Home » Biography » முசோலினி

முசோலினி

விளையாட்டுத்தனமாக இந்த புக்க தந்தா விமர்சனம் எழுதுவேன்னு “முசோலினி” மண்டையில் நச்சுன்னு ஒரு தட்டு தட்டினேன்… சீரியஸ்ஸாகவே 2நாளில் புத்தகம் வந்து சேர்ந்தது! தீயா வேலை செஞ்சதையும் , புக் பேக்கிங் செய்யப்பட்ட விதத்தையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பாராட்டு! 🙂

பேக்கிங் அழகில் மயங்கி பிரிக்காமல் வைத்திருந்த அந்த ஒருநாள் ஆகட்டும்… புத்தகத்தை டேபிளில் வைத்து சுபயோக சுபதின சுபமுகூர்த்தத்தில் வாசிக்க அமரலாம் என முடிவு செய்த வரை ஆகட்டும்- ஹிட்லரின் ’ஆமாஞ்சாமி’ முசோலினி என்பதையே வளச்சு வளச்சு எழுதியிருப்பாங்க என்றே தான் நினைத்து முதல் பக்கத்தை திறந்தேன்… இத்தாலியை காப்பாற்ற இறைவனால் அனுப்பப்பட்டவர் என புனிதபோப் மெச்சியதையும், ரோமானிய ஜீனியஸ் என சர்ச்சைவாய் சர்ச்சில் உச்சுகொட்டியதையும் போட்டு புருவத்தை உயர்த்த வைத்துவிட்டது புத்தகம். அடடா! முசோலினி பத்தி சரக்கு ஏராளம் இருக்கும் போலவே என்ற எதிர்பார்ப்பை ஆரம்பத்திலேயே விதைத்தது அருமை!


முசோலினி, ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், ரூ 150

முன்னுரை,என்னுரை,பதிப்புரை, அய்யாத்துரை, வெள்ளைதுரை போன்ற எவ்வித சடங்கு சம்பிராதயங்களும் அல்லாமல் எடுத்த எடுப்பிலேயே அறிமுகம் – நன்மைக்கே! புத்தகம் வாசிக்க தொடங்கும் போதே விக்கிபீடியா பழக்கதோசத்தில் சடார்ன்னு நிறுத்தி இதுக்கு ஆதாரசுட்டி எங்கே என புத்தகத்தின் எந்த பக்கம் தேடினும் காணக்கிடைக்கவில்லை-ஏமாற்றம்! ஒரு வரலாற்று புத்தகத்திற்கு முக்கிய நன்பகத்தன்மையை ஏற்படுத்துவதுதான். எதிலிருந்தெல்லாம் இந்த தகவல்கள் பெறப்பட்டது என்ற தகவல் கிடைக்காததால் மொட்டைகடிதாசியை வாசிக்கும் எபெக்ட் தவிர்க்க முடியவில்லை. அடுத்த பதிப்பில் தவிர்க்காமல் சேர்த்துவிடவும்.

எந்த ஒரு சர்வாதிகாரி, கொடுங்கோலன், தாதா பற்றிய புத்தகமும் “உலகமே காரித்துப்பும் இந்த சாக்கடைக்குள்ளும் சில வாசமிக்க நறுமணங்கள் ஒளிந்துகிடந்தது” போன்ற பில்டப் வரிகளுடனேயே தொடங்கியிருக்கும். வழிமுறையை கட்டுடைக்காமல் இவ்வார்த்தை அறிமுகத்தில் கொடுக்கப்பட்டிருந்த போதிலும் கூட முசோலினியின் செயல்களை நியாயப்படுத்த முயற்சிக்கும் எந்த எழுத்துக்களும் இல்லாதது பெருமூச்சு..

தட்டான் தொழில் செய்த அப்பாவில் ஆரம்பித்து , இறுதியில் பெட்ரொல்பங்கின் கூரையில் தொங்கவிடப்பட்டது வரைக்குமான முசோலினியின் தினசரிநடவடிக்கையை சுருக்கி உள்ளதை உள்ளபடியே கொடுத்தும்… மானே தேனே போன்ற பார்மாலிட்டீஸ் கொண்டு பக்கங்களை நிரப்பாததும் ஒரு வரலாற்று புத்தகத்துக்கே உரிய தோற்றத்தை கொடுக்கிறது! ப்ளஸ்… சபாஷ்…

169 காதலிகள் இருந்தாங்க, காதல்கடிதங்கள் குவிந்தன (இந்த அரைவேக்காட்டு பொண்ணுங்க சினிமாலமட்டும் இல்ல… நெஜத்துலையும் மொள்ளமாரி,திருடன்,பொறுக்கியதான் லவ் பண்ணுவாங்க போல! இது எந்த மாதிரியான டிசைன்? ) , 14 வயது பெடாசி காதல் வயப்பட்டது, துப்பாக்கி முனையில் ரசேல்லை திருமணம் செய்தது , பாலியல் நோய் போன்றவற்ற சில விஷயங்களை தவிர்த்து புத்தகம்முழுக்க பத்திரிக்கை எழுத்தாளர்,ராணுவம், போர்! அரசியல்! பாஸிசம்! சோஷலிஸ்ட்! ………..

பல வாசகங்களின் மொழிபெயர்ப்புகள் நேர்த்தியானவை… உயிரோட்டமிக்கவை… உதாரணத்துக்கு பக்கம் 47 ல்…
புனிதர்கள் தேவாலயங்கள், ஆகியவற்றுக்கு மெலாக இன்பம் துன்பம் ஆகியவற்றிலும் எங்களுக்கு நம்பிக்கையில்லை;
திட்டம், பொருளாதாரம், அரசியல் எதுவாகினும் ஒற்றைத் தீர்வையும் நாங்கள் விரும்பவில்லை;
வாழ்க்கை என்பது தெளிந்த நீரோடையுமில்லை ; சீரான பாதையுமில்லை

பக்கம் 70ல்
நான் முன்னேறினால் பின் தொடருங்கள், நான் பின் தங்கினால் என்னை கொல்லுங்கள், நான் இறந்தால் என்னை பழிதீர்த்துக்கொள்ளுங்கள்

எழுத்துப்பிழைகளை தவிர்த்திருக்கலாம். நிறைய இடங்களில் காண முடிந்தது.. சில உதாரணம்:
சேமபர்லின் ( பக்கம் 106 )
இளவரசியின் களை.. ( பக்கம் 90)..அதனை தொடர்ந்து அதே வாக்கியத்தில் இன்னொருவார்த்தை! அர்த்தமே மாற்றிவிடுகிறது!

தன் மாநில மக்களை கொன்றதால் மோடி மோசமானவராக தோன்றினார், யூதர்களைகொன்று குவித்ததால் ஹிட்லர் காட்டேறியாக தோன்றினார் . அதே போல் முசோலினி மீது விழுந்த சர்வாதிகாரி கொடுங்கோலன் மோசமானவன் என்ற ப்ளாக்மார்க் க்கான காரணத்தை அதிகம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.

என்னதான் இருந்துவிட்டு போகட்டும்… இந்த அட்டு குறைகளை தவிர்த்து பார்த்தால்… உலகபோர் பற்றி படிப்பவர்களுக்கு ஹிட்லரும் முசோலினியும் தவிர்க்க முடியாதவர்கள். அத்தகையவர்களை பற்றிய வரலாற்று பதிவுகள் தமிழ்கூறும் நல்லுலகில் மிகமிக சொற்பம். ஏன் நம்முந்தைய தலைமுறையினர்கெல்லாம் முதல்/இரண்டாம் உலகப்போரை பற்றியோ அதன் கதாநாயகர்களை பற்றியோ என்ன தெரியும்? நம் பள்ளி புத்தகம் என்ன சொல்லிகொடுத்தது நமக்கு? இவர்களை பற்றிய அறிமுகம் இன்றி உலகப்போரை விளங்கிக்கொள்வது கஷ்ட்டம்.. மட்டுமல்ல வீண்… இந்த குறையை இந்த புத்தகம் நிவர்த்தி செய்கிறது. பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய மதிப்புள்ள புத்தகம் என்பதில் ஐயமில்லை.

-ஆமினா முஹம்மத்

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-5135-167-2.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


1 Comment

 1. அபு ரிஹாப் says:

  வாசிப்பு பழக்கம் ஓர் அருட்கொடை
  அதிலும் புத்தகத்தை தேர்வு செய்து படிப்பது என்பது
  மிக சிரமமான ஒன்று
  அத்தகைய சிரமங்களை போக்க இத்தகைய மதிப்புரைகள்
  மிக உதவியாய் இருக்கும்

  நன்றி

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: