Home » Biography » செங்கிஸ்கான்

செங்கிஸ்கான்

மாவீரன் அலெக்சாண்டர் பற்றி படித்த நம்மில் பலருக்கும் அவரை விட பல மடங்கு வலிமையுடன் ஒரு மங்கோலிய தேசத்தை உருவாக்கி, உலகின் பெரும்பகுதியை போரிட்டு வென்று, ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை ஆண்ட ஒரு மாவீரனைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் ‘செங்கிஸ்கான்’ எனும் பெயரைக் கடக்காமல் நம்மால் சரித்திர புத்தகத்தை மூடியிருக்க முடியாது. டெமுஜின் – ஆம் இதுதான் அந்த மாவீரனின் இயற்பெயர். வலிமை வாய்ந்த பேரரசனுக்கு மகனாக பிறந்து, இவன் எப்படி படிப்படியாக உலகத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான் என்பதுதான் இந்த புத்தகத்தின் சாராம்சம். இவரைப்பற்றி வரலாற்றில் நாம் படித்திராத பல தகவல்களையும் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் ஒரு சேர நமக்கு கொடுப்பது முகிலின் அசத்தலான எழுத்து நடைதான் என்றால் அது மிகையாகாது.


செங்கிஸ்கான், முகில், கிழக்கு பதிப்பகம், ரூ 185

உள்ளங்கையில் ரத்தக் கட்டியோடு உலாகாள வேண்டி டெமுஜின் பிறந்திட்ட தருணத்தில் ஆரம்பித்து, தன் பால்யத்தில் வில்வித்தை கலையில் தேர்வதாகட்டும், ஒன்பதாம் அகவையில் தன் வாழ்க்கைத் துணியை தேர்ந்தெடுத்த பக்குவமாகட்டும், ஜமூக்கா என்ற நண்பனுடன் ரத்த பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு அவன் கண்ட கனவான ஒன்றிணைந்த மங்கோலியா உருவாக்க பாடுபடும்போது காட்டும் நட்பாகட்டும் நமக்கு கதை படிக்கும் உணர்வு போய் அதை காணோளியாய் காணும் உணர்வே மேலோங்கி நிற்கிறது.

வரலாற்றை வகுப்பறையில் படிக்கும்போது கண்ணுறங்கும் மாணாக்கர்களில் ஒருவனான நான் இந்த சரித்திர புத்தகத்தை படிக்கையில் கீழே வைக்க மனமின்றி ஒரே மூச்சில் வாசித்து முடித்து வைத்த போது ஏற்பட்ட மனநிறைவு ஒரு திரைப்படத்தை பார்த்து எழுந்த சுகானுபவத்தைக் கொடுத்தது. அதிலும் ஜமுக்காவுடன் டெமுஜின் நண்பனாக பழகி, பின் சூழ்நிலையால் அவனையே தன் எதிரியாக பாவிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் அவனுடன் போரிட்டு வெல்கையில் நான் முன் குறிப்பிட்ட வரிகளின் உண்மையை உணர முடியும்.

பொதுவாக இதுபோன்ற சரித்திர கதைகளில் மண்ணுக்காகவும், பெண்ணுக்காகவும்தான் போர்கள் நிகழ்ந்ததாக படித்திருப்போம். இந்தக் கதையிலும் போர்களின் காரணம் அதுவேதான். என்றபோதும், துவக்கத்தில் மங்கோலிய இனத்தவர்களை ஒருங்கிணைக்க வேண்டி ஆரம்பித்த போர்கள், பின்னாளில் வெற்றியின் ருசி கண்டபின்பு மற்ற நாடுகளின் மீது படையெடுத்து எல்லையை விரிவுபடுத்த நிகழ்ந்த போர்களாகின. இந்தப் போர்கள் மூலம் சரித்திரத்தின் சிவந்த பக்கங்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்தப் புத்தகம்.

புத்தகத்தில் ரசித்து சிலாகிக்க பல விஷயங்கள் நிச்சயம் உண்டு. ஆயினும் புத்தகத்தின் கடைசி பக்கங்களில் விவரிக்கப்பட்டுள்ள படையெடுப்புகள் பற்றிய தகவல்கள் மற்றும் செங்கிஸ்கானின் வாரிசுகள் நடத்திய போர்கள், ஒருங்கிணைந்த மங்கோலிய பேரரசு பற்றிய தகவல்கள் இரத்தினச் சுருக்கமாக கொடுக்கப்பட்டிருப்பதாய் உணர்ந்தேன். அவை இன்னும் கொஞ்சம் விரிவாய் கூறப்பட்டிருக்கலாமோ என்கிற ஒரு மெலிதான ஏக்கம் இருந்தது. இனிதாய் சென்ற ஒரு இரயில் பயணம் திடீரென்று முடிந்து போனது போன்ற ஒரு உணர்வு அது. இருந்த போதும் இது செங்கிஸ்கானைப் பற்றிய கதை என்பதால் அவர் இறப்போடு முற்றுப் பெறுவதே பொருத்தமாக இருக்கும் என்பதால் நம் மனம் அதையும் ஏற்றுக் கொள்ளும்.

போரின் உக்கிரத்தை உணர்ந்தவர்கள் யாவரும் செங்கிஸ்கானின் வீரத்தை மறந்து அவனை பிணங்களின் மேல் படுத்துறங்கும் ஒரு கொடுங்கோலனாக மட்டுமே பார்க்கக் கூடும். ஆனால் தந்தையின் இறப்புக்கு பழிவாங்க, தற்காப்புக்காக, இனத்தின் ஒற்றுமைக்காக, துரோகத்தை முறியடிக்க என ஒவ்வொரு போர்களுக்கு பின் இருந்த நியாயத்தையும், போருக்காக டெமுஜின் செய்த தந்திரங்களையும் முகிலின் எழுதுகோல்களின் வழி படிக்கும் போது செங்கிஸ்கானை ஒரு ஒப்பற்ற போர்வீரனாக, சிறந்த தலைவனாக, பாசமுள்ள தந்தையாக மட்டுமே பார்க்க முடிகிறது. தமிழில் செங்கிஸ்கானின் வரலாற்றை இதற்கு முன் யாரும் பதிவு செய்ததாய் தகவல் இல்லை. முகிலின் சிறப்பான முயற்சிக்காகவே இந்தப் புத்தகத்தை நிச்சயம் வாங்கலாம்..!

– கோவை ஆவி

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8368-865-9.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: