Home » Drama » சிங்கமையங்கார் பேரன்

சிங்கமையங்கார் பேரன்

இந்த புத்தகத்தில் இரண்டு நாடகங்கள் ஆசிரியர் சுஜாதா அவர்களால் எழுதப்பட்டு இருக்கிறது.முதல் நாடகமான சிங்கம்யங்கார் பேரன்…தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் நாடகமாகும். இந்த நாடகத்தில் மிக அழுத்தமாக சமுக நோக்கமும், நவரசங்களும் இருக்கிறது. முதல் காட்சியை வர்ணித்த விதமே வெகு இயற்கையாக உள்ளது. நடுத்தர வகுப்பைச் சேர்ந்த ஐயங்கார் வீட்டின்முன் அறையில் பிரதானமாக வடகலை நாமமும் சங்கு சக்கிரமும் சட்டம் போட்டு மாட்டி இருக்க ஓரத்தில் திருப்பதி பெருமாள் போன்ற வைஷ்ணவதனமான சாதனங்கள் இருக்க நும் என்று வர்ணித்த விதத்திலேயே நரசிம்மாச்சாரியின் வைஷ்ணவப் பற்று நமக்குத் தெரிய வருகிறது. பிறகு ராகவனும் சுஷ்மாவும் பேசுவது நகைச்சுவைக்கு ஓர் எடுத்துகாட்டு. அதில் ஓர் இடத்தில் ராகவன் தமிழில் கேள்வி கேட்கவேண்டுமென்றால் “இருக்குது” என்று கேட்ககூடாது. “இருக்குதா” என்று கேட்கவேண்டும். இது நம் கண்முன்னே கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் வட மாநிலத்தவரைக் கொண்டுவந்து நிறுத்தி சிரிக்க வைக்கிறது.


சிங்கமய்யங்கார் பேரன், சுஜாதா, கிழக்கு பதிப்பகம், ரூ 85

நாடகத்தின் மற்றொரு இடத்தில் நரசிம்மாச்சாரி தன மருமகளைப் பார்த்து தன் பழய கால நினைவைக் கொண்டு வந்து பேசுவது ரசிக்கும்படி இருக்கிறது. நாம் படிக்கும்போது நாடகத்தை நேரே பார்ப்பது போன்ற உணர்வை உண்டாக்குகிறது.பிறகு ராகவன் ‘அப்பா இவ்வளவு டீடைல்ஸ் வேண்டாம்’ என்று கூறுவதும் அதற்கு சுஷ்மா ‘எனக்கு சம்ஜ்மே வரலே’ என்பதும் அதற்கு ராகவன் நல்லவேளை என்று கூறுவதும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

நரசிம்மாச்சாரியும் சிங்கும் சந்தித்து உரையாடுவது வெகு அருமை. ஆக மொத்தத்தில் முதல் காட்சி ஆரம்பிக்கும்போதே நாம் வெகுவாக ரசித்து அதன் உள்ளே சென்று விடுகிறோம்.

இரண்டாவது காட்சியில் நரசிம்மாச்சாரியின் ஜாதி வெறியை வெகு அழகாக ஒரே வரியில் கோடி காட்டி இருக்கிறார் ஆசிரியர்.

“ஒரே கம்யுநிட்டி அதுதான் முக்கியம்.”

மூன்றாவது காட்சியில் ராகவன், சுஷ்மாவின் ஏழ்மை நிலையை மிக அழகாக வர்ணித்து, ஒரு புத்தகமான ‘பேபி அண்ட் சைல்ட் கேர் ‘மூலம் இருவரது ஆசைகளையும் துல்லியமாக விளக்கி இருக்கிறார்.

நான்காவது காட்சியில் ராகவன் இரண்டு அப்பாக்களுடன் பேசுவதின் மூலம் இருவரின் மனத்தையும் படம் பிடித்து காட்டி இருக்கிறார் ஆசிரியர்.

கட்சி 5ல் இரு தகப்பனார்களின் வறட்டுப் பிடிவாதத்தையும் மனதிற்குள் தோன்றும் பேரன் மீது ஏற்படும் பற்றை வெளியே காண்பிக்காமலும் பேசுவது வெகு இயற்கையாக இருக்கிறது. படிக்கும்போதே புத்தகத்தை கீழே வைக்கமுடியவில்லை. இதையே ஒரு நாடகமாகப் பார்த்தோமானால் சந்தோஷமாக நிறைந்த மனத்துடன் வீடு திரும்புவோம்.

இரண்டாவது நாடகமான ‘சேகர்’ சுஜாதாவுடைய விஞ்ஞான அறிவுக்கு ஓர் எடுத்துக்காட்டு. 2010ல் வெளியான ‘எந்திரன்’ படதுக்கான ஆரம்ப விதை இந்த நாடக்கதின் கதை என்று அறியும்போதுஅவரின் அற்புத அறிவு நம்மை வியக்க வைக்கிறது.

கதையின் ஆரம்பத்தில் கதாநாயகனை வர்ணித்த விதம் மூலம் அந்த கதாபத்திரத்தை நம் கண்முன் நிறுத்துகிறார் ஆசிரியர்.

கதாநாயகன் ஆத்மா பக்கத்துவீட்டு மாதவராவிடம் பேசுவதில் அவனுக்கு மாவராவிடம் இருக்கும் வெறுப்பை விளக்கி இருக்கிறார். சேகர் சிரிக்கும்போது நித்யாவிடம் ஆத்மா தன் கண்டுபிடிப்பை அவள் ரசிக்கவேண்டும் என்பதற்காக ‘பாத்தீயா எப்படி சிரிக்கிறது பரு’ என்று சொல்வதும், அதற்கு அவள் ‘கொஞ்சம் அதிகப்படியாக சிரிக்கிறது’ என்பதும் நமக்கு அடக்கமுடியாத சிரிப்பைத் தருகிறது.

முதல் காட்சி முடியும்போதே நம்மால் ஆத்மாவின் விஞ்ஞான அறிவையும் நித்யாவின் எதிர்மறையான அறிவையும் அறியமுடிகிறது. இதற்கிடையில் ,மாதவராவின் வருகையும் அவர் பேசும் முறையும் அவருடைய குணாதிசயத்தை நன்றாக விளக்குகிறது.

இரண்டாவது காட்சியில் மாதவராவும் அவர் மனைவியும் ஆத்மாவை வர்ணித்த விதத்திலிருந்து ஆத்மா ஒரு புத்திசாலி என்பதும் ஆனால் மறதி மன்னன் என்பதும் தெரிய வருகிறது. அடுத்த கட்சியிலும் ஆத்மாவும்,நித்யாவும் சேகரை வைத்துக்கொண்டு பேசுவது மிகவும் ரசிக்கும் படியாகவும், சிரிக்கும்படியகவும் இருக்கிறது.

நான் ரசித்த சில இடங்கள்:’ஏன்தான் இவனை சிருஷ்டி பண்ணினேனோ’ என்று ஆத்மா அலுத்துகொள்ளும் இடம். ஆத்மாவின் குரலில் சேகர் பேசுவது. இருவரும் கடைசியில் பால்கனியிலிருந்து சேகரைப் பார்த்து அலற, நாம் நம்மை அறியாமல் கண்ணை துடைத்து கொள்கிறோம்.

அனைவரும் இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் அந்த அமரருக்கு நாம் நம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிப்போம்.

– வள்ளி சுப்ரமணியன்

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-678-0.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: