Home » Health » சர்க்கரை நோயாளிகளுக்கான உணவும் – உணவு முறைகளும்

சர்க்கரை நோயாளிகளுக்கான உணவும் – உணவு முறைகளும்

உங்களுக்கோ உங்கள் வீட்டில் ஒருவருக்கோ சர்க்கரை நோய் இருந்தால் நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது. “நாம் தான் சரியாக மருந்துகளை சாப்பிடுகிறோமே! உணவு கட்டுப்பாடு அத்தனை அவசியமா?” என்ற கேள்வி பலருக்கு இருக்கலாம். இதற்கான பதிலே முதல் அத்தியாயத்தில் சுவாரசியமாக விளக்கப்படுகிறது.”உணவு கட்டுப்பாட்டில் சர்க்கரைக் நோயாளி காண்பிக்கிற அலட்சியததின் விலை, அவருடைய உயிராக கூட இருக்கலாம் என எச்சரிக்கிறார் ஆசிரியர். ஏனென்றால், கண் பார்வை பாதிப்பு, இதய நோய், சிறுநீரக பாதிப்பு என அது ஏற்படுத்தும் பாதிப்புகளின் லிஸ்ட் மிகப் பெரியது.”


சர்க்கரை நோயாளிகளுக்கான உணவும் உணவு முறைகளும், டாக்டர் எஸ். முத்துச் செல்லக்குமார், நலம் வெளியீடு, ரூ 100

உணவு கட்டுப்பாட்டின் அவசியம் புரிந்தவர்களுக்கு, உணவின் அடிப்படை சத்துக்கள் பற்றியும், சர்க்கரை நோய் எவ்வாறு ஏற்படுகிறது என்ற விவரங்களும் தெரிந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்குமே… கார்போஹைட்ரேட் (மாவுச் சத்து), புரதம், கொழுப்பு, விட்டமின்கள் தாது உப்பு, மற்றும் தண்ணீர் ஆகியவை உணவின் அடிப்படை சத்துக்கள். கார்போஹைட்ரேட் நம் உடலில் ஜீரணமாகி, குளுக்கோஸ் என்ற சர்க்கரைப் பொருளாக உட்கிரகிக்கப்படுகிறது. இந்த குளுக்கோஸ் ரத்த ஓட்டம் மூலம் உடலின் எல்லா அணுக்களுக்கும் செல்கிறது. உடலில் உள்ள கணையம் இன்சுலின் என்ற ஹார்மோனை சுரக்கின்றது.

இந்த இன்சுலின் தான் குளுக்கோஸை எரித்து உடலுக்கு தேவையான சக்தியைக் கொடுக்கிறது. இன்சுலின் உற்பத்தி நடைபெறாமல் போனாலோ அல்லது போதுமான அளவு இன்சுலின் கிடைக்காமல் போனாலோ, குளுக்கோஸ் எரிக்கபட்டு சக்தியை உருவாக்கும் வேலை நடக்காது. இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடிக்கொண்டே போகும். இந்நிலையைத்தான் சர்க்கரை/நீரிழிவு/டயாபடீஸ் நோய் என்கிறோம். இவ்விவரங்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் மிக எளிதாக எழுதியிருக்கும் விதம், இந்நூலாசிரியர் இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த மருத்துவ நூலாசிரியர் விருதுகளைப் பெற்றவர் என்பதை சொல்லாமல் சொல்கிறது.

உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டிய காய்கறிகள், ஓரளவு சாப்பிடக்கூடிய பருப்பு/பயறு வகைகள், முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றிய விவரங்கள், அவற்றை ஏன் உண்ண வேண்டும்/ தவிர்க்க வேண்டும் என்ற காரணங்களோடு பட்டியலிடப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு எதை சாப்பிடுவது என்பது எவ்வளவு முக்கியமோ, அதைப் போல் எப்படி உணவை சமைப்பது, எவ்வப்போது சாப்பிடுவது என்பதும் முக்கியம். அவை குறித்து தரப்பட்டுள்ள ஏராளமான டிப்ஸ்கள் பயனுள்ளவை. சர்க்கரை நோயாளிகள் உப்பு எந்தளவு சேர்த்துக் கொள்ளவேண்டும்? செயற்கை சர்க்கரை சாப்பிடலாமா? என்ற முக்கியமான கேள்விகளுக்கும் இப்புத்தகத்தில் பதில் உள்ளது.

சூப் வகைகள், காய்கறி/கீரை வகை உணவுகள், தானிய/பருப்பு வகை உணவுகள் என 43 உணவுகளின் செய்முறைகள் விளக்கப்பட்டுள்ளது. இவற்றிக்கான தேவையான பொருட்கள், நம் வீட்டு சமையலறையில் ஏற்கனவே பயன்படுத்தும் பொருட்களே. செய்முறையும் இல்லத்தரசிகள் இன்முகத்துடன் எளிதாக செய்யும் வண்ணமே உள்ளது. குடை மிளகாய் சூப், புதினா டிக்கி, பசலைக் கீரை கபாப் போன்றவை சர்க்கரை நோயாளிகளுக்கும் ‘இனிக்கும்’. புத்தகத்தின் பின்னினைப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கான மாதிரி உணவு அட்டவணைகளும், உணவுகளின் குளுக்கோஸ் அளவீடுகளும் தரப்பட்டுள்ளது.

நவம்பர் 14ஆம் தேதி உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி, பல சர்வே முடிவுகள் இந்திய மருத்துவ அமைப்புகளால் வெளியிடப் பட்டுள்ளன. இந்தியா சர்க்கரை நோயின் ‘தலைமையிடமாக’ மாறியுள்ளதையும், தமிழகத்தின் சிறு கிராமங்களில் கூட சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளதையும் அறிய முடிகிறது. இத்தகைய சூழலில், சர்க்கரை நோயைத் தடுக்க/தவிர்க்க/தள்ளிப்போட இந்நூலைப் படிப்பதும் கடைப்பிடிப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.

– எஸ். சொக்கலிங்கம்

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8368-559-7.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: