Home » History » வில்லாதி வில்லன்

வில்லாதி வில்லன்

நாட்டை உலுக்கிய பயங்கர கொடுங்கோல் / சர்வாதிகார நபர்களை பற்றிய ஒரு புத்தகம் இது. மொத்தம் 24  நபர்களைப் பற்றி, அவர்களின் கொடூர மனத்தைப் பற்றி, அவர்களால் மக்கள் அடைந்த கஷ்டங்களைப் பற்றி சுருக்கமாக தொகுத்துள்ளார் எழுத்தாளர் பாலா ஜெயராமன்.

வில்லாதி வில்லன், பாலா ஜெயராமன், கிழக்கு பதிப்பகம், ரூ 175

 நூலின் முதல் பக்கத்தில் உள்ள படத்தைrப் பார்த்ததும் தானாகவே நமது முதுகுத்தண்டு சில்லிடுகிறது. இந்தப் பிரமிப்பை நூலின் கடைசிப் பக்கம் வரை சரியாக கொண்டுசென்றுள்ளார் எழுத்தாளர்.

இதில் பத்தாவது ஆளாகச் சொல்லபட்ட நபர் ஹிடோக்கிடோஜோ. அமேரிக்கா ஜப்பான் மேல் அணுகுண்டு போட்டதை நாம் அறிவோம். ஏன் அவ்வளவு பெரிய அழிவுச் செயலுக்கு அமேரிக்கா தள்ளபட்டது என்பது இவரைப் பற்றிப் படிக்கும் போதுதான் தெரிகிறது. அமெரிக்காவின் “பியர்ல் ஹார்பரை” தாக்க எந்த முன்னறிவிப்பும் இன்றிப் படைகளை அனுப்பி அமெரிக்காவின் கோபத்துக்கு ஜப்பான் ஆளாகக் காரணம் இவர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாகத்தான் அமேரிக்கா இரண்டு அணுகுண்டுகளை ஜப்பான் மேல் வீசியது.

நமக்கு அதிகம் தெரிந்த வைர வியாபார பெயர் “டீ பியர்ஸ்”. உலகில் உள்ள பெரும் பணக்காரர்களால் பெரிதும் விரும்பி வாங்கப்படும் வைரம் இது. ஆனால் இதை உருவாக்க ஒருவர் எவ்வளவு உயிர்களைக் காவு கொடுத்தார், எத்தனை கிராமங்களை அழித்தார் எனத் தெரிய வரும்போது அந்த வைரம் மேல் உள்ள ஆசையே போய்விடுகிறது. “செசில் ரோட்ஸ்” என்ற ஒரு பாதிரியாரின் மகனான இவர் படிப்பு முடிந்ததும் தென்னாபிரிக்காவில் சரிவில் இருந்த வைர நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி அதை பெரும் நிறுவனமாக மாற்றினார். இதற்காகப் பல கிராம தலைவர்களுடன் பல ஒப்பந்தங்கள் (ஏமாற்று) போட்டார். பல கிராமங்களை அழித்து அங்கிருந்த இடத்தில் வைர சுரங்கங்கள் தோண்டினார். அப்படி உருவாக்கிய ஒரு அமைப்புதான் “டீ பியர்ஸ்”.

இவர்களை மட்டும் இன்றி இரண்டாம் உலகப்போர் நடக்க முக்கியக் காரணமான பேரரசர் வில்லாம், இப்பொழுது புழக்கத்தில் இருக்கும் இனப்படுகொலை என்ற சொற்தொடர் உருவாகக் காரணமான “ஆர்மீனியப் படுகொலை “(ARMENIAN GENOCIDE) நிகழக் காரணமான “ஓட்டோமானிய சுல்தானகமே”, ரத்த ராணி என அழைக்கபட்ட எலிசெபத் பாதோரி, ஒரு நாகரிகத்தையை அழித்த ஸ்பானிய மத குரு டியாகோ டி லாண்டா, சரியில்லாத குழுவில் சேர்ந்து வீணா போன சரியான நபரான ராபர்ட் ஈ லீ எனப் பலரைப் பற்றி இந்த நூல் அருமையாக விளக்குகிறது.

எல்லா வில்லன்களுக்கும் பொதுவான ஒருகுணம் ஆசை. அது மண் அல்லது பொருள் அல்லது அதிகாரம். இதில் ஆரம்பத்தில் நல்லவனாக இருந்து பின்பு வில்லனாக மாறியவர்களும் உண்டு, பெரிய சர்வாதிகாரியை எதிர்த்துப் புரட்சி செய்து மக்கள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்து பின்பு சர்வாதிகாரி ஆனவர்களும் உண்டு.

இந்த வில்லன்கள் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம் ஒன்றுதான். இவர்கள் என்ன வசதியாக வாழ்ந்தாலும் மரணம் என்பது கொடுரமாகத்தான் இருக்கும். சிலருக்கு மட்டும் விதிவிலக்காக வயதான பின் மரணம் வந்துள்ளது. பெரும்பாலும் கொலை அல்லது தண்டனை போன்றவற்றால்தான் மரணம்.

எப்பொழுதும் ஹீரோக்களை மட்டும் படிக்காமல் சில சமயங்களில் வில்லன்களை படிப்பதுகூட சுகம்தான்.

கு. ராஜா

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-514-1.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: