Home » Cinema » இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித் தரப்படும்

இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித் தரப்படும்

நான் BR மகாதேவன் எழுதிய புத்தகத்தை படித்தேன்.அதில் சமீபத்தில் வெளியான வெற்றி படங்களின் விமர்சனத்தை படித்தேன். நந்தலாலா படத்தைப் பற்றிய நூலாசிரியரின் மறுபதிவு நன்றாக இருந்தது. அதிலும் பெற்றோர் இல்லாத அந்த சிறுவன் கழிப்பறை உள்ளே காத்திருந்து பின் போவது மிகவும் வலியுடன் இருந்தது. எப்படிதான் டைரக்டர் அந்த காட்சியைத் தவறவிட்டரோ.

thirakkathai01

அடுத்து, “அங்காடி தெரு “. எத்தனை பெரிய ஆராய்ச்சி, நாடார் சமுகத்தை பற்றியும், அவர்களின் ஊர் வறுமை பற்றியும். அந்த அண்ணாச்சி கடை முதலாளியின் தொழில் சாமர்த்தியம், தன் சாதியினரையே வேலை ஆட்களாக வைப்பது. அந்தக் கடை எந்தளவுக்கு மிடில் கிளாஸ் குடும்பத் தேவையை போக்குகிறது, இது எல்லாமே கண்டிப்பாக படத்தில் இருந்திருந்தால் இந்த படம் வேறு ஒரு உச்சியில் இருக்கும். இந்த படத்தின் விமர்சனம் பற்றியே தனியே ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு ஆசிரியர் நிறைய உழைத்துள்ளார் .

எனக்கு 7-ம் அறிவு ஆய்வு சிரிப்பாகத்தான் இருந்தது. ஏனெனில் அந்த அளவுக்கு கருத்து சொன்னால், அது ஆவணப் படமாகிவிடும். அதேபோல் திரைத்துரையில் இழைக்கப்படும் அநீதி பற்றி யாருமே இவ்வளவு முழுமையாகச் சொல்லவே இல்லை. இங்கே அனைவருமே தொழில் என்பதற்காகச் சில விசயங்களை சமரசம் செய்ய வேண்டிருகிறது. அது களையப்படும் நாள் பக்கத்தில்தான் இருக்கிறது. இந்தப் புத்தகம் எழுதியபிறகு வெளியான ’நான்’, ’மூடர் கூடம்’, ’மௌன குரு’ போன்ற படங்கள் நூலாசிரியரின் ஆய்வுக்கு உட்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த படங்களின் இயக்குனர்கள் ஓரளவுக்கு தமிழ்த் திரையுலகை மாற்ற ஒரு சிறு துரும்பாக உள்ளனர். இயக்குநர்கள் தாங்கள் நினைப்பதுபோல் படம் எடுத்தால் அது வெளிவரவே வராது. “மதுபானக்கடை” படம் போல பல தடைகள் வரும். நூலாசிரியர் சொல்வது எதுவுமே இயக்குநர்களுக்கு தெரியாதது இல்லை. அவர்களுக்கும் தலைமுடி நரைக்கும், கனவுகள் பல இருக்கும், இதெற்கெல்லாம் மேலாக நன்றாகப் பசிக்கும். அந்தப் பசி எதாவது சாப்பிடு என்றுதான் சொல்லுமே தவிர சரவணபவன் புல் மீல்ஸ்க்கு பணம் சேரும்வரை காத்திருக்கச் சொல்லாது. முதலில் இவர்கள் சக மனிதரை நேசிக்குமாறு , எதிர் பாலினத்திற்கு உரிய மரியாதை தருமாறு படம் எடுக்கக் கற்றுக்கொள்ளட்டும். எப்படி பெண்களை ஆபாசமான உடையில் காட்ட தோன்றுகிறது? ஒரு தவறு முதல்முறை செய்யும் போதுமட்டுமே உறுத்தும் என்பது உண்மை போலும்.

– அரவிந்த்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: