Home » History » சேகுவேரா புரட்சியாளர் ஆனது எப்படி

சேகுவேரா புரட்சியாளர் ஆனது எப்படி

புரட்சியாளனாக யாரும் பிறப்பதில்லை, அவனை யாரும் உருவாக்குவதில்லை, அவனாகவே ஒரு சமூகத்திலிருந்து உருவாகிறான் . அப்படி உருவாகுபவர்கள் எதையும் கைம்மாறாக எதிர்பாராமல், தன் வாழ்க்கையே பொது நலனுக்காகத் தியாகம் செய்கிறார்கள். அப்படி புரட்சியாளனாய் தன்னை உருவாகி கொண்டவர்களில் முக்கியமானவர் சே குவேரா. இந்தப் புத்தகத்தின் தலைப்பே நம்மை கவர்ந்து இழுக்கிறது. முதலில் ஆசிரியர் திரு. மருதன் அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.

இப்புத்தகம், சே அவர்களின் ஆரம்பல கால வாழ்கையை பற்றிய ஆராய்ச்சியின் விளைவாகவே வந்திருக்கிறது என நினைக்கிறன். ஆசிரியரே அறிமுக அத்தியாயத்தில் கூறியிருப்பது போல ஒன்றிரண்டு இடங்களை தவிர சே வை “எர்னஸ்டோ” என்ற பெயரிலியே குறிப்பிடுகிறார். இது வாசகர்களுக்கு சே வின் வாழ்கையை படிப்பது போல அல்லாமல், வாழ்வின் குறிகோளை தேடி அலையும் ஒருவனின் வாழ்கையை படிக்கின்ற ஒரு உணர்வை தருகிறது.


சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி?, மருதன், கிழக்கு பதிப்பகம், ரூ 130

இப்புத்தகம், சே அவர்கள் ஒரு மருத்துவராகத் தன் வாழ்கையைத் தொடங்கியதிலிருந்து ஆரம்பித்து ஒரு போராளியாக மாறத் தயாரானது வரை நீள்கிறது. அவரது பயணம் ஆரம்பத்தில் ஒரு விளையாட்டு, ஒரு சாகச பயணம் என்பது போலவே அவரே எண்ணி ஆரம்பித்திருக்கிறார். ஆனால் இந்த பயணமே அவரை ஓர் லட்சியத்தை நோக்கி தள்ளியிருக்கிறது. அவர் தன் 24 வது பிறந்தநாளில் சான் பாப்லோவில் இருந்தபொழுது எண்ணியதாக ஆசிரியர் இவ்வாறு கூறியிருக்கிறார், “வாழ்வின் கால் நூற்றாண்டின் சிகரம். இதுவரை செய்திருப்பது என்ன ? இனி செய்யவிருப்பது என்ன ?” இது போன்ற பல கேள்விகள், இந்தப் பயணத்தில்தான் அவருக்கு உதித்திருக்க வேண்டும். இக்கேள்விகள்தான் அவரை செதுக்கிருக்க வேண்டும்.

இப்புத்தகத்தில் உள்ள ‘ காஸ்ட்ரோ ‘, ‘ ஆல்பர்டோ ‘, ‘ எர்னஸ்டோ சீனியர் ‘ ஆகியோரின் மேற்கோள்கள் சேவின் அன்றைய எண்ண ஓட்டத்தையும், ‘ஜான் லீ ஆண்டர்சன்’ அவர்களின் வார்த்தைகள் அவற்றில் உள்ள பல நுட்பமான விஷயங்களையும் தெளிவுப்படுத்துகிறது. சே அவர்களின் வார்த்தைகள் அப்படியே மேற்கோள்குறிக்குள் வைத்திருப்பது ஆரம்பத்தில், தெளிவு பெற இன்னொரு முறை படிக்கச் வைக்கிறது, ஆனால் பக்கங்கள் போக போக அது பெரிதாக உறுத்தவில்லை.

சே அவர்கள் தன் பயணத்தில் சென்ற அனைத்து நகரங்களையும் ஆசிரியர் நன்றாக விவரித்து இருக்கிறார். மேலும் அதனின் சரித்திர சிறப்புகளையும் மற்ற தேவையான விவரங்களையும் அளித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது, அந்நாளில் சிலியில் இருந்த அரசியல் நிலையையும், சூச்சிகாமாட்டா சுரங்கத்தின் நிலையையும் பற்றி விரிவாக பேசியிருக்கிறார். மேலும் இலத்தீன் அமெரிக்க பழங்குடிகளான செவ்விந்தியர்களை பற்றியும் அங்குள்ள இன்கா நாகரீகம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

சே மருத்துவம் பயின்றவர். அவர் நண்பரான ஆல்பர்டோவும் மருத்துவம் பயின்றவர்தான். இப்பயணத்தை அவரும் ஆல்பர்ட்டோவும் தொழுநோயாளிகளின் சிகிச்சை முறையினை அறிந்துகொள்ளவும் பயன்படுத்திகொண்டனர். அங்கிருந்த தொழுநோய் நோயாளிகளிடம் எங்களுக்கு இருந்த நெருக்கம் அதிகம் இல்லாவிட்டாலும் அவர்கள் எங்களை மறக்கவில்லை என ஆல்பர்ட்டோ பின்நாளில் கூறியிருப்பது இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற பல சம்பவங்கள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

சே அவர்களின் இன்னொரு முகமும் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அவர் இந்த பயணத்தில் தங்குவதற்கு மற்றும் பல காரணங்களுக்காக நிறைய பொய் பேசியிருக்கிறார் என்பதை ஆசிரியர் இதில் வெளிபடுத்தியிருக்கிறார், இதை தவிர்த்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். ஏனெனில், அவரை முன்மாதிரியாய் கொண்டிருக்கும் இளைஞர்களிடம் இது கொஞ்சம் அதிகம் போய்ச் சேருமோ என்ற அச்சம்தான் அதற்கு காரணம்.

இப்புத்தகம் சே குவேராவின் படைப்புக்களைப் பற்றி ‘பதிவுகள்’ என்னும் அத்தியாயத்தில் பேசியிருக்கிறது. மேலும் ‘பயணம் ஆரம்பம்’ என்னும் அத்தியாயத்தில், சே குவேரா மக்களைக் கொண்டு நடத்திய புரட்சிகளைப் பற்றி சுருக்கமாகப் பேசுகிறது. அவரின் சோசியலிச கொள்கைகளைப் பற்றி ஓர் அத்தியாயமும் இருக்கிறது.
மொத்தத்தில் ‘சே’வைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு நல்ல படைப்பு.

– மா. ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-788-6.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: