Home » Short story » இரண்டாவது முகம்

இரண்டாவது முகம்

இலக்கியம் என்பது காலம் காட்டும் கண்ணாடி என்பார்கள். இலக்கியம் காலத்தைக் கடந்து நிற்கும் ஓவியமும் கூட. “இரண்டாவது முகம்” நீல.பத்மநாபனால் எழுபதுகளில் எழுதப்பட்ட 21 சிறுகதைகளின் தொகுப்பு. அது இன்னமும் வாசகனை வசீகரிகிறது என்றால் அது இலக்கியமில்லாமல் வேறென்ன?


இரண்டாவது முகம், நீல. பத்மநாபன், கிழக்கு பதிப்பகம், ரூ 105

சாகித்ய அகாடெமி பரிசு, அண்ணாமலை செட்டியார் பரிசு எனப் பல விருதுகள் பெற்ற நீல.பத்மநாபனின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு “இரண்டாவது முகம்”. இவர் படைத்துள்ள சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுதிகள் என பல தரப்பட்ட இலக்கியப் படைப்புகள் எராளம். இவை பன்னாட்டு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.. உலக மாந்தர்கள் அனைவரது உள்ள இயல்பும் ஒன்றுதானே! அதைப் படம் பிடித்துக் காட்டுவதில் இவர் வல்லவர்.

காரியாலய நிகழ்வுகள், மனிதனின் உடல் உபாதைகள், பெண்ணின் வேதனைகள், மனிதனின் உயர் பண்புகள் யாவற்றையும் இவரது படைப்புகள் பிரதிபலிக்கின்றன.

“புது மனை புகு விழா”வில் மேலதிகாரியின் நையாண்டிப் பேச்சில் தெரியும் பொறாமையும், “இடமாற்றத்தில்”அரசியல் செல்வாக்கு செய்யும் அநியாயமும் தெளிவாகக் காட்டப்படுகின்றன. “கசு அண்டி”யில் முந்திரிப் பருப்புத் தொழிற்சாலையில் தொழிலாளிகள் எவ்வாறு வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று தெரிகிறது.

“தனக்குத் தானே மானசிகமாய்” கதையில், மகனை இழந்த தந்தை மகனின் இறுதிச் சடங்கிற்கு வந்தவர்களிடம் கூடத் தன துயரத்தை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. “ஒரே ஒரு உதவியில்” தனக்குத் துரோகம் செய்த மனைவிக்குக் கூட ஆபத்து நேரிடக் கூடாது என நினைக்கும் பண்பாளன். தான் மணம் செய்து கொள்ளா முடியாத பெண்ணின் நினைவில் வாழ்ந்து, அவள் இறந்த அன்றே உயிர்விட்ட ‘லட்சுமி நாராயணன் போற்றி’யின் ஆன்மிக பலம் “நைவேத்தியத்தில்” வெளிப்படுகிறது. “மனிதனும் தெய்வமாகலாம் என்று நமக்கு அறிவுறுத்துகிறார் ஆசிரியர்.

“இரண்டாவது முகம்”, “மௌன விரதம்” இரண்டிலும் வேதனைப்படும் இரண்டு பெண்களின் மனநிலை வர்ணிக்கபடுகின்றன. கதாநாயகர்கள் படும் உடல் உபாதைகளைப் படிக்கும் வாசகனையும் அனுபவிக்கச் செய்பவை “மூலாதாரமும்”, “பசி”யும்.

‘ஊமையன் இறந்து விட்டான்’ என்று சொல்லி அவனது இறுதி சடங்கிற்கு பணம் பெற்றுச் செல்கிறான் அவனது மருமகன். உண்மையில் அவன் சாகவில்லை. இரண்டாவது முறையும் அதே காரணத்தைக் கூறிக் கொண்டு அவன் மருமகன் வரும்போது நாராயணன் பணம் கொடுக்க மறுத்து விடுவான். ஊமையன் உட்கர்ந்திருக்கும் இடம் சூன்யமாக இருப்பதைப் பார்த்து, ‘அவன் இறுதிச் சடங்கிற்கு ஏதாவது கொடுத்திருக்கலாமே’ என்று பச்சாதாபப்படுகின்றான். அவன் வீடு திரும்பும் போது வீட்டு வாயிற்படியில் உட்கார்ந்து அவனை வரவேற்கிறான் ஊமையன்.

இருபத்தொரு கதைகளில் திருப்பமுள்ளவை ஒரிரண்டு மட்டுமே. அவற்றில் ஒன்று “ஊமையன் துயரம்”. ஆனால் நல்ல கதைக்குத் திருப்பம் என்பது கட்டாயமில்லை என்பது நீல. பத்மநாபன் கதைகளைப் படிக்கும்போது தெரிகிறது. இவரது படைப்புகள் அனைத்தும் யதார்த்தமான மனிதர்களையே படம் பிடித்துக் காட்டுகின்றன.

கேரளத்தை ஒட்டிய தமிழ் மக்களின் வாழ்க்கை முறை தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து சற்று வேறுபட்டுள்ளது. இவர் கதைகளில் வரும் “முற்றம்” தமிழ்நாட்டின் முற்றங்களிலிருந்து வேறுபட்டவை. மீனை “மச்சம்” என்கிறார். “கசு அண்டி” என்றால் முந்திரிப் பருப்புத் தொழிற்சாலை என்று தெரிந்து கொள்கின்றோம். இவரது மொழியின் நடையும் சற்று வித்தியாசமானது. இவரது நடையில், இவர் வசிக்கும் கேரள மண்ணின் மணம் விசுகிறது.

இயற்கை அழகை பத்மநாபன் வர்ணிக்கும்போது, நாம் அதை நேரில் காணும் அனுபவிக்கும் இன்பத்தைப் பெறுகிறோம்.

உளவியல் ரீதியில், அங்கதச் சுவையுடன், மலையாள வாடை வீசும் நீல.பத்மநாபனின் எழுத்தோவியம் பலமுறை படித்துச் சுவைக்கத் தக்கது.

– விஜயஸ்ரீ சிந்தாமணி

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-527-1.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: