Home » History » இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்

”எந்த தேசத்தின் இளைஞர்கள் மனதில் கடந்தகாலம் குறித்த பெருமிதமும்,
நிகழ்காலம் குறித்த வேதனையும், வரும்காலம் குறித்த பொற்கனவுகளும்
நிறைந்துள்ளதோ அந்த தேசம்தான் முன்னேற்றமடையும்” என்ற மகான் அரவிந்தரின் கருத்தை செயல்படுத்தும் வண்ணம், நம் தேசத்தின் பெருமைக்குரிய சுதந்திரப் போராட்டத்தையும், வீரர்களின் வாழ்க்கை சரித்ததையும் பல்வேறு ஆதாரங்களுடன் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்ற தலைப்பில் ஒரு நூலாக வடித்து தந்துள்ளார் முனைவர் ப.சரவணன்.

978-93-5135-177-1_bஇந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள், முனைவர் ப.சரவணன், கிழக்கு பதிப்பகம், ரூ 150

கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலில் தென்னகத்தைச் சார்ந்த வ.உ.சி., வாஞ்சிநாதன், கட்டப்பொம்மன், அழகுமுத்துக்கோன், ஒண்டிவீரன், வேலுநாச்சியார், தீரன்சின்னமலை, திப்புசுல்தான், ஹைதர்அலி போன்றவர்களைப் பற்றியும், வடநாட்டைச் சார்ந்த நேதாஜி சுபாஸ்சந்திரபோஸ், ஜான்சிராணி, பகத்சிங் போன்றவர்களின் ஈடு இணையற்ற வீர வாழ்க்கை விவரிக்கப்பட்டுள்ளது.

முன்னுரையில் கிழகிந்தியக் கம்பெனி என்ன நோக்கத்திற்காக, எவ்வாறு உருவானது என்பதை இவ்வாறு விளக்குகிறது. இந்தியாவில் விளையும் மருத்துவக் குணம் வாய்ந்த, விலை உயந்த, அரிதான பொருளான மிளகு, கடல் வாணிபத்தின் மூலமாக உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவந்தது. டச்சு வணிகர்களிக்கும், பிரிட்டிஸ் வணிகர்களுக்கும் ஏற்பட்ட வியாபாரப் போட்டியில் உருவானதுதான் கிழக்கிந்திய கம்பெனி என தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

நாம் காதால் கேட்கும் சுதந்திரப் போராட்டம் குறித்த கதைக்கும், உண்மை வரலாற்றுக்கும் அதிகபட்சமான வித்தியாசங்கள் உள்ளதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. குறிப்பிட்ட ஒருசிலரின் போராட்டத்தால் மட்டுமே சுதந்திரம் கிடைத்துவிடவில்லை. வடக்கிருந்து, தெற்குவரை முகம் தெரியாமலும், பெயர் சொல்லாமலும் எண்ணற்றோர் போராடித்தான் விடுதலை கிடைத்தது என்பதை இந்தநூல் சான்று கூறுகிறது.

பூலித்தேவர் வரலாற்றில் இருக்கிறார். ஆனால், பிரிட்டிஸ் படையினரால் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட அவரது மனைவி கயல்கன்னி என்ற லட்சுமி நாச்சியாரை எத்தனை பேருக்கு தெரியும். அதேபோல் வீரமங்கை வேலுநாச்சியாரை அறிவோம். ஆனால், சிவகங்கை கோட்டைமீது பறந்த பிரிட்டிஸ் கொடியை இறக்குவதற்காக, இந்திய விடுதலைப்போரில் முதல் தற்கொலைப் போராளியான குயிலியை எத்தனைபேர் நினைவில் வைத்துள்ளனர். இதுபோன்றவர்களையும் நினைவுபடுத்துவது இந்தநூலின் சிறப்பம்சமாகும்.

அதுமட்டுமின்றி, ஒரு வீரரைக் குறிப்பிடும்போது அவரது முன்னோர்கள் மட்டுமின்றி, அவரது சந்ததியினரைப் பற்றியும் இந்நூலில் அறிந்து கொள்ள முடிகிறது. சத்ரபதி சிவாஜியின் அமைச்சரவையில் போஸ்வா என்ற பதவி பெற்றிருந்த ஒருவரின் வழித்தோன்றல்தான் மனகர்ணிகா என்ற ஜான்சிராணியாகும்.

ஆஸ்துரையை கொலை செய்து, இங்கிலாந்து நாடாளுமன்றத்தையே நடுங்க வைத்த வாஞ்சிநாதன் ஆஸ்துரை கொலை வழக்கில், அவருக்கு உறுதுணையாக இருந்த 14 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டனர், சிலர் 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டனர். இவர்களின் வீரமும், தியாகமும் மறைந்தே போனதே. வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் அரசில் எந்த உதவியும் கிடைக்காமல், கடைசிவரை கைம்பெண்ணாகவே வாழ்ந்து 1967-ல் மறைந்தார்.

சுதேசிக் கப்பலோட்டிய வ.உ.சிதம்பரத்தின் கொள்ளுப் பேத்தி தனலட்சுமி, பேரன் சங்கரன் ஆகியோர் வசிக்க வீடின்றி மதுரை மூன்றுமாவடி பகுதியில் சாலையோரத்தில் தங்கி இருந்திருக்கின்றனர். சங்கரன் பெயிண்டிங் தொழில் செய்திருக்கிறார். இன்றைக்கும் அரசின் உதவியையே பெரிதும் எதிர்பார்த்து வருகிறார் என்ற செய்தியோடு நூல் முடிவடைகிறது.

தமிழகத்தில் தேச விடுதலைக்காக போராடியவர்கள் குறித்தும், அவர்களுக்கு உதவி செய்தவர்கள் குறித்தும் ஒரு ஆழமான, நடுநிலையான ஆய்வு மேற்கொள்ளலாம். அதுமட்டுமின்றி அவரது சந்ததியினர்களைப் பற்றியும் ஆராய வேண்டும் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது. ஏனெனில் நம் அருகில் வாழும், அன்றாடம் சந்திக்ககூடிய ஒரு நபர், மறக்கப்பட்ட, பெருமைக்குரிய, ஒரு தியாகியின் வாரிசாகக்கூட இருக்கலாம்.

– சு.சண்முகவேல்

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-5135-177-1.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: