Home » Classic literature » பட்டினத்தார் ஒரு பார்வை

பட்டினத்தார் ஒரு பார்வை

ஆழ்ந்த கரு நீலத்தில் புத்தகம் மென்மையான அட்டையுடன்,ஓவியர் பூசனின்,கரும்பைப் பற்றிக் கொண்டு இருக்கும் பட்டினத்தாரின் ஆன்மீக அருட்பார்வையுடன் நம்மை படிக்க வரவேற்கிறது.நூலின் ஆசிரியர் திரு பழ.கருப்பையா.திரைப்படத் தயாரிப்பாளர்,சட்டமன்ற உறுப்பினர்.பொது வாழ்வின் பல போராட்டங்களின் மூலம் மக்களுக்கு பிரபலமானவர்.

இந்த புத்தக வாசிப்பு ஒரு சாதாரண கட்டுரை வாசிப்பைப் போல இதன் ஆசிரியர் உருவாக்கவில்லை.ஒரு தேடலை பதிவு செய்வது போல இருக்கிறது.

 
பட்டினத்தார் ஒரு பார்வை, பழ. கருப்பையா, கிழக்கு பதிப்பகம், ரூ 100

பட்டினத்தாரின் வரலாற்று பார்வை

பட்டினத்தாரைப் பற்றிய அரைகுறை அறிவாளிகளுக்கு,அதாவது என்னைப் போன்றவர்களுக்கு,பட்டினத்தார் என்பவர் ஒருவரல்ல மூவர் என்பதுவும்,அதில் 14ஆம் நூற்றாண்டில் காவிரிப் பூம்பட்டினத்தில் சிவ நேசருக்கும் – ஞான கலாம்பைக்கும் இரண்டாவதாகப் பிறந்து,திருவெண்காடர் என்ற இயற்பெயருடன் அழைக்கப்பெற்று தனது இறுதிக் காலத்தை திருவெற்றியூரில் முடித்துக் கொண்ட (மறைந்த !) பட்டினத்தார் பற்றித்தான் திரு பழ.கருப்பையா அவர்களின் பன்முக பார்வையால் பதிவு செய்யப்பட்டுளது .

பட்டினத்தார் என்பவர் சித்தரா, புரட்சியாளரா, சைவமா என்பது போன்ற கேள்விகளுக்கும், அவர் எந்த வகுப்பை சார்ந்தவர், புலால் உண்பவரா போன்ற சாதாரண மன உணர்வு கேள்வி வெளிப்பாடுகளையும் விட்டு வைக்கவில்லை நூலாசிரியர். தனது மேற்கோள்கள் மூலம் பட்டினத்தார் பாடலையே விளக்கி தெளிவுபடுத்துகிறார்.

பட்டினத்தாரைப் பற்றிய சமூகப் பார்வை

பொதுவாகப் பாட்டினத்தர் பற்றிப் பேசுபவர்கள் அனைவரும் அவர் ஒரு பெண்ணை வெறுப்பவராக,பெண் இனத்தை இழிவுபடுத்துவதாகவும்,பெண் ஒரு போகம் மட்டுமே என்றுரைப்பதாக அவரைப் பற்றிய முதிர்ச்சியற்ற புரிதலை தூக்கி எறியச் சொல்கிறார் நூலசிரியர்.அந்தப் புரிதலை நமக்குச் சொல்ல அவர் எடுத்துகொண்ட களம் – வரலாற்றின் ஒரு முக்கிய காலம்
.
“பௌத்தம் மற்றும் சமணத்தை அழித்துச் சைவப் பயிரை தழைக்கச் செய்ய பக்தி இயக்கம் புறப்பட்டது.அவ்வாறு அதில் வெற்றி பெற பல உத்திகள் கையாளப்பட்டன.அதில் ஒன்று தேவதாசிகளை அனுமதிப்பதில் போய் முடிந்தது” (பக் 53)

அது மட்டுமல்ல,

”பரத்தமை ‘பழைய தொழிலே எனினும் பரத்தை பக்தி இயக்கம் ஈன்றெடுத்த மகவான சோழப்பேரரகாலத்தில்தான் ஏறத்தாழ கோயிலோடு இணைக்கப்பட்டு நிறுவனப்படுத்தபடுகிறாள் “

பக்தி இயக்கம் தான் வளரப் பயன்படுத்திய யுக்தியைஅ சாடுகிற நூலாசிரியர்,அந்தக் காலத்தில் பெண் மோகம்,பெண் உடல் வர்ணனை ஒழிக்க ’போக மாதரை ஒழிந்தே’ (214.20) என்பதாகக் கண்டிக்கிற வார்த்தைதானேயொழிய பட்டினத்தார் பெண்ணை வெறுக்கவில்லை என்பதை வலியுறுத்துகிறார்.அதோடு பட்டினதாருக்ககாக ஒரு கை தேர்ந்த வக்கீல் போல வாதாடுகிறார் ஆசிரியர்.

ஆம்.ஓர் இடத்தில் பெண்ணிடமிருந்து இன்பத்தமிழனை மீட்க்கும் வரலாற்று முயற்சி என்கிறார் (பக் 56).

அடுத்த இடத்தில்,பட்டினத்தார் இயற்றிய ’கச்சித்திருவகவல்’ எழுபது வரிகளில் ”ஒவ்வொரு வரியும் ஒரு சவுக்கடி: ஆனால் அந்த சவுக்கடிகள் பெண்ணுக்குக் கொடுப்பட்டவையல்ல.அவள் ஒவ்வொரு உறுப்புக்கும் உவமை கண்டு மயங்கிய ஆணுக்கு கொடுக்கப்பட்டவை“ (பக் 59)

முடிவாகத் தன் வாதம் தோற்றுப் போகக் கூடாது என்பதற்காக ஆசிரியர் வெம்பித் தவித்து “பட்டினத்தார் முற்றிய அறிவுடையோருக்குப் பேசியவர்” (பக் 62 ) என்று அவரைப் பற்றிய தவறான பார்வைக்கு ஓர் ஆழமான கொட்டு வைக்கிறார்.

பட்டினத்தாரைப் பற்றிய மெய்ஞான பார்வை

திருவெண்காடர் (பட்டினத்தார் ) இல்லத்தில் திருவிடை மருதூர் சிவபெருமானே தத்துக் குழந்தையாக ஓர் அந்தணர் மூலம் கொடுக்கப்பட்டு மருதப்பிரான் என்ற பெயரில் வளர்ந்து,ஒரு குறிப்பிட்ட வயதில் திருவெண்காடரின் அவர்கள் இல்லம் விட்டு அகலும்போது,மனைவி சிவகலை மூலம் திருவெண்காடருக்கு,ஒரு பெட்டியில்,காதறுந்த ஊசியை பட்டுத்துணியால் சுற்றி அதில் ’காதறுந்த ஊசியாயினும் உன்னோடு கடசிவரை வருமா ?’ என்று ஒரு கேள்வியும் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றதைப் படித்துவிட்டு முற்றிலும் தனை மறந்து துறவு பூண்டார் என தொடங்குகிறார்.

பட்டினத்தார் துறவு என்ற தலைப்பில் ஆசிரியர் பேசும்போது அவர் அதிக பக்கங்கள் (பக் 32 – 52 ) எடுத்துத் தனது கருத்தைப் பதிவு செய்கிறார்.அதில் முக்கியமாக பட்டினத்தாரின் துறவு பூண்டது தனி நலமா பொது நலமா என்ற ஒரு விவாதத்தையும் முன் வைக்கிறார்.

”ஆற்றில் கிடந்தும் துறையறியாமல் அலைகின்றனயே ” என்ற பாடல் வரிகள் ஒன்று போதும்,அவர் உயிர்கள் அனைத்திலும் வைத்திருக்கும் அன்பைப் பற்றிச் சொல்ல என்கிறார்.
புத்தரின் வாழ்வியல் போதனைகளையும் அவரிடம் மகத நாட்டு அரசன் அசாதசத்துரு கேட்ட கேள்வி மூலம் நமக்கு விளக்குகிறார்.

வலிதாங்க முடியாதபோது,இன்பத் திளைப்பின் பின்பு சலிப்பில் முடிகிற போதெல்லாம் நாம் ஒவ்வொருவரும் தாற்காலிகமாக பட்டினத்தாராக மாறுகிறோம் என்கிறார் ஆசிரியர்.ஆனாலும் தன் வாழ்நாளெல்லாம் அவருக்குப் பின் அவர் வாழ்வை ஒட்டி வாழ்ந்தவர்கள் பிறகு தாயுமானவர்,வள்ளலார்,காந்தி போன்றவர்களே என்கிறார்.அதோடு விடவில்லை ஆசிரியர்,அவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி,ஒஷோ ரஜனிஸ் ஆகியோர் இணையற்ற அறிவாளிகள்,ஆனால் செல்வத்தின் மத்தியில் வாழ்ந்தவர்களாதலால் அவர்கள் அறிவைப் பின்பற்றாமல் உலகம் அவர்களைப் பின்பற்றி சென்றதால் அவர்கள் அறிவு சிறு ஆன்மிக அதிர்வுகளை மட்டும்தான் ஏற்படுத்தி இருக்கிறது சுட்டிக் காட்டுகிறார்.

போகிற போக்கில் தற்போதுள்ள சமூகத்தின் துன்பத்தின் காரணத்தையும் நூலாசிரியர் எடுத்துஅ சொல்ல அவர் தவறவில்லை.கடந்த 20 ஆண்டுகளாக நாடு எக்காலத்தினும் இல்லாத அளவுக்கு பல நூறு மடங்கு நுகர்ச்சி வெறியில் (Consumerism) சிக்கித்தவிக்கிறது அதற்கு தாராளமயமாக்கல் (Liberalization )கொள்கையே அடிப்படை காரணம் என்கிறார்.(பக் 19).

ஆசிரியர் பழ கருப்பையா அவர்கள் பட்டினத்தாருக்கும் தாவோயியத்திற்குமான மிக முக்கியமான ஒற்றுமைகளை ஆய்வு செய்து ’பட்டினத்தாரின் பங்களிப்பு’ (பக் 86) என்ற தலைப்பின் கீழ் முன் வைக்கிறார்,இங்குதான் ஆசிரியரின் ஆளுமை முழுவதுமாக விரிகிறது.

“ எதிரெதிர்க் கூறுகள் ( Relative Opposites) ; இயற்கை எதிரெதிர்க் கூறுகளால் இணைந்து உருவாகி இருக்கிறது.அதன் தன்மை அறிந்து கொள்ள இயலாத மாந்தன் தனக்குப் பிடித்தது என்று கருதியதைப் பிரித்து தனித்து அடைய நினைக்கின்றான்: அது இயற்கைக்கு மாறானது என்பதால் தவறான விளைவுகள் ஏற்படுகின்றன : மாந்தன் துன்பப்டுகின்றான் ”
மேற்கண்ட அவ்வளவு பெரிய தத்துவத்தை

”ஒன்றையொன்று ஒழியாது உற்றனை “ என்று ஒரு வரியில் அடக்கி விடுகிறார் பட்டினத்தார் என்கிறார் ஆசிரியர்.

அதே நூலாசிரியர்,முழுக்கோட்பாடக அறிவியல் அடிப்படையால் அடிப்படையில் வளர்தெடுக்கவில்லை.அவ்வாறு பட்டினத்தார் செய்து இருந்தால் அவரின் மாபெரும் தத்துவம் தாவோயியத்தைவிட விரிவுகளையும் முழுமையையும் அடைந்திருக்கும் என்ற பெருமூச்சுடன் சொல்வதோடு,பட்டினதார்,

முன்னுரை கண்டவர்
முடிவுரை காணவில்லை !
ஆயினும் அவர் கண்ட
முன்னுரையிலேயே
முடிவுரையும் புரிகிறது.
என்று ஆதங்க மனதோடும் முடிக்கிறார்.

ஆனால் என் போன்ற வாசகனால் அதை ஒத்து கொள்ள முடியவில்லை.பட்டினத்தார் போன்ற வாழ்ந்த ஞானிகளுக்கு பிறப்பும் இல்லை,இறப்பும் இல்லை.வேண்டும் போது அவருக்கு திருவிடை மருதூர் சிவபெருமானே குழந்தை வடிவில் வந்து அருளிச் சென்றது போல யாருக்காவாது மீண்டும் நிகழலாம்.காத்து இருப்போம்.

– கிருஷ்ணமூர்த்தி

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-539-4.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: