Home » Drama » டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு

டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு

“சுஜாதா, இந்த வார்த்தை என்னுள் ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம். அறியாத வயதிலியே, அவரின் சினிமா படைப்புகளை அவருடையது என அறியாமலே அவற்றை நேசித்திருகேன். 1986 லேயே “விக்ரம்“மில் அவர் புகுத்திய அறிவியல் தகவல்கள் அளவிட முடியாதது. அவரின் சிறுகதை, நாடகங்களே அவரை திரைத்துறையில் ஜொலிக்கவைத்தது. அவ்வாறு ஒரு நாடகம் தான் ” டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு “.

டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, சுஜாதா, கிழக்கு பதிப்பகம், ரூ 100

நாடகங்கள் ஒரு காலத்தில் மக்களின் முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது. அதனின் பரிணாமமே திரைதுத்றை ஆகும். ஆனால் நாடகங்களில் இருக்கும் ஒரு இயல்புத்தன்மை, சுவாரசியங்கள் சினிமாவில் இருப்பதில்லை. அதனால்தான் இன்றும் பல நாடக குழுக்கள் உயிர்ப்புடன் இருக்கின்றன.
இதைப் புத்தக வடிவமாகக் கொண்டு வந்த கிழக்கு பதிப்பகத்திற்கு நன்றி. இதில் ஆசிரியர் கிட்டதட்ட முழு நாடகத்தையும் சொல்லிக் கொடுத்து விட்டார். மேடை பிரிப்பது, ஒளி அமைப்பு, கதாபாத்திர குணம், வசன உச்சரிப்பு தொனி என அனைத்தையும் தெளிவாக உரைத்திருக்கிறார்.

ஒரு நாடகம் வெறும் பொழுதுபோக்காக இல்லாமல், மக்களை சிந்திக்க வைக்கும் ஒரு ஊடகமாகவே இருந்திருக்கிறது. இந்நாடகத்திலும், ஊழலே மையம்மாக உள்ளது. ஹெச்.எம். என்ற அரசியில்வாதியின் கையில் சிக்கும் டாக்டரின் மீது போடப்பட்ட வழக்கே இது. ஆசிரியர், அவரை கிட்டத்தட்ட மூன்றாவது காட்சியில்தான் வெளிபடுத்துகிறார்.

இந்நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் நம் வாழ்வில் சந்திக்க கூடியவர்களே. டாக்டர், ஒரு ஐடியல் என்று உரைக்கும் அளவுக்கு மனிதநேயம் மிக்கவர். பணத்தைவிட தன் மனசாட்சிப்படி செய்யும் வேலைதான் முக்கியம் என்று வேலை செய்பவர். கணேஷ், தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் தன் கடமையை செய்யும் ஒரு வழக்கறிஞர். ஆனால் வசந்த்தின் கதாப்பாத்திரம், ஏதும் உள்ளுக்குள் வைக்காத, மனம் சொல்வதை வாயில் பேசும் கதாப்பாத்திரம். இருவரையும் டாக்டருக்காக வாதாடவைத்தது மிக அருமையான ஒரு யுக்தி. இதனால் ஆசிரியரால் நியாயத்தின் வாதத்தையும், நடைமுறை வாதத்தையும் வைக்க முடிகிறது. வசந்த்தின் இறுதி வாதம் பார்வையாளர்களை நிச்சியம் யோசிக்க வைக்கும்.

ஆசிரியர், ஒரே நாடகத்தில் நான்கு சமுதாய பிரச்சனைகளை கையாண்டிருக்கிறார். பிள்ளைகளின் பாசம் இல்லாத பெற்றோர்களின் அவலநிலையை சரவணன் என்னும் முகம் காட்டாத ஒரு கதாப்பாத்திரம் மூலம் காட்டியிருக்கிறார். பாவிகள் சிலர் செய்யும் கொடுமையால் பெண்குலத்திற்கு ஏற்படும் களங்கத்தையும், அது அவள் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்பையும் மஞ்சுளா கதாப்பாத்திரம் மூலம் காட்டுகிறார். ஒரு குழந்தை தன் வயதுக்கு அதிகமாக நடப்பது யாருக்கும் பிடிக்காது என்பதை ரவி என்னும் சைல்ட் ப்ரோடிகி மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார். அரசியல்வாதிகள் சிலரின் பொறுப்பற்ற, அடாவடியான தன்மையையும், அவர்கள் அரேங்கேற்றபடும் அராஜகத்தையும் ஹெச்.எம்மின் உதவியாளர் இளவழகனைக் கொண்டு காட்சிப் படுத்தியிருக்கிறார்.

சுஜாதாவின் பன்முகத் தன்மையை ரவி என்னும் கதாப்பாத்திரம் மூலம் வெளிபடுத்தியிருக்கிறார். அந்த சிறு வயது குழந்தை, ராகம் முதல் லூக்கிமியவின் மருந்து வரை தெரிந்து வைத்திருக்கிறார் என்ற பிரமிப்பு அவரைப் போன்ற “சைல்ட் ப்ரோடிஜியை” பார்த்தால்தான் நமக்கு புரியும். கடைசியில் மஞ்சுளாவும் ஈஸ்வரனும் அடிக்கும் அந்தர் பல்ட்டி, இந்த நாட்டில் நல்லவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை விட சிறுசிறு பதவிக்கும், பணத்துக்கும் கிடைக்கும் மரியாதை அதிகம் என்னும் உண்மையை பட்டவர்த்தனமாக வெளிபடுத்தியிருக்கிறார் சுஜாதா.

நாடகத்தில் ஆரம்பத்தில் மூன்று உரையாடல்களில், டாக்டரை ஒரு மனிதாபிமானம் இல்லாத மனிதனாய்க் காட்டிவிட்டு, பின்னர் மீண்டும் அக்காட்சிகளின் உண்மை தன்மையை விளக்கும் காட்சிகளில் ‘ஆஹா’ போடவைக்கிறார் ஆசிரியர். ஆரம்பம் முதல் டாக்டர் சொல்லும்படியாக “நீங்கள் எல்லாம் ஒரே கட்சி” என ஆரம்பிப்பதில் இருந்து, கடைசியாக இளவழகன் சொல்லும் “தீர்ப்பு என்னன்னு சொல்லட்டுமா ??” என்பது வரை ஒவ்வொரு வசனமும் மிகவும் சிறப்பாக அமைந்ததிருக்கிறது. மொத்தத்தில் கொஞ்சம் கற்பனை திறன் இருந்தால், நாடகத்தை பார்க்கும் மகிழ்ச்சியை கொடுத்துவிடும் எழுத்து.

– சங்கர் கிருஷ்ணா

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-676-6.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: