Home » Biography » சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி

சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி

பதிவு செய்த அடுத்த நாளே அதுவும் சே குவாராவின் நினைவு நாளன்றே புத்தகம் கையில் வர வைத்து இன்ப அதிர்ச்சி தந்த திறமையைக் கண்டு வியக்கேன்.

சே குவெராவை பற்றியும் அந்த புத்தகத்தை பற்றியும் அன்றைய தினமே என் நண்பர் ஒருவரிடமும் அம்மாவிடமும் கூறினேன்ஒரு சிறிய அறிமுகத்துக்கு பிறகு பிடிபடாததால் “இந்த டீசர்ட்ல பசங்க போட்டுகிட்டு சுத்துவாங்கள?” என்றதும் ஓ அவரா என நண்பனும், “இவரை பத்தி ஸ்கூல் புக்ஸ்லலாம் ஏதும் வந்தது இல்லல அதான் தெரில” என அம்மாவும் சொன்னார்கள். ஒரு புரட்சியாளனை இந்த அளவுக்கு தான் இந்த சமூகமும், கல்வி முறையும் அடையாளபடுத்தி வைத்திருக்கிறது.

சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி, மருதன், கிழக்கு பதிப்பகம், ரூ 130, பக்கம் 160.

புத்தகத்தில், “இவன் பிறக்கும் போதே இந்த பிரபஞ்சம் ஆகச் சிறந்த போராளியை அடையாளம் கண்டது போல் ஆக்ரோசம் கொண்டிருந்தது, அலைகள் ஓங்கி அடித்தன, மரங்கள் நடுங்கினஇப்படி எல்லாம் தமிழ்ப்பட ஹீரோவுக்கு கொடுக்கிற அளவுக்கு பில்ட் அப்பெல்லாம் தேவைபடாத சாதாரண ஒரு இளைஞனாக, கொஞ்சம் தத்துவார்த்த புத்தகங்களை படித்தும், அனைத்தையும் ரசிக்க பழகிய ஒரு கவித்துவமான மனிதனாகவே அவர் காட்சியளிக்கிறார்.

3 வயதில் ஆஸ்துமாவால் பாதிக்கபட்டிருந்ததால் எந்த ஒரு சூழ்நிலையிலும் அது அவரை முடக்கிபோட்டு விடாததாக அவரது செயல்பாட்டை அவரின் மோட்டார் சைக்கிள் பயணம் முழுவதிலும் காண முடிகிறது.

மருத்துவம் படித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞன் திடீரென லத்தின் அமெரிக்க நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்க ஒரு பயணம் மேற்கொள்ள முடிவெடுக்கிறான்  சம சிந்தனை கொண்ட ஒரு நண்பனை அவர் துணையாகக் கொண்டு மேற்கொண்ட பயணமாக புத்தகம் விரிகிறது. ஆரம்பத்திலேயே இது சே குவேராவின் இளமைக்கால அனுபவம், ஆதலால் அவரை அவரின் இயற்பெயரான எர்னெஸ்ட்டோ எனவே விளிப்போம் எனக் கூறியதால், சே குவேராவின் புரட்சி வாழ்க்கை, போர் அனுபவங்கள், மக்களை ஒருங்கிணைத்த விதம், வெற்றிகள், தோல்விகள், மரணம் என பல எதிர்பார்ப்புகளோடு படிக்கத் தொடங்கிய என்னை ஏமாற்றியதற்காக ஆசிரியரை மன்னித்து விடலாம்.

நிச்சயமாக இது எர்னெஸ்ட்டோவின் பயண அனுபவமே. பயணத்தில் எதிர்கொண்ட நபர்கள், பார்த்த ரம்மியமான இடங்கள் என ஒரு இலக்கியவாதியின் குறிப்பாக இருந்ததே தவிர ஒரு போராளியின் அனுபவமாக இல்லை. மனிதன் ரசனைக்காரன்.

ஆனால் பயணம் ஒரு சொகுசுப் பயணமாக இருக்க வேண்டும் என எர்னெஸ்ட்டோ நினைக்கவில்லை, சாமானியர்களோடு உலவி இருக்கிறார் அவர்களின் துன்பங்களைக் காண்கிறார். அவர் படித்த தத்துவங்களும் இந்த காட்சிகளுமே அவரை தீர்க்கமான விடுதலைப் போராளியாக மாற்ற உதவியிருக்கும் என தோன்றியது.

கம்யுனிஸ்ட் தம்பதிகளின் சந்திப்பும், சசூச்சிகமாட்டா சுரங்கத் தொழிலாளர்கள் சுரண்டபடுவதைக் கண்டதும் எர்னெஸ்ட்டோவை ஆழமாக பாதித்திருக்க வேண்டும்.

மேலும் இத்தகைய ஒரு இலக்கற்றப் பயணத்தை மேற்கொள்ள ஒரு தனித்தன்மையான சிந்தனையும் மன வலிமையையும் அவசியம். ஏனெனில் கடுமையான ஆஸ்துமா பாதிப்போடு அந்த மனிதன் பகலில் அதீத வெயிலும் இரவில் எலும்பை உருக்கும் பனியும் அடிக்கும் பாலைவனத்தை கடக்க முற்படுகிறான் என்றால் ஒன்று அவன் மன நோயாளியாக இருக்க வேண்டும் அல்லது அதீத மனவலிமை கொண்டவனாக இருக்க வேண்டும்.

புத்தகத்தின் ஆசிரியர் முதற்கொண்டு எர்னெஸ்ட்டோவின் இந்த ஏழு நாடுகளை தொட்டுச் சென்ற 18,865 கி.மீ பயண தூரம் கொண்ட, ஒன்பது மாதம் நீடித்த பயணம்தாம் அவரை ஒரு போராளியாக மாற்றியது எனக் கூற இயலவில்லை. ஆனால் அவரைப் பக்குவபடுத்தியிருக்கும் என உறுதியாகக் கூறலாம். ஏனென்றால் இந்தப் பயணத்தை எர்னெஸ்ட்டோ முடித்தபோது அவரின் வயது வெறும் 23.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் பிடல் காஸ்ட்ரோவை சந்திக்கிறார். கியூபப் புரட்சியின் சூத்திரதாரியாகச் செயல்படுகிறார், 1959 புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து வந்த அதிகாரங்களையும், அமைச்சர் பதவியையும் துறந்து மீண்டும் தன் பயணத்தை தொடங்கும்போது பிடலிடம் சே சொன்ன வார்த்தைகள்:

உலகின் மற்ற நாடுகளுக்கு என் எளிய உதவிக்கான முயற்சிகள் தேவைப்படுகின்றனநான் பிரிவதற்கான நேரம் வந்துவிட்டது. இதை நான் மகிழ்ச்சியும், துன்பமும் கலந்த உணர்வோடுதான் செய்கிறேன் என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்று விரும்புகிறேன். எனது பரிசுத்தமான நம்பிக்கைகளையும் எனக்கு பிரியமானவர்களையும் இங்கு விட்டுச் செல்கிறேன். அது என் ஆன்மாவை வேதனைப் படுத்துகிறது.  நீங்கள் கற்றுத்தந்த கொள்கைகளை புரட்சிகர உணர்வை நான் புதிய போர்களங்களுக்கு எடுத்துச் செல்கிறேன். ஏகாதிபத்தியம் எங்கிருந்தாலும் அதை எதிர்க்கச் செல்கிறேன். இதுதான் என் ஆழமான காயங்களை ஆற்றுகிறது.”

தொடர்ந்த பயணம் 39 வயதில் பொலிவியாவில் புரட்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிரிகளால் கொல்லப்படும்போது முடிவுற்றது.

சே வுடன் இணைந்து பயணம் செய்த ஆல்பர்டோ இவ்வாறு கூறுகிறார்:

“இனி வரும் காலங்களில் பல நாடுகளில் ஊழல்வாதிகள் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பார்கள். அத்தகைய சுழலில் சே வின் ஆளுமை தொடர்ந்து வலுவடையும். அவர் மீதான ஈர்ப்பு இன்னமும் அதிகரிக்கும். குறிப்பாக இளைய சமுதாயத்தினரின் விருப்பத்திற்குரிய கதாநாயகராக சே மாறுவார்.

அவர் கூற்று பலித்துக் கொண்டிருகிறது என்றே தோன்றுகிறது.

ஜெகதீஸ் தனபால்

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-788-6.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234


1 Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: