Home » Biography » விவேகானந்தர்

விவேகானந்தர்

“நூறு இளைஞர்களைத் தாருங்கள், இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்“ எனச் சொன்ன அறத்துறவி “விவேகானந்தர்“ பற்றிய தொகுப்புகள்தான் இந்த நூல். நூலின் ஆசிரியர் பலரும் அறிந்த ரஞ்சனி நாராயணன் அவர்கள். இவர் ஏற்கெனவே பல நூல்கள் எழுதியுள்ளார். வலைதளங்களிலும், பத்திரிக்கைகளிலும் எழுதிவரும் அருமையான எழுத்தாளர்.


விவேகானந்தர், ரஞ்சனி நாராயணன், கிழக்கு பதிப்பகம், ரூ 150

பாரதியாரின் வார்த்தைகளுடன் இந்த நூல் துவங்குகிறது. விவேகானந்தர் பிறந்தநாள் முதல் அவர் எப்பொழுது ராமகிருஷ்ணரை சந்தித்தார், அவரிடம் எப்படி சீடனாக சேர்ந்தார், அதனால் அவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்ன, ராமகிருஷ்ணா மிஷன் எப்போது, எப்படி துவங்கப்பட்டது என முதல் 43 பக்கங்கள் ஓடிவிடுகின்றன. பின்னர் அவரின் சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்கள் வருகின்றன. பயணக் கட்டுரைகள் சுவாரஸ்யமாக இருக்காது. ஆனால் இங்கு இடையிடையே நமக்கு அதிகம் தெரியாத சில தகவல்கள் வருவதால் அப்படி ஆகவில்லை.

சுவாமிஜியின் முதல் சீடர் பெயர் “சரத் சந்திர குப்தர்“, பவஹாரி என்றால் காற்றை சாப்பிடுபவர் என அர்த்தம், சிக்காகோவில் பயணத்தில் சுவாமிஜி தங்க உதவியவர் மிஸ் கேத்ரின் ஆப்ட் சேன்பான், பட்டினியில் கிடக்கும் ஒருவனிடம் மதத்தை பற்றி பேசுவது அவனை அவமதிப்பது போல, சுவாமிஜியை எதிர்த்து “வங்கவாஸி“ என்ற பத்திரிகை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது – இப்படிப் பல சுவாரஸ்யமான செய்திகள்.

சுவாமிஜியின் வாழ்கையை பத்து அத்தியாயங்களாகப் பிரித்து எழுதியுள்ளார் நூலாசிரியர். இந்த வருடம் அவரின் 151 வது வருடம். “அனைத்துப் பரிமாணத்திலும் மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சியே விவேகானந்தரின் செய்தி“ என்ற ரவீந்தரநாத் தாகூரின் வரிகளுடன் நூல் முடிகிறது.

மறைந்த நபர்களைப் பற்றி எழுதும்போது அனைவரும் அறிந்த செய்திகள்தான் அதிகம் கிடைக்கும். ஆனால் இந்த நூலில் பல விஷயங்கள் புதிதாக உள்ளன. அதனால் படிக்க ஆர்வம் ஏற்படுகிறது.

மழுப்பாமல் சில விஷயங்கள் நேரிடையாகச் சொல்லபடுகிறது. உதாரணமாக கிருஸ்துவ மிஷன்கள் இந்துக்களை மதம் மாறச் செய்த செயல்கள் பற்றிய விவரம், விவேகானந்தர் சென்ற இடங்களை பற்றி வரிசையாக எழுதியது, அதிக அத்தியாயங்கள் இழுக்காமல் சுருக்கமாக முடித்தது போன்றவை இந்நூலின் சிறப்புகள்.

ஒரு வாசகனாக சில பரிந்துரைகள்/ஆசைகள்: வெறும் வார்த்தைகளாக இல்லாமல் விவேகானந்தரின் மாறுபட்ட படங்களை இடையிடையே போட்டிருக்கலாம். ஒவ்வொரு அத்தியாயம் ஆரம்பத்திலும், இறுதியிலும் அவரின் பிரபலமான / முக்கியமான வரிகளைச் சேர்த்திருக்கலாம். துன்பம் அதிகமானதால்தான் அவர் காளியை ஏற்றுகொண்டார் என்பது போல உள்ளது. இது சரியா எனத் தெரியவில்லை.

ஒவ்வொரு நூலிலும் ஆசிரியரைப் பற்றியும், அவர் எழுதிய பிற நூல்களைப் பற்றியும் ஒரு பக்கம் எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். கிழக்கு பதிப்பகம் இதனைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மொத்தத்தில் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது என்பதில் சந்தேகம் இல்லை.

– ராஜபாட்டை ராஜா

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-97-5135-166-5.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


1 Comment

  1. […] மதிப்புரை.காம் தளத்தில் வந்த இந்தப் புத்தகத்தின் மதிப்புரை இங்கே: […]

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: