Home » Health » டயட் சமையல்

டயட் சமையல்

சாம்பார் முதல் சில்லி சிக்கன் வரை, ஒரு ஸ்பூன் எண்ணெய்யில் அட்டகாசமான ஆரோக்கிமான டயட் சமையல் செய்வது எப்படி என்றும், அவற்றை எப்படி சமைக்கலாம், ருசிக்கலாம், அதே நேரம் ஆரோக்கியம் மாறாமல் அது என்றென்றும் இருக்க என்ன செய்யலாம் என்பதை ருசிமாறாமல் சொல்லித்தருகிறது நலம் வெளியீடான ‘டயட் சமையல்‘ புத்தகம்.

டயட் சமையல், ஜி.கோமளா, நலம் வெளியீடு, ரூ 175

குறைந்த அளவு எண்ணெய்யில் ஆரோக்கியமான டயட் உணவை எப்படிச் சமைப்பது? எப்படிச் சமைத்தால் உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் அப்படியே முழுமையாக கிடைக்கும்? எந்தெந்த உணவுப் பொருட்களில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன? அதிக உடல் எடையைக் குறைத்து உயரத்துக்கு ஏற்ற சரியான எடையில் ஆரோக்கியமாக எவ்வாறு வாழ்வது? இவை போன்ற அடிப்படை ஆரோக்கியம் குறித்தும் அதற்காக டயட் சமையலை மேற்கொண்ட தன்னுடைய வாழ்வியல் அனுபவத்தையும் முன்வைத்தும் உணவு வகைகளை செயல்முறைகளோடு விளக்கியிருக்கிறார் (பத்திரிகையாளர்) ஜி.கோமளா.

உலகம் முழுக்க மக்கள் அனைவருக்கும் கவலை தரும் ஒரே விஷயம் ‘ ஒபிசிட்டி‘ என்ற உடல் பருமன்தான். உடல் எடையைக்குறைக்க என்ன சாப்பிடலாம், எப்படிச் சாப்பிடலாம், எவ்வளவு சாப்பிடலாம் என்ற புரிதலும், உடற்பயிற்சி பற்றிய தெளிவும், உடல் மீதான அக்கறையும் இல்லாமல் இருப்பதே அனைத்திற்கும் காரணமாக அமைகிறது. இவ்வாறான உடல் பருமன் சந்தேகமில்லாமல் பல நோய்களுக்கான நுழைவாயிலாக அமைந்துவிடுவது துரதிஷ்டம். உடல் எடையைக் குறைக்க கடைபிடிக்கும் ‘பத்தியச் சாப்பாட்டை‘ ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ளவும், ரசித்து சாப்பிடக்கூடியதாகவும், சுவையோடு ருசியானதாகவும் இருக்கக்கூடிய சூட்சுமத்தையும் தெளிவாக விளக்குகிறது புத்தகம்.

‘உடல் எடை அதிகரிக்க அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதுதான் முக்கியக்காரணம் என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். ஆனால் முறையற்ற உணவுப் பழக்கத்தால்தான் உடல் எடை அதிகரிக்கிறது, மேலும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதற்கு நாம் முக்கியத்துவம் தருவதே இல்லை‘ என்று சொல்லி இருப்பது அடிக்கோடிட்டு கவனிக்க வேண்டிய ஒன்று. இதற்கு முழு ஆராக்கியத்தோடு இருக்க பகல் நேரப்பொழுதை இரண்டு இரண்டு மணிநேரமாகப் பிரித்து அதற்கேற்ற உணவு அட்டவணையைத் தந்திருப்பது மிகவும் அருமை. அதனை கடைப்பிடித்தால் சந்தேகமில்லாமல் ஒல்லிக்குச்சி உடம்பை நிச்சமாய் பெறலாம்.

சாப்பிடுவது என்பது ஒரு கலை. ஆனால் அதை யாரும் அப்படி கருதுவதில்லை. சாப்பிடுவது என்ற பெயரில் அவசர அவசரமாக அள்ளித் திணித்துக் கொள்கிறோம். ஒரு படம் வரைவதுபோல், ஒரு கவிதை எழுதுவதுபோல் சாப்பிடுவதையும் ரசனையோடு சாப்பிட்டால் உணவுக்குத் தனி சுவைசேர்க்கும் என்கிறார். கூடவே எப்படி சாப்பிடவேண்டும் என்று சொல்லியும் தருகிறார்.

முதலில் காய்களையும், பின் சாலடையும், பின் பொறியலையும் சாப்பிடவேண்டும். பிறகு சாதத்தற்கு வரவேண்டும், அதில் சாம்பார் அல்லது கூட்டு, அதிலும் காய்கறிகளை சாப்பிட்டுவிட்டு பின் பருப்பு, சாம்பார் கலந்து சாப்பிடவேண்டும். உட்கொள்ளும் உணவில் சேர்க்க வேண்டியவை- சிவப்பு அரிசி, சிவப்பு அவல், முழு கோதுமையில் தயாரித்த மாவு, ரவை, கோதுமை பிரெட் ஆகியவற்றையும், தவிரிக்க வேண்டியவைகளில் எண்ணெயில் வறுக்கப்பட்ட பொருட்கள், இனிப்பு வகைகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், மைதா வகைகள், குறிப்பாக ஜங்க் புட்களும் அடங்குகிறது.

சுருங்கி விரியும் (எலாஸ்டிக் ) தன்மையுள்ள நமது தோல், உடல் பருமனாக இருக்கும்போது விரிவடைந்து, இளைக்க ஆரம்பித்தவுடன் சுருங்கத் தொடங்கும். இதைத் தவிர்க்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி நிறைய நிறைய ஹெல்தி டிப்ஸ்களை எடுத்துக் கூறி விளக்கியிருக்கிறார்.

சமையல் குறிப்புகளாய் சாம்பார், குழும்பு, கூட்டு, ரசம், பொரியல், டிபன், சைடு டிஷ், முட்டை, சிக்கன், மீன், ஜூஸ் வகைகளையும் டயட் முறையில் (ஆம், நான்வெஜ் உட்படி) செய்ய சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உடல்தான் முதல் சொத்து. அதை அவரவரே பாதுகாக்க வேண்டும். அதற்கு இந்த டயட் சமையல் நல்ல ‘டிஷ்‘தான். நமக்கு நன்கு பழக்கப்பட்ட உணவு வகைகள்தான். ஆனால் அவற்றை சுலபமான செயல்முறைகளின் வாயிலாக பரிமாறய வகையில் அவை வித்தியாசமாகவும், புதுமையாகவும், ஆரோக்கியமானதாகவும் ‘டயட் சமையல்‘லாக மாறி நிற்பதுதான் விசித்திரம். படித்து ருசிக்க மட்டுமல்ல, சமைத்து ருசிக்கவும் பல ஆலோசனைகளையும், உணவுப் பொருட்களிலுள்ள சத்துக்களின் அட்டவணையையும் தந்திருப்பதும் நிச்சயம் பலருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.

இந்த ‘டயட் சமையலை‘ படிப்பதோடு நிறுத்தாமல் பரிசோதிக்கலாம், பரிந்துறைக்கலாம், பரிமாறலாம், பசியாறலாம்.

– ஸ்ரீநிவாஸ் பிரபு

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-162-4.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: