்ற புத்தகத்தில் சொல்லுவார், “Science can define how? But cant why?” உலகம் எவ்வாறு தோன்றியது என்றால், பெரு வெடிப்பு நிகழ்ந்து தனிக் கோளாக பிரிந்து, நுண்ணுயிர் பரிணாமம் பெற்று மனித உருவானான் என ஒரு definition ஐக் கூற இயலும் ஆனால் ஏன் உருவானது என்ற கேள்விக்கு பதில் கூற இயலாது. கேள்வி அபத்தமானதாகத் தோன்றலாம் ஆனால் என்ன காரணம்? எதற்கு இவ்வளவு பெரிய galaxy?

ஆக அறிவியலால் நெருங்க இயலாத ஒன்று உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். ஏன் அந்த ஒன்றை அனைவருக்கும் பொதுவான கடவுளாக முன்னெடுக்கவில்லை? குறைந்தபட்சம் கடவுள் பற்றிய விவாதம் பெரிதாக நடக்கவில்லை

ஆன்மிகம் பற்றிய கேள்விகள் முன்வைக்கப்படுவதேயில்லை. அப்படி வைக்கப்படும்போது அதன்மேல் “நம்பிக்கையின் அடிப்படை” என்ற கருத்தின் மூலம் ஒதுக்கிவிடுகிறார்கள். ஆன்மிகம் பற்றிய விவாதமே பகுத்தறிவுக்கு இட்டுச்செல்லும். அதற்கு முதலில் ஆன்மீகத்தை பற்றிய அறிமுகம் தேவை. அந்தவகையில் இஸ்லாத்தின் அறிமுகத்திற்கு உதவிய நல்ல நூல்.

– ஜெகதீஸ் தனபால்

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-5135-164-1.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: