Home » History » இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்

1857-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகம்தான் முதல் இந்தியப் சுதந்திரப் போர் என பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களில் தெரிந்தோம். வளர்ந்து விவரம் தெரிந்த பிறகு 1806 ல் நடைபெற்ற வேலூர்ப் புரட்சிதான் முதல் போராட்டம் என்றும் அறியமுடிந்தது. ஆனால் இந்திய விடுதலைக்கான போராட்டம் என்பது 1763 லேயே தொடங்கியுள்ளது என்பதும், அதுவும் தமிழகத்தில் 1790 களில் பாளையக்காரர்கள் தொடங்கி பிறகு பலரும் பங்கேற்று 1801 திண்டுக்கல் உட்பட பல பகுதிகளிலும் தொடர்ந்துள்ளது என்பதை முனைவர் ப.சரவணன் அவர்கள் எழுதியுள்ள இந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் நூலின் மூலம்தான் அறியமுடிந்தது. வட மாநிலங்களில் பல்வேறு பழங்குடியின சமூகமே இந்திய விடுதலைப் போராட்டத்துக்கான பாதையைப் போட்டுள்ளன. 1824ல் இந்திய விடுதலைக்காக தொடங்கிய ஜாட் சமூகத்தினர் மற்றும் சந்தால் பழங்குடியினர் போராட்டம் இன்றும் வேறு வகையில் தொடர்வதை நாம் அறியமுடியும்.

978-93-5135-177-1_bஇந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள், முனைவர் ப சரவணன், கிழக்கு பதிப்பகம், ரூ. 150

1763 ல் சிறு சிறு தீயாய் தொடங்கிய விடுதலைக்கான போராட்டம் 1857 மே 10 அன்று நடைபெற்ற சிப்பாய்க் கலகம் என்ற எரிமலையாய் வெடிக்கத்தொடங்கியுள்ளது. இந்த எரிமலைக் குழம்புகள் இந்தியா முழுவதும் நெருப்பு ஆறாக ஓடத் தொடங்கியுள்ளது. இந்த நெருப்பாற்றில் விடுதலைக்காக நீந்தியவர்களின் வரலாறுதான் இந்த நூல்.

நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் நிறைந்துள்ள செய்தி மற்றும் சம்பவங்கள் அனைத்தும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவை. தனித்தனியான போராட்டங்கள் அனைத்தும் ஒட்டுமொத்த போராட்டத்தையும் ஒரே பாதையில் அழைத்துச் சென்று காட்டுகின்றன. இதில் பலவற்றை இன்றைய சூழலுடன் இணைத்து பார்க்கும்போது மிகுந்த வியப்பு மேலிடுகின்றது.

  • இந்தியாவின் விடுதலைக்கான போராட்டத்தினை 1857 ல் இந்து இசுலாமியர்கள் இணைந்து தொடங்கியுள்ளனர். ஆனால் 1947 இசுலாமியர்களுக்கென தனியாக பாகிஸ்தான் உருவானதுடன் இந்திய விடுதலை போராட்டம் முடிகின்றது.

  • பக்கிம் சந்திரசட்டர்ஜி, அரவிந்தர், பாரதி போன்றோர் நேரடி போராட்டத்தில் பங்காற்றவிலையென்றாலும், போராடுபவர்களின் உணர்வினை தூண்டியெழுப்பும் பணியினை செய்துள்ளனர்.

  • ‘‘வந்தே மாதரம்’’ என்கிற ஒற்றை முழக்கத்துடன் பங்கேற்ற திலகரின் வருகைக்குப் பின்பு போராட்டம் வேறு பரிணாமம் பெறுகின்றது.

  • சித்பவன் பார்ப்பனர் சாவர்கர் 1897ல் இரு ரகசிய இயக்கம் தொடங்குகிறார். இதன் தொடர்ச்சிதான் இன்றைய ஆர்.எஸ்.எஸ்.

  • தமிழகத்தில் எட்டையபுரம் அரண்மனையின் தமிழ்ப்பற்று, கல்விப் பணி, இலவச உணவு போன்றவைகளுடனான செயல்பாடு முக்கியமானது. கட்டபொம்முவுடன் ஏற்பட்ட குடும்பச் சிக்கல் காரணமாக அரண்மனையின் வரலாறே மாறியுள்ளது.

  • பாண்டிய நாட்டின் 32 பிரிவுகள் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு, அவை 6 மண்டலங்களாகத் (சத்தியமங்கலம், திண்டுக்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர்) தொகுக்கப்பட்டுள்ளது.

  • கட்டபொம்முவின் தாத்தா பொல்லாப்பாண்டியன் கட்டவேண்டிய மீதி கப்பத் தொகைக்காக அவரது இரு மகன்களை பணையக் கைதியாக பிடித்து வைத்திருந்து வசூலித்துள்ளனர் பிரிட்டிஷார்.

நெருப்பாற்றில் நீந்தி சுதந்திரப்போராட்ட நெருப்புக் கனலை அணையாமல் வளர்த்தெடுத்து, அதில் தன்னுயிரை அர்ப்பணித்தவர்கள்..

அழகு முத்துகோன் எட்டையபுரத்தை காப்பாற்ற நடத்தியபோரில் 1757 ல் பிரிட்டாஷாரால் சிறைபிடிக்கப்பட்டவர். துப்பாக்கியால் சுட்டும், தூக்கிட்டும் மரணதண்டனை அளிப்பதை பார்த்துள்ளோம். கேட்டுள்ளோம். இவரைப்போன்று வேறு எவரும் போராடக்கூடாது என்பதற்கான அச்சத்தை உருவாக்க, அழகுமுத்துகோன் உள்ளிட்ட 7 பேரையும் ஏழு பீரங்கியால் சுட்டு வெடித்துக்கொன்றனர் பிரிட்டாஷார்.

சூரப்புலி ஒண்டிவீரன் பூலித்தேவனின் மறைவிற்குப் பிறகு படைத் தலைவராகிறார் ஒற்றரராய் பணியாற்றிய அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவர். தங்கள் படைமுகாமில் உள்ள பட்டத்து குதிரை, வாளை எடுத்துச் சென்றால்.. நெற்கட்டுச் செவலை திரும்ப ஒப்படைத்துவிடுவதாக பிரிட்டாஷார் சவால் விடுகின்றனர். தனியொரு ஆளாக மாறுவேடத்தில் படைமுகாமில் நுழைந்து, சில நாள் தங்கியிருந்து, வாளைக் கைபற்றி, தனது ஒரு கையை தானே வெட்டிக்கொண்டு தப்பித்தார். பிறகு குதிரையையும் கைப்பற்றி 1771&இல் வெற்றி பெற்றுள்ளார்.

முரட்டு சிங்கம் ஹைதர் அலி அனைவருடனும் சமாதானம் என்கிற சூஃபி மரபில் வந்தவர். மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜரிடம் 21 வயதில் குதிரைப் படைபிரிவில் சேருகிறார். முரட்டுச் சிங்கமாக போரிட்டு பல்வேறு பகுதிகளை கைபற்றி பிரிட்டிஷாரை புறமுதுகிட்டு ஓடச் செய்து மைசூர் மன்னராகிறார். 60 வயதில் முதுகுத் தண்டு புற்றுநோயால் மரணமடைகிறார்.

வீரமங்கை வேலுநாச்சியார் 7 மொழிகள், போர்பயிற்சி உட்பட பல்வேறு கலைத் திறமைகளை 16 வயதிலேயே பெற்று, ஆண் அரசர்களுக்கு கூட இல்லாத மதி நுட்பத்துடன் போரிட்டு பிரிட்டாஷாரை பழிவாங்குகின்றார். இவரின் வெற்றிக்கு குயிலி பெருந்துணையாற்றுகின்றார். இவர் அரசாதிகாரத்திற்கு வந்தபிறகு உடனிருந்த பலர் பிரிட்டாஷாருடன் சேர்ந்து இவருக்கு எதிராகச் செயல்படுகின்றனர். இதனால் மனம் வெறுத்து துறவு வாழ்க்கை மேற்கொண்டு 66 வயதில் மரணமடைகிறார்.

தீரன் சின்னமலை தீவிர நெஞ்சுரத்துடன் பிரிட்டாஷாரை எதிர்த்துப் போரிடுகின்றார். இறுதியில் சமையல்காரனால் காட்டிக்கொடுக்கப்பட்டு கைதாகின்றார். தங்களுக்கு கட்டுபட்டு வரி வசூலித்து கொடுத்தால் கொங்குநாட்டின் பொறுப்பினை தருவதாக பிரிட்டாஷார் சமாதானம் பேசுகின்றனர். விடுதலை ஒன்றையே லட்சியமாகக் கொண்ட இவர் இதற்கு உடன்பட மறுக்கின்றார். 1805 சூலை 31 ல் தூக்கில் இடப்பட்டார்.

வீரத்தின் விளைநிலமாக கட்டபொம்மன் பிரிட்டாஷாருக்கு விளங்கினார். எல்லைப் பகுதியைக் குறைக்கப்பட்டதைக் கண்டு கோபம் அடைந்த கட்டபொம்மன் பிரிட்டாஷாரை எதிரித்துப் போரிடுகின்றான். வெள்ளையத் தேவன், ஊமைத்துரை மற்றும் மருது சகோதரர்கள் துணையாக உள்ளனர். இறுதியாக கட்டபொம்மனை சதி செய்து பிடித்து தூக்கிலிட்டு கொலை செய்த பிரிட்டாஷார், பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தை பிரித்து எட்டையபுரம், மணியாச்சி பகுதிகளில் சேர்த்து, கட்டபொம்மன் மீதான கோபத்தில் பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரே கெஜட்டில் இல்லாமல் செய்தனர்.

போர்ப்புலி திப்பு சுல்தான். பிரிட்டாஷாருக்கு முரட்டுச் சிங்கமாய் இருந்த ஹைதர் அலியின் மகன். போர்ப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு கலைத் திறமைகளைப் பெற்று 15 வயதில் பிரிட்டாஷைரை எதிர்த்து போரிடத் தொடங்கினான். பிரிட்டாஷாரை எதிர்ப்பதில் அறிவியல் தொழில் நுட்பங்களை முதன் முதலில் பயன்படுதியுள்ளார். அப்போது இவரே கண்டுபிடித்த ராக்கெட்களை எடுத்துச் சென்ற பிரிட்டாஷார் 1800களில் அமெரிக்காவிற்கு எதிரான போரில் பயன்படுத்தியுள்ளனர். மேலும் இவரின் கண்டுபிடிப்பே ஏவுகணை வரலாற்றின் மைல் கல்லாகவும் உள்ளது. நவீன அறிவியில் தொழில் நுட்பங்களுடன் பிரிட்டாஷாரை எதிரித்துப் போர் புரிந்ததுடன் அல்லாமல் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான மூட நம்பிக்கைகளை ஒழித்துள்ளார். நில சீர்திருத்தம் செய்துள்ளார். அனைவரையும் சமமாக நடத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக 1911 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணைகட்ட முயற்சித்தபோது, 1798 ல் திப்புசுல்தான் அணைகட்ட நாட்டப்பட்ட கல்வெட்டைக் கண்டுபிடித்தனர். அக்கல்வெட்டில் ‘‘இந்நீர் பயன்படுத்தபடும் விவசாயத்திற்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும்’’ என்று ஆணையிட்டிருந்துள்ளார்.

வீரம் மணக்கும் இரும்புப் பூ ஜான்சி ராணி பிரிட்டாஷாரின் எதிர்ப்பினை மட்டுமல்லாமல், உள்நாட்டு எதிரிகளையும் எதிர்கொண்டு வாழ்வின் இறுதிநாள் வரை போராடியுள்ளார். கடைசிப் போரில் ஆண் போன்று வேடமணிந்து போரிட்டு வீரமரணமடைந்துள்ளார்.

வாஞ்சிநாதன் தென்னிந்தியாவில் பிரிட்டாஷாரின் முதல் உயிரைப் பலிவாங்கியவர்.

பகத்சிங் புரட்சிப் போராட்டத்தின் வெற்றிக்காக தன்னுயிரை புன்னகையுடன் அர்ப்பணித்த மாவீரன்.

சுபாஷ் சந்திரபோஸ்.சி.எஸ் படிக்க அயல்நாடு சென்றவர்.. .என்.ஏ அமைக்கின்றார் வெளிநாடுகளில்.. இந்திய விடுதலைக்காக.

..சி கடல், கப்பல், வாணிகம் தொடங்கி ஆங்கிலேயர்களின் பொருளாதார ஆணவத்தை அடக்கியவர்.

உடல், பொருள், உடைமை உள்ளிட்ட அனைத்தையும் இந்திய விடுதலைக்காக அர்ப்பணித்தவர்களின் போராட்டம் செறிந்த வீர வரலாறான இந்த நூலின் மூலம் இந்திய வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களில்… இடம் பெறவேண்டிய நூல்.

– முருகப்பன்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: